

''பாடலுக்கு நான் இசையமைச்சதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்யமா நினைக்கிறேன்!'' வாசகர் கேள்விகளுக்கு பதில் அளித்த எம்.எஸ்.வியின் சுவாரஸ்ய பதிவு இதோ...
கே.மணிமாறன், திருப்பூர்-2.
''ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருபெரும் திலகங்களின் படங்களுக்கு இசை அமைத்தவர் நீங்கள். அந்தச் சமயங்களில் எந்தக் குழப்பமும் பிரச்னையும் வந்தது இல்லையா? தர்மசங்கடத் தருணங்களை எப்படிச் சமாளித்தீர்கள்?''
'' 'நீங்க எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் சிவாஜிக்கு வேற மாதிரியும் இசையமைக்கிறீங்க. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஏன் இந்த வித்தியாசம்?’னு பலர் என்கிட்டயே கேட்டு இருக்காங்க. நான் அப்படி அவங்களை எப்பவும் பிரிச்சுப் பார்த்து இசையமைச்சது இல்லை. என்கிட்டே இசையமைக்கச் சொல்லி, பாட்டுக்கான சூழ்நிலையைச் சொல்லி படத்தோட இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் வருவாங்க. சிவாஜி பெரும்பாலும் வரவே மாட்டார். எம்.ஜி.ஆர். வராம இருக்கவே மாட்டார். நான் பொதுவா அந்தந்த ஹீரோ நடிக்கிற பாத்திரம் என்ன... எந்த மாதிரி சூழல்ல பாட்டு வேணும்னு கேட்டு, அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் இசையமைப்பேன். பாடல் கம்போஸிங், பின்னணி இசையமைக்கிற தேதி, நேரங்கள்ல சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்திருக்கலாமே தவிர, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒரே சமயத்துல இசையமைக்கிறதுல எனக்கு எந்தக் குழப்பமோ, தர்மசங்கடமோ வந்தது இல்லை.''
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP