சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

சினிமாவைத் தாண்டி வெப் சீரிஸ்களின் மோகம் அதிகரித்துவருகிறது. முன்னணி நடிகர்களே இதில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

* ‘ஆதிபுருஷ்’ என்ற பிரமாண்ட படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். ராமாயணத்தை மையமாகவைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசி வருகிறார்களாம். தவிர, பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார். இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பைலிங்குவலாக உருவாகும் இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

* சினிமாவைத் தாண்டி வெப் சீரிஸ்களின் மோகம் அதிகரித்துவருகிறது. முன்னணி நடிகர்களே இதில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள். அந்த வகையில், கவிதாலயா தயாரிப்பில் பரத், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். ‘சுட்ட கதை’ படத்தின் இயக்குநர் சுப்பு இதை இயக்கியிருக்கிறார். இது, அடுத்த மாதம் அமேஸானில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.l நடிகை யாஷிகா ஆனந்துக்கு `ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும்’ என்பது நீண்டநாள் ஆசையாம். அதற்கு முதலில் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார். ஃபிட்டானதும் விதவிதமான காஸ்ட்யூம்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களை ஈ...ர்த்து வருகிறார்.

* சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்குப் படமான ‘புஷ்பா’வில் ஒரு பாடலுக்கு நடனமாட திஷா பதானி, ஷ்ரத்தா கபூர், கியாரா அத்வானி உள்ளிட்ட சில பாலிவுட் நடிகைகளை அணுகியிருக்கிறார்களாம். யார் ஓகே சொன்னாலும் பெத்த சம்பளமாம்!

* நானி நடிப்பில் உருவான தெலுங்கு படமான ‘V’, செப்டம்பர் 5-ம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் அதிதி ராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இது நானியின் 25-வது படம். நானி போன்ற பெரிய ஹீரோக்களின் படம் நேரடியாக ஆன்லைன் தளத்தில் வெளியாகவிருப்பது டோலிவுட் சினிமாவில் இதுவே முதன்முறை.

மிஸ்டர் மியாவ்


* எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘சிலுக்கு’ என்ற படம் உருவாகவிருக்கிறது. அந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள். அதனால், பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இந்தப் படத்தின் மூலம் எடிட்டர் கோபிகிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகிறார்.