டார்லிங் 2ம் பாகம்? | டார்லிங், ஜி.வி.பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (10/02/2015)

கடைசி தொடர்பு:17:27 (10/02/2015)

டார்லிங் 2ம் பாகம்?

சமீப காலமாக பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் , நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ஓரிரு நாட்களில் படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

இந்நிலையில் ’டார்லிங்’ பட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இதற்கான பேச்சுவார்த்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறதாம். விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close