Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த மாதம் மிஸ் செய்யக்கூடாத, வேற்றுமொழிப் படங்கள்! #RegionalMovies

பெரிய ஹீரோ, பிரம்மாண்ட இயக்குநர் படங்கள் எப்படியும் நம்மை வந்து சேர்ந்துவிடும் அல்லது சேர்க்கப்படும். ஆனால், பெரிய ஸ்டார்கள் இல்லாத படங்களின் நிலை வேறு. அதுவே வேறு மொழிப் படங்களாக இருந்தால் நிலைமை இன்னும் சிரமம். அதைப் பற்றி நமக்குத் தெரிய வரும் போது தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சில இடங்களில் மட்டுமே வெளியாகியிருக்கலாம், அப்படி ஒரு படம் வந்ததே சினிமாக் காதலர்களுக்கு தெரியாமலே போகக் கூட வாய்ப்பு உண்டு.

#RegionalMovies

இது மாதிரி ஒரு இடைவெளியால், நல்ல  படம் எதையும் தவறவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த #RegionalMovies தொடர். இனி தமிழ் தவிர மற்ற மாநில மொழித் திரைப்படங்களில் பெரிய ஸ்டார்கள் இல்லாமல், எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் வர இருக்கும் தரமான படங்களை அறிமுகம் செய்வது தான் இதன் நோக்கம்... இந்த மாதம் வெளியாக இருக்கும் நான்கு படங்கள் பற்றிய அறிமுகம் கீழே...

வெல்லிபோமாக்கே:

 

 

காதல் படம் தான். ஆனால் கொஞ்சம் இயல்பான காதல் படமாக இருக்கும் என நம்பலாம். காதலில் என்ன புதுசு என இந்தப் படத்தை கடக்க முடியாதபடி நம்பிக்கை அளிக்கிறது படத்தின் டிரெய்லர். இது முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இன்டிபெண்டென்ட் ஃபிலிம். சந்து, ஸ்ருதி, ஸ்வேதா மூவருக்குள் காதலால் பின்னப்பட்ட கதை தான் படம். வழக்கமான தெலுங்கு சினிமா டோனில் இருந்து விதிவிலக்காக வந்து கவனிக்கப்பட்ட படம் 'பெல்லிச்சூப்புலு'. அந்த டைப்பில் இன்னொரு படமாக ‘வெல்லிபோமாக்கே’ இருக்கும் என நம்பலாம். முதலில் இதை 'இலா நா ஜதகா' என்ற பெயரில் எடுத்து முடித்திருந்தார் இயக்குநர் அலி முகமத். தயாரிப்பாளர் தில் ராஜு படத்தின் டிரெய்லர் பார்த்து பிடித்துப் போய் முழுப் படத்தையும் பார்த்து, சில காட்சிகளை இன்னும் சிறப்பாக எடுக்க பணமும் தந்து இப்போது அவரே வெளியிடவும் முன் வந்திருக்கிறார். படம் மார்ச் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

TRAPPED:

 

 

 

அவசர அவசரமாக வெளியில் எங்கோ கிளம்புகிறார் ஹீரோ. ஷூ மாட்டும் போது வீட்டில் அவர் மறந்து வைத்துவிட்டு வந்த செல்போன் ஒலிக்கிறது. மறுபடி அவசர அவசரமாக சாவியை கதவிலேயே வைத்துவிட்டு உள்ளே போய் செல்போனை எடுத்து "தோ கிளம்பீட்டேன் வந்திட்டே இருக்கேன்" என்ற படி போனைக் கட் செய்து சாமி படத்தைக் தொட்டுக் கும்பிட்டு கதவை நோக்கி ஓடும் போது.... 'படார்.' சாவி கதவுக்கு வெளியே ஆடிக் கொண்டிந்த படியே லாக் ஆகிறது. ஹீரோ வீடுக்குள்ளேயே மாட்டிக் கொண்டார். இனி என்ன? என படபடப்போடு நாம் தியேட்டருக்கு செல்லலாம். காரணம் இயக்குநர் விக்ரமாதித்யா மோத்வானி. 'லூட்டெரா' படம் மூலம் அசத்தியர். இன்னொரு காரணம் படத்தின் ஹீரோ ராஜ்குமார் ராவ் ஒவ்வொரு படத்திலும் வேறு வேறு பெர்ஃபாமென்ஸால் அசால்ட்டு பண்ணுபவர். மது மன்டினா உடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருப்பது குயின் படம் இயக்கிய விகாஷ் பால் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்திப் படம் என்பதால் பரவலான இடங்களில் படம் வெளியாகும். மார்ச் 17ம் தேதி படம் வெளிவருகிறது.

அங்கமலே டைரீஸ்:

 

 

லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கும் அடுத்த படம். படத்தில் 86 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள் அத்தனை பேரும் இதற்கு முன் திரையில் பார்த்திராதவர்கள் என ஒரு அறிமுகம் கொடுத்து ஆச்சர்யப்படுத்துகிறார் இயக்குநர். கேரளாவின் சிறிய நகரம் அங்கமலேயின் சில இளைஞர்கள் பற்றிய கதை தான் படம். அவர்களுக்கு சாகச விஷயங்களில் ஈடுபடுவதென்றால் ஆர்வம். பன்றி இறைச்சி விற்கலாம் என்கிற அவர்களின் சீரியஸ் முயற்சியிலும் சில சாகச விஷயங்கள் செய்ய வேண்டிவருகிறது. என்னென்ன சவால்கள், அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பது மீதிக் கதை. இந்தப் படத்தின் மூலம் கதாசிரியர் ஆகியிருக்கிறார் நடிகர் செம்பன் வினோத். படம் ஏற்கெனவே மலையாளத்தில் சென்ற வாரமே வெளியாகிவிட்டது. மார்ச் 17ம் தேதி இங்கு வெளியாவதாக சொல்லப்பட்டு  வருகிறது. ஆனால் அதற்கு முன்னதாக வரும் வெள்ளியன்றே வரவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பட்சி சொல்கிறது.

உர்வி:

 

 

முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய படம் உர்வி. ஸ்ருதிஹரிஹரன், ஸ்ரதா ஸ்ரீநாத், ஸ்வேதா பண்டிட் இந்த மூவர் மெயின் லீட். இப்போதைய சமூக நிலவரப்படி பெண்களுக்கு என்ன இடைஞ்சல், இந்தப் பதற்றங்கள்  நிறைந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நாம் எந்த இடத்தைக் கொடுக்க மறந்துவிட்டோம் என்பது மாதிரியான களத்தில் கதை அமைத்திருப்பதாக சொல்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் வர்மா. கன்னடத்தில் மசாலா தவிர்த்து பெண்களை மையமாக வைத்து ஒரு கதை என்பதே ஸ்பெஷலான ஒன்று. படத்தின் டிரெய்லரும் அந்த நம்பிக்கை அதிகப்படுத்துகிறது. உர்வி என்பதன் அர்த்தம் இருள். இந்த இருளில் என்ன மறைந்திருக்கிறது என்பது படம் வெளியாகும் போதே புலப்படும்.

- பா.ஜான்ஸன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்