காஞ்சனா -2 - படமுன்னோட்டம் | kanchana -2 - preview

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (16/04/2015)

கடைசி தொடர்பு:15:32 (16/04/2015)

காஞ்சனா -2 - படமுன்னோட்டம்

முனி, காஞ்சனா படங்களை அடுத்து லாரன்ஸ் இயக்கும் அடுத்த படம் 'காஞ்சனா-2’. இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘முனி-3’ பின் ,’காஞ்சனா-2 என மாற்றப்பட்டது. லாரன்ஸ், டாப்ஸி, கோவைசரளா, மனோபாலா, ஸ்ரீமன், மயில் சாமி, நடிப்பில் ராகவ லாரன்சின் கதை, திரைக்கதை , இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள படம். பெல்லம் கொண்ட சுரேஷ் படத்தை தயாரித்துள்ளார். டிவியில் வேலை செய்யும் லாரன்ஸ், ஸ்ரீமன், டாப்சி, மற்றும் மனோபாலா உள்ளிட்ட டீம் ஒரு பாழடைந்த பங்களாவை தேர்வு செய்து நிகழ்ச்சிக்காக செல்கின்றனர்.

 

அங்கே என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதையாக சொல்லப்படுகிறது எனினும் படம் வெளியானால் தான் உண்மையான கதை தெரியவரும். படத்தில் நித்யாமேனன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இந்த ரோலில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் அஞ்சலி. படம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் லாரன்ஸ் பேசுகையில் மிகப்பெரிய வாழ்த்தாக சூப்பர் ஸ்டார் அழைத்து நீ ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் நடித்திருக்கிறாய் என வாழ்த்து தெரிவித்ததாக கூறி மெய்சிலிர்த்தார்.

இப்படத்தின் இசைக்காக முதலில் அனிருத்திடம் பேசப்பட்டு பின் அவரது பிஸி காரணமாக லியோன் ஜேம்ஸ், சத்யா, தமன், மற்றும் அஷ்வமித்ரா என நான்கு புதுமுக இசையமைப்பாளர்கள் இப்படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளனர்.

படத்திற்கு யு/ஏ கொடுத்துள்ளது சென்சார் தரப்பு. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மட்டும் 375 தியேட்டர்களில் நாளை வெளியாகிறது ‘காஞ்சனா-2’. இதுவரை மிகப்பெரிய ஓபனிங்காக 10,000 டிக்கெட்டுகள் இப்போதே புக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close