* தனது அறைக்குள் வந்த பாம்பை அடித்துக் கொல்லாமல், அசால்ட்டாக டீல் செய்து அதை லாகவமாகப் பிடித்திருக் கிறார், நடிகை கீர்த்தி பாண்டியன். அந்தப் பாம்பை அவர் எப்படிப் பிடித்தார் என்ற வீடியோவைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ‘ஆனாலும் இந்தப் பொண்ணுக்கு செம தில்லுப்பா’ என கமென்ட்டுகளும் லைக்குகளும் குவிந்துவருகின்றன. இவரது நடிப்பில் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் வெளியாக விருக்கிறது. இது மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘96’ படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்த கெளரி கிஷன், ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் ஹீரோயினாக நடித்த ‘அனுக்ரஹீதன் ஆண்டனி’ திரைப்படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது, ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தளத்துக்கான விளம்பரத்தில் சமந்தாவுடன் நடித்திருக்கிறார் கெளரி.

* கிளாமரில் தாராளம் காட்டி கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த நமீதா, திருமணத்துக்குப் பிறகு நடிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க-வில் சேர்ந்த இவர், தற்போது பா.ஜ.க-வில் இணைந்து கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஓடிடி தளங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் நமீதாவைத் தேடிவருகின்றனவாம். ஆனால், இவரோ ‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்’ என்று காத்திருக்கிறாராம்.

* நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. அவ்வப்போது தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். சில நேரங்களில் இன்ஸ்டாகிராமில் அவரைப் பற்றி போலிங் நடத்துவார். அப்படி ஓர் உரையாடலில் ராஷ்மிகாவின் ஃபேவரைட்டான இரண்டு விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவை வேறொன்று மில்லை, குலோப் ஜாமூனும் பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமும்தான். ‘ஒரு குலோப் ஜாமூனே ஜாமூன் கேட்கிறதே... அடடே!!!’ என கமென்ட் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.

* செம உற்சாகத்திலிருக்கிறார் ரைசா. சுந்தர்.சி தயாரிப்பில் நடிக்கவிருப்பதுதான் அதற்குக் காரணமாம். கன்னடத்தில் வெளியான ‘மாயா பஜார் 2016’ படத்தின் தமிழ் ரீமேக்கை சுந்தர்.சி தயாரிக்கவிருக்கிறார். அவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த பத்ரி படத்தை இயக்குகிறார்.