Published:Updated:

`சர்வர்' சந்தானம், `கடவுள்' விஜய் சேதுபதி, `லவ்வர்பாய்' விஜய்... இது லவ்வர்ஸ் டே ரிலீஸ்! 

காதலையும் நல்ல காதல் படங்களையும் என்றுமே கொண்டாடத் தவறாதவர்கள் இந்திய ரசிகர்கள். அந்த வகையில் காதலர் தினத்தின் ஸ்பெஷலாக சில படங்கள் எல்லா `வுட்'களிலும் வெளியாகவிருக்கின்றன. என்னென்ன படங்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1
சர்வர் சுந்தரம்:

சர்வர் சுந்தரம்

செஃப்பாக ஆசைப்படும் கதநாயகனின் கலக்கல் காமெடி டிராக்தான் `சர்வர் சுந்தரம்'. காமெடியன் டிராக்கிலிருந்து முற்றிலும் விலகி ஹீரோவாக தன்னுடைய ஸ்டைலில் நடித்து வருகிறார் சந்தானம். அந்த வகையில் `சர்வர் சுந்தரம்' இவருக்கு 8-வது படம். தவிர, ட்ரிபிள் ஆக்‌ஷனில் இவர் நடித்திருக்கும் `டிக்கிலோனா' விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் `பிஸ்கோத்' படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படி 2020-ம் ஆண்டு பல்வேறு படங்களை கையில் வைத்திருக்கும் சந்தானத்திற்கு, வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக `சர்வர் சுந்தரம்' வெளியாகிறது.

2
ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் என இந்த கலர்ஃபுல் ட்ரையோவுக்கு ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். நண்பர்களாகப் பழகிய இருவர் திருமணம் செய்துகொள்ள, தோழியை மனைவியாகப் பார்க்க முடியாமல் ஹீரோ சிக்கித் தவிக்க, அப்போது அசோக் செல்வனின் பால்யகால காதலி என்ட்ரி கொடுக்க... அப்போது நடக்கும் அதகளம்தான் `ஓ மை கடவுளே'. டைட்டிலில் உள்ள அந்தக் கடவுளே கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். வாணி போஜன் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம். போக, ரித்திகா சிங் - அசோக் செல்வன் காம்போவும் இதுவே முதல்முறை. இப்படிப் பல எதிர்பார்ப்போடு வெளியாகவிருக்கிறது `ஓ மை கடவுளே'.

3
நான் சிரித்தால்

நான் சிரித்தால்

தனியிசையில் கலக்கிக்கொண்டிருந்த `ஹிப்ஹாப்' ஆதி, `ஆம்பள' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து `மீசையை முறுக்கு', `நட்பே துணை' ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து இசையமைத்த இவர், 2K கிட்ஸின் ஃபேவரைட் நடிகரானார். அந்த வரிசையில் `நான் சிரித்தால்' படத்தின் மூலம் காதலர் தினத்தன்று களமிறங்குகிறார் ஆதி. `கெக்க பெக்க' எனும் குறும்படத்தின் பெரும்பட வெர்ஷன்தான் `நான் சிரித்தால்'. ஐஷ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் நடித்திருக்க, இயக்குநர் சுந்தர்.சி இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

4
வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

`அர்ஜுன் ரெட்டி' மூலம் டோலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் ரசிகர்களைச் சேர்த்துக்கொண்டார் விஜய் தேவரகொண்டா. அதிலும் இவருக்கு கேர்ள் ஃபேன் பேஸ் அதிகமோ அதிகம். தொடர்ந்து இவர் நடித்த `கீத கோவிந்தம்', `டியர் காம்ரேட்', `டாக்ஸிவாலா' போன்ற படங்களின் மூலம் ரொமான்டிக் ஹீரோ என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டார். இருப்பினும் ஒரே ஸ்டைல் ஆஃப் சினிமாவில் நடித்து வருகிறார் என்ற நெகட்டிவ் ஷேடும் இவர் மேல் விழாமல் இல்லை. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் உருவாகியிருக்கும் `வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்', வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ராஷி கண்ணா, ஐஷ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா, இசபெல்லா லெயிட் போன்றவர்களும் இதில் நடித்திருக்கின்றனர்.

5
ட்ரான்ஸ்

ட்ரான்ஸ்

பகத் பாசில் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு, மல்லுவுட்டைப் போலவே, கோலிவுட்டிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், `கூடே'விற்குப் பிறகு நஸ்ரியாவின் அடுத்த படம், திருமணத்திற்குப் பிறகு திரையில் பகத்துடன் மீண்டும் ஜோடி எனப் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்ப்பார்ப்பு எகிறிக்கொண்டிருக்கிறது. பகத் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படமும் இதுதான். இயக்குநர் கெளதம் மேனனும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

6
Love aaj kal

லவ் ஆஜ் கல்

கார்த்திக் ஆர்யன், சாரா அலிகான் நடித்திருக்கும் படம் `லவ் ஆஜ் கல்'. 2009-ல் சைஃப் அலிகான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த `லவ் ஆஜ் கல்' திரைப்படம், வேற லெவல் வசூலைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சைஃப்பின் மகளான சாரா அலிகான் இப்படத்தின் ரீ-பூட்டில் நடித்திருக்கிறார். பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான இம்தியாஸ் அலி, இதை இயக்கியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு