ப்ரித்வி உடன் மோதும் அமலாபால்!

இந்தவாரம் வெள்ளிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புடன் வரவிருக்கும் இரண்டு மலையாள படங்கள் ப்ரித்வி நடிப்பில் ‘பிக்கெட் 43’ மற்றும் அமலா பால் நிவின் பவுலி நடிப்பில் ‘மிலி’.

பிக்கெட் 43:

சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இயக்குநர் மேஜர் ரவி ராணுவத்தில் பணியாற்றியவர். அவர் எடுக்கும் எல்லா படங்களும் ராணுவம் சார்ந்திருக்கும். அந்த படங்களில் லாஜிக்கும் இருக்கும். மேஜர் ரவியின் அடுத்த படம் “ பிக்கெட் 43”. ப்ரித்வி ராஜ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கிறது. இந்த படத்தில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்களின் இடையேயான நட்புறவை படத்தில் சொல்லியிருக்கிறார். இதுவரை இவர் எடுத்த எல்லா படங்களிலும் இந்தியா - பாகிஸ்தான் சண்டைகளே மையப்படுத்தி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் போர் நடைபெறாத நாட்களில் இரண்டு நாட்டு வீரர்களும் நட்புறவில் இருக்க முடியாதா? அப்படிப்பட்ட மனிதர்களை மையப்படுத்தி படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு, இவரின் ஆஸ்தான ஹீரோவான மோகன்லாலைத் தான் அணுகியிருக்கிறார். யூத் ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று ப்ரித்வி ராஜ் நடிப்பில் தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.

மிலி:

அமலாபால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவரவிருக்கும் படம் ‘மிலி’. மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ட்ராஃபிக்’ படத்தின் இயக்குநர் ராஜேஸ் பிள்ளை தான் இப்படத்தின் இயக்குநர். டைட்டில் ரோலில் நடிக்கும் அமலா பாலை சுற்றியே கதை நகர்த்தப்படுகிறது. ‘மைனா’ தொடர்ந்து இன்று வரை அவருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ஹிட் அடிப்பது அமலாபால் சீக்ரெட்.

இந்தப் படத்தில் அமலாவிற்கு ஜோடியாக, ’நேரம்’ பட நாயகன் நிவின் பவுலி நடிக்கிறார். மேலும் சனுஷா, பூர்ணா உட்பட 22 பெண் கதாபாத்திரங்கள் இப்படத்தில் உள்ளதாம். மேலும் முந்தைய படங்களைப் போல இப்படத்திலும் ஒரு சமுக செய்தி மறைந்திருக்கும் என்கிறார் இயக்குநர் ராஜேஸ் பிள்ளை.

எதிர் பார்க்கப்படும் இரண்டு படங்களுமே ஜனவரி 23ல் வெளியாகவிருக்கிறது. இரண்டில் ஹிட் அடிக்கப்போவது எந்த படம் என்பதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

                                      -பி.எஸ்.முத்து-

Do you like the story?

Please Appreciate the Author by clapping!