Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ரெமோ’ படத்தின் கதை என்ன? மினி சினிமா!

ன்பது படங்கள்.. ஓஹோன்னு புகழ் என இருக்கறவர் நம்ம சிவகார்த்திகேயன். பொது இடங்கள்ல அவரோட பணிவான பேச்சுக்கும், படங்கள்ல செம க்ரியேட்டிவா அவர் அடிக்கற கவுன்ட்டர் கமென்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொட்டிட்டே இருக்காங்க. 

அவரோட அடுத்த படம் ‘ரெமோ’. மோஷன் போஸ்டர் ரிலீஸ் விழாவே ‘ஆஹா’ என்று கவனிக்க வைத்தது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நர்ஸ் வேடம். ‘என்னது பெண் வேடத்தில் நடிக்கிறாரா’ என்று பார்த்தால் கூடவே செம ஸ்டைலிஷாகவும் ஒரு ஸ்டில் வெளியானது. உடனே றெக்கை கட்டிக் கொண்டது பரபரப்பு. ஒரு ஹீரோ பெண் வேஷம் போட்டா கதை எப்படி இருக்கும்னு நாலைஞ்சு டெம்ப்ளேட் இருக்குமே... அதுக்குள்ள ஒண்ணுதான் படத்தின் கதைனு கோடம்பாக்க தகவல்.அதோட சேர்த்து  நம் பங்குக்கு கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம். இதோ... மினி சினிமாவே ஓட்டிட்டோம்..!

ஏற்கெனவே வெளிவந்த 'ரஜினி முருகன்' படத்தில்  ஆரம்பத்தில்  அநியாயத்துக்கு பிகு செய்வார் கீர்த்தி சுரேஷ். ஆக.. அதிலிருந்தே லீட் எடுப்போம்!

 ** ** ** ** ** ** ** ** ** ** ** ** 

ஒரு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் மீது சிவகார்த்திகேயன் பார்வை விழுந்து, அது காதலாக மாறுகிறது.

அவரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘ஏம்ப்பா போன படத்துலயும் இதானெ பண்ணின? உடனே ஓ.கே சொல்லிட்டா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் பிகு பண்ணி அப்பறமா ஓகே சொல்லலாம்’ என்று நினைத்தாரோ என்னவோ... கீர்த்தி சுரேஷ் முகம் கொடுப்பதே இல்லை.

 

’அதான் அப்பவே ஜோடி சேர்ந்துட்டோமே’ என்று சிவகார்த்திகேயன் கேட்க, ‘அது போன படம்.. இது வேற படம் டைரக்டர்கூட வேற வேற’ என்று கீர்த்தி சுரேஷ் சொல்லிவிட, ‘என்னம்மா இப்டி பண்றீங்களே’ என்று கடுப்பாகும் சிவகார்த்திகேயன் யோசிக்கிறார். அவரது கபாலத்தில், கன்னி மூலையில் கணநேரத்தில் ஒரு சிந்தனை உதிக்கிறது.

முல்லைப் பூவா வாழ்க்கை மணக்கணும்னா,  ’முள்ளை முள்ளால எடுக்கணும்’ பாணில நர்ஸ் மனசுல இடம் பிடிக்கணும்னா  நர்ஸா மாறித்தான் ஆகணும்னு முடிவெடுக்கறார்.

(இங்கே உங்க மைண்ட் வாய்ஸ்...

‘ஹலோ... முள்ளுக்கும் முல்லைப்பூவுக்கும் நர்ஸுக்கும் என்ன சம்பந்தம்?’

‘ஒரு ஃப்ளோவுல போறப்ப இப்டில்லாம் கேட்கக்கூடாது.. ஆமா!’)

காதல் கைகூட நர்ஸ் வேஷம் போட்டு, அதே மருத்துவமனைல சேருகிற ‘சிவகார்த்திகேயனி’, கீர்த்தியை  ஃப்ரெண்ட் பிடிச்சு, ‘சிவா நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு’ன்னு அவ்வை ஷண்முகி ஃபார்முலாவை ஃபாலோ பண்றார்.

இது ஒரு பக்கம் போய்ட்டிருக்கறப்ப, அந்த மருத்துவமனையில் ஒரு சிறுமி அட்மிட் ஆகறா. உயிருக்குப் போராடும் நிலையில் அட்மிட் ஆன அந்தக் குழந்தைக்கு சிவகார்த்திகேயனைப் பார்த்ததும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. குழந்தைகளுக்கு சிவாவைப் பிடிக்காதா என்ன?

இந்தக் குழந்தைக்கு இன்னும் அதிகமா அப்பா, அம்மாவைவிட சிவா மேல பாசம் வந்துடுது. ஒருநாள் சிவா, லீவு போட்டாகூட தேடற அளவுக்கு பாசம்.

இதுக்கு நடுவுல, கீர்த்திக்கு ’சிவாவேதான் நர்ஸா வேஷம் போட்டிருக்கிறது’ அப்டிங்கற உண்மை தெரிஞ்சுடுது. ஹை ஹீல்ஸ் ஷூ அதிர நடந்து வந்து கோவப்படறாங்க. ‘இல்லம்மா... உன் மேல இருக்கற அதீத காதலுக்காகத்தானே இதப் பண்ணினேன். ப்ளீஸ் மா.. அண்டர்ஸ்டேண்ட் மீ’ என்று கெஞ்சுகிறார் சிவா. கீர்த்தி மனம் இளகவில்லை.

’இந்த நாஆஆஆஆள்... உன் டைரில குறிச்சு வெச்சுக்க. என் காதலை நீ புரிஞ்சுக்கலை.. ஏத்துக்கல.. அதுக்கப்பறமும் நான் இங்க இருக்கறதுல அர்த்தம் இல்லை. அதுனால நான் போறேன். இனி இந்த ஆஸ்பத்திரி பக்கமே வரமாட்டேன்’ன்னு நர்ஸ் வேஷத்தைக் கலைச்சுட்டு வெளியேறிடறார்.

அதுக்கப்பறம், மருத்துவமனைல அட்மிட் ஆகிருந்த அந்தக் குழந்தை மரணத்துடன் போராட, குழந்தைக்காக திரும்ப அங்க போறதா.. இல்லை காதல் சவாலுக்காக போகாம இருக்கறதா’ என்று மனக் குழப்பத்தில் தவிக்கிறார் சிவா.

சிறுமியின் வாழ்க்கையா.. சிவாவின் காதலா.. என்ற முடிவை நோக்கி படம் பயணிக்கிறது!

எப்பூடி? நல்லாருக்கா? இப்படி இருந்தா நல்லாத்தான் இருக்கும். சிவகார்த்திகேயன்ல.. இதை விடவும் நல்லா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.

எதுவானாலும் ரிலீஸ் வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்!

           - சத்யாபதி    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்