அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமன்னா மாக்டெய்ல்!
பிரீமியம் ஸ்டோரி
News
தமன்னா மாக்டெய்ல்!

ஊரடங்கு காலத்தில் புதிய படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார் ரைசா வில்சன்

* கார்த்தி - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. பத்து நாள்கள் ஷூட்டிங் மீதமிருந்த நிலையில், மழை காரணமாக நின்றிருந்தது. பிறகு, ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்குக்கு கார்த்தி சென்றுவிட்டதால், படத்தின் மீதமுள்ள பகுதி எடுக்கப்படாமலேயே இருந்தது. இடைப்பட்ட காலத்தில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிந்துவிட்டன. கார்த்தியின் கால்ஷீட் கிடைத்தால், மீதமுள்ள காட்சிகளை உடனடியாக முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

தமன்னா மாக்டெய்ல்!
தமன்னா மாக்டெய்ல்!

* ஊரடங்கு காலத்தில் புதிய படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார் ரைசா வில்சன். கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, போதிய பாதுகாப்புடன் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ரைசாவை முதன்மையாகக்கொண்டு த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் ஆரம்பமாகிவிட்டன. `காதலிக்க யாருமில்லை’, ‘ஆலிஸ்’, `FIR’, `ஹேஷ்டேக் லவ்’ உள்ளிட்ட படங்கள் ரைசாவின் கைவசமுள்ளன.

* அட்வெஞ்சர் கேம்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், வொர்க்அவுட் ஆகியவை சம்யுக்தா ஹெக்டேவின் ஃபேவரைட்ஸ். வெவ்வேறுவிதமான போஸ்களில் இன்ஸ்டாகிராமை அலங்கரித்துவரும் இவர், அண்மையில் பெங்களூரிலிருந்து சிக்மகளூருக்கு 300 கி.மீ தூரம் பைக்கிலேயே சென்றிருக்கிறார். அதன் ஸ்னீக் பீக்கைப் பதிவிட்டு, தான் ஒரு ‘பைக் காதலி’ என்பதையும் இன்ஸ்டா உலகுக்குத் தெரிவித்திருக்கிறார்..

* `சபாஷ் மித்து’, `ராஷ்மி ராக்கெட்’, `ஹசீன் தில்ரூபா’ என பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் டாப்ஸிக்குத் தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ மட்டுமே கையிலிருக்கிறது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் டாப்ஸி நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

* பெரிய ஹீரோக்களுடன் நடித்துவந்தாலும், அவ்வப்போது இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் தமன்னா. அப்படி கன்னடத்தில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற ‘லவ் மாக்டெயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சத்யதேவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்துக்கு ‘குர்துண்டா சீதாகாலம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

* `பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பாப்புலராகி, திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்திருப்பவர் லாஸ்லியா. நடிகர் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’, நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படம் என இரண்டு படங்கள் இவர் கைவசம் இருக்கின்றன. தவிர, ஹீரோயின் சென்ட்ரிக் படமொன்றில் நடிக்கவும் பேசிவருகிறார்களாம். ஆனால், அவர் கேட்கும் சம்பளம்தான் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதாம்!