Published:Updated:

"சிவாஜி மாதிரி நடிச்சப்ப பிரபு கேட்ட அந்தக் கேள்வி..."- எம்.எஸ்.பாஸ்கர் ரகளை பேட்டி!

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

ஆனந்த விகடன் யூடியூப் சேனல் நேயர்களுக்கு ஒவ்வொரு வெள்ளியும்... செம ஜாலிடேதான். அவுட் ஆஃப் டாபிக் சரண் & சிபியில் இந்த வாரம் எம்.எஸ்.பாஸ்கர் உரையாடியிருக்கிறார்.

நகைச்சுவை, குணசித்திரம் என பல கதாபாத்திரங்களிலும் கேரக்டராக பிரதிபலித்தவர். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் செம ஸ்கோர் செய்தவர். எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசுவதென்றால் இன்ப நாளிது, இனிய நாளிது எனக் கொண்டாட்டம் வந்து ஒட்டிக்கொள்ளும். 'அவுட் ஆஃப் டாபிக்' ஷோவின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே!

"சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை முடிச்சேன். என்னோட சகோதரிகள் ஹேமமாலினி, தாரா ரெண்டு பேருமே நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க. ஆகையால சினிமாவில் நானும் நடிக்கணும்னு முயற்சி பண்ணினேன். நடிகர் செந்தாமரை அப்பா, என் அக்காவை 'சிட்டுக்குருவி' படத்துல முதன்முதல்ல டப்பிங் பேச வச்சிருப்பாங்க. அதே படத்துல தான் நானும் முதன் முதல்ல டப்பிங் பேசினேன். ஒரேடேக்ல பேசி முடிச்சிட்டேன். அப்புறமா இது ஒரு தொழிலா மாறும், நான் முழு நேர டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாவேன்னு நான் நினைக்கல. இப்பவரைக்கும் 1,500 படங்கள்கிட்ட டப்பிங் பேசியிருப்பேன்.''

விவேக், எம்.எஸ்.பாஸ்கர்
விவேக், எம்.எஸ்.பாஸ்கர்

உங்க மேனரிசம்கள்ல ரஜினியோட சாயல் தெரியுதே?

ரஜினி அண்ணாவின் மேனரிசம் தெரியலாம். முகத்தோற்றம் ஒரே மாதிரி இருக்கலாம். 'குரு என் ஆளு' படத்துல நானும் தம்பி விவேக்கும் 'ஒரு கூடை சன்லைட்' பாட்டுக்கு டான்ஸ் ஆடியிருப்போம். அதை பார்த்துட்டு ரஜினி அண்ணா போன் பண்ணினார். எதிர்முனையில் சிரிச்சுக்கிடே இருந்தாங்க. அந்த காமெடி அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

அந்தப் படத்துல சிவாஜி அப்பா மாதிரி நடிச்சிருப்பேன். அந்தப் படம் பார்த்துட்டு பிரபு அண்ணா கால் பண்ணினார்.

'என்னப்பா அப்பாவை கிண்டல் பண்றீங்களா? நீ அந்த கேரக்டரை ஏற்று நடிச்சிருக்கீயே?'ன்னு கேட்டாங்க.

'அந்த கேரக்டர்ல நான் நடிக்கலைனா வேற ஒருத்தர் நடிச்சிருப்பார். ஓவரா பண்ணியிருப்பாங்க. அதான் கிண்டல் பண்றது. அப்பாவோட வசனங்களை நீங்க பண்ணலீயா?'னு பிரபுவை பார்த்து கேட்டேன்.

உடனே அவர் 'எதுல?'னு கேட்டார். 'பட்ஜெட் பத்மநாபன்' படத்துல நீங்களும் விவேக்கும் பேசியிருக்கீங்கனு சொன்னேன்.

'எங்க அப்பா கேரக்டரை நான் காமெடியா பண்ணியிருக்கேன். அவர் என் தெய்வம். அவரை நான் கிண்டல் பண்ணியிருக்க மாட்டேன்' அப்படின்னும் விளக்கம் சொன்னேன்."

மேலும் சுவாரஸ்யமான கேள்வி - பதில்களுக்குக் கீழ்கண்ட வீடியோ லிங்கை க்ளிக்குங்கள்.

இன்னும் பல சுவாரஸ்யங்கள், ஆச்சர்ய பதில்கள் அடுத்தடுத்த வாரங்களில் காத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு