Published:Updated:

முகவரி #VikatanReview 

விகடன் விமர்சனக்குழு

தல' வேற லெவல் ஆக்டிங் பண்ணி கலக்கிருப்பாருல்ல இதுல..!

பிரீமியம் ஸ்டோரி

‘எப்படியும் இந்த வருஷம் நான் மியூஸிக் டைரக்டராகிவிடுவேன்' என்று ஏழெட்டு வருடங்களாக தயாரிப்பாளர்கள் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் அஜீத்... 

'நீ கட்டாயம் ஜெயிப்பே' என்று உற்சாகம் கொடுத்து அஜீத்தை உள்ளங்கையில் வைத்து தாங்கும் பாசமிகு குடும்பம்... 

அஜீத்தின் இசையால் ஈர்க்கப்பட்டு, காதலாகி கசிந்துருகும் ஜோதிகா... 

ஜோதிகாவின் திருமணப் பேச்சு வருகிறபோது, ‘உத்தியோகம் புருஷ லட்சணம்... இசைக்காக அலைவதை விட்டுவிட்டு ஒரு பிஸினலையாவது ஆரம்பியுங்கள்' என்று ஜோதிகாவின் அப்பா அன்பாக அட்வைஸ் செய்ய... இசையா... காதலா என்று முடிவு எடுக்கவேண்டிய கட்டாயத்தில், இசைக்காகக் காதலைத் துறக்கிறார் அஜீத். 

இறுதியில்... தனது பாசமான குடும்பமா, நிறைவேறாத இசை லட்சியமா என்று முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது அஜீத் என்ன செய்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்! 

சினிமாவாய்ப்பு அத்தனை சீக்கிரம் யாருக்கும் கிட்டிவிடுவதில்லை என்பதை நிறுத்தி நிதானித்துச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் துரை. 

வாய்ப்பு கேட்கப்போகும் ஒரு சந்தர்ப்பத்தில் கொட்டும் மழையில் அஜீத் பாடிக்காட்டுவது உணர்ச்சிப் பிழம்பு! ஆனால், கையில் ஒரு ஆர்மோனியப் பெட்டிகூட இல்லாமல் வெறும் 'ஹம்மிங் மூலமாகவே கவர நினைப்பதும், கவிஞராகவே மாறி முழுப் பாடலைப் பாடுவதும் நம்பும்படியாக இல்லையே! 

சான்ஸ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் ஒரு இளைஞனது ஒட்டுமொத்த உணர்வுகளையும் - நினைவுச் சிறகுகள். அழகாகப் பிரதிபலிக்கிறார் அஜீத். 

முகவரி #VikatanReview 
முகவரி #VikatanReview 

அஜீத் அப்செட் ஆகும்போதெல்லாம் ‘தங்கப் புதையல்’ மாதிரி கதைகளைச் சொல்லி ஆறுதல்படுத்தும் அண்ணன் ரகுவரனும், வெற்றி பெறவேண்டி மெளன விரதம் இருந்து பிரார்த்திக்கும் அண்ணி சித்தாராவும் ரொம்ப ஹோம்லி! 

கண்களிலேயே குறும்பு கொப்பளிக்க, எப்போதும் சிரித்த முகத்துடன் ஈர்க்கிறார் ஜோதிகா. 

பி.சி. ஸ்ரீராமின் மென்மையான ஒளிப்பதிவும் பாலகுமாரனின் குடும்பப் பாங்கான கூர்மையான வசனங்களும் துரைக்கு வலது, இடது கரங்கள்! 

கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத படத்துக்குத் துளியும் தேவை இல்லாத அஜீத் - பொன்னம்பலம் சண்டைக்காட்சி யாருடைய வற்புறுத்தலால் சேர்க்கப்பட்டதோ, யாமறியோம்! 

முகவரி #VikatanReview 
முகவரி #VikatanReview 

நகைச்சுவை டிராக், விவேக்கின் கைவண்ணம். சில இடங்களில் பிரகாசம்.... சில இடங்களில் பரிதாபம்!

ஒரு இசை பற்றிய சப்ஜெக்ட் என்பதால் தேவா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், சூழலோடு பொருந்திவரும் ‘நிலவே... ஒ... நிலவே... பாடல் நிஜமாகவே ‘ஹம்’ பண்ண வைக்கிறது!

படம் முடியும் தருணத்தில் ‘சில ஆண்டுகளுக்குப் பிறகு...’ என்று கார்டு போட்டு பழைய காட்சிகளையே மீண்டும் காட்டுகிறார்கள். இதுவும்கூட திரையிட்ட சில நாட்களிலேயே மாற்றப்பட்டிருக்கும் புது முடிவு! -

- விகடன் விமரிசனக் குழு 

(12.03.2000 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு