Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேதாளம் படம் ஏன் பார்க்க வேண்டும்: ஓர் அலசல்!

தல அஜித்தின் 56-வது படமான 'வேதாளம்' அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'வேதாளம்' படத்தை ஏன் பார்க்க வேண்டும், ஓர் அலசல் :

1. தல நடிப்பில் அனிருத் இசையமைக்கும் முதல்படம். படத்தை ஒப்புக் கொண்டதிலிருந்து ‘நாங்க தல ஃபேன் சார். இந்தப் படத்தை தெறிக்கவிடுறோம் சார்’னு சொல்லிட்டே இருந்தவர் அனிருத். இறுதியில் 'ஆளுமா டோலுமா' மற்றும் 'வீர விநாயகா' பாடல்கள் வெளியாகி இந்திப் படங்களை எல்லாம் விட ஐ டியூனில் இந்திய அளவில் நம்பர் 1 என சோனி நிறுவனம் அறிவித்தது. ​

2. காமெடி நடிகர் சூரிக்கும், அஜித்துடன் இது முதல் படம். ‘தல கூட சண்டை போடுறமாதிரியெல்லாம் இருக்கே சார். நான் பண்ணமாட்டேன்’னு ரொம்ப பயந்த அவரை , அஜித் , ‘வாங்க சூரி... அதெல்லாம் ஒண்ணுமில்லை’னு என்கரேஜ் செஞ்சு பண்ணவெச்சார். அது நல்லா ஹெவியா வொர்க்கவுட் ஆகி இருக்கு.

3. வேதாளம் படத்தின் 45 செகண்ட்ஸ் டீஸர் ரிலீஸ் செய்து ஒரு மணி நேரத்திற்குள் யுடியூப்பில் ஒரு லட்சம் லைக்குகள் அள்ளியுள்ளது. இதுவரை 50000 லைக்குகளுடன் டாப் லிஸ்ட்டில் இருந்த ஹாலிவுட் பாடகி டெய்லர் ஸ்விப்டின் பேட் ப்ளட்(Bad Blood) வீடியோவைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் இதனையடுத்து புலி படம் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4. டீசரைப் பார்த்துவிட்டு, இதுதான் கதைனு யூகிக்க முடியாமல் டான், ஹாரர்னு ஆன்லைனில் உலவும் கதைகளுக்கு எதிர்மாறாக நிறைய எமோஷன்ஸ் உள்ள ஃபேமிலி என்டர்டெயினர் என்கிறார் படத்தின் இயக்குனர் சிவா. தல நடிப்பில் ஹிட் அடித்த 'வீரம்' படத்தின் இயக்குநரும் இவர்தான்.

5. இதுவரை இளையதளபதி, தனுஷ்,சிவகார்த்திகேயன் என எல்லா ஹீரோக்களுக்கும் தன் இசையால் ஹிட் கொடுத்துவரும் அனிருத், தல அஜித்திற்கும் ஹிட் கொடுத்துள்ளார்,'ஆளுமா டோலுமா' மற்றும் 'வீர விநாயக' பாடல்கள் தாறுமாறு ரேஞ்சில் பல்ஸை எகிறவைக்கிறது. இவற்றைக் காட்சிகளில் பார்க்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

6.இதுவரை தமிழ் சினிமாக்கள் வெளிவராத போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவாவில் வேதாளம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாக்கள் இங்கே நேரடியாக வெளியானதில்லை. அதேநாளில் அமெரிக்கா, மலேசியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல நாடுகளிலும் வெளியாகிறது.

7. நான்காவது முறையாக உலகநாயகன் படத்துக்குப் போட்டியாக அஜித் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே பவித்ரா, முகவரி, ரெட் ஆகிய படங்கள் முறையே கமலின் நம்மவர், ஹேராம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களுக்கு போட்டியாக ரிலீஸாகி ரீச் கொடுக்காத நிலையில் அஜித்தின் 56-வது படமான வேதாளம் அந்த எண்ணத்தைத் தகர்க்குமா என ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

8. 'ஆரம்பம்' படத்தில் 'டுகாட்டி' மற்றும் 'என்னை அறிந்தால்' படத்தில் 'ராயல் என்பீல்ட்' ரக பைக்குகளுடன் சீறிப்பாய்ந்தவர், வேதாளம் படத்தில்'ஹார்லி டாவிட்சன்'  பைக்குடன் வரும் அஜித்,  பைக் பிரியர்களுக்கு விருந்து வைக்க உள்ளார். தெறிக்கவிடலாமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமா என்பது தீபாவளி அன்று தெரிந்துவிடும் என்பதால் கண்டிப்பாக வேதாளம் படம் பார்த்தே ஆகவேண்டும். 

சுசித்ரா சீதாராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?