Published:Updated:

இசையும் மருத்துவமும் இணையும் பயணம்!

அஷ்வத் - பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
அஷ்வத் - பவித்ரா

நான் ஆறாவது படிக்கும் போது அஷ்வத் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். அடுத்தடுத்த வருஷங்கள்ல நாங்க ஸ்கூல் மாறிட்டோம்.

இசையும் மருத்துவமும் இணையும் பயணம்!

நான் ஆறாவது படிக்கும் போது அஷ்வத் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். அடுத்தடுத்த வருஷங்கள்ல நாங்க ஸ்கூல் மாறிட்டோம்.

Published:Updated:
அஷ்வத் - பவித்ரா
பிரீமியம் ஸ்டோரி
அஷ்வத் - பவித்ரா

`ஏன் இந்த கிறக்கம்
தாளாத மயக்கம்...
சில்லென்ற இரவும்
அதில் தொடங்கும் இந்தப் பயணம்...'


- அஷ்வத் சமீபத்தில் இசையமைத்திருக்கும் ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் பாடல் இது. இந்தப் பாடலைப்போலவே அவர் வாழ்க்கையிலும் காதல் இன்னிசையாய் நிறைகிறது.

‘`அவருக்குப் பிடிச்சது அவரோட ஸ்டூடியோ. எனக்குப் பிடிச்சது க்ளினிக். நான் காலையில ஒர்க் ஸ்பாட் போனா, வீடு திரும்ப இரவு மணி ஒன்பதாகிடும். அப்படி ஒரு பிஸி ஷெட்யூல்ல ரெண்டு பேருமே பயணிக்கிறோம். ஆனாலும் கிடைச்ச நேரத்துல ‘நீயும் நானும் போவது காதல் எனும் பாதையில்’னு டூயட் பாடிட்டிருக்கோம்...’’ கண்களில் பட்டர்ஃப்ளை பறக்கவிடுகிறார் பவித்ரா; பல் டாக்டர். அஷ்வத்... இதற்கு முன் ‘நளனும் நந்தினி’யும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ இயக்குநர் நந்தினியின் படங்களுக்கு இசையமைத்தவர்.

இசையும் மருத்துவமும் இணையும் பயணம்!

‘`எங்க ஜோடி உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம். நான் ஸ்கூல் படிக்கறப்ப அஷ்வத் எனக்கு சீனியர். அப்பவும் சரி, இப்பவும் சரி, எங்க ரசனைகளும் வேற வேற. ஆனாலும் எங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்தது இசைதான். சினிமாவுல அவங்களுக்கு ரஜினி பிடிக்கும். எனக்குக் கமல் பிடிக்கும். ஆனா, ரெண்டு பேருக்குமே பொதுவா நடிகர் பிரசாந்தையும் சௌரவ் கங்குலியையும் பிடிக்கும்...’’ கலகலக்கும் பவித்ரா, தொடர்கிறார்.

‘‘நான் ஆறாவது படிக்கும் போது அஷ்வத் பத்தாவது படிச்சிட்டு இருந்தான். அடுத்தடுத்த வருஷங்கள்ல நாங்க ஸ்கூல் மாறிட்டோம். தொடர்பு எல்லைக்கு அப்பால போயிட்டோம். சரியா பதினைஞ்சு வருஷங்களுக்குப் பிறகு ரஹ்மான் மியூசிக் கன்சர்ட்ல அஷ்வத்தைப் பார்த்தேன். கண்ணுல ஃப்ளாஷ் ஆச்சு. ‘அஷ்வத்தண்ணா...’ன்னு ஹைடெசிபல்ல கூப்பிட்டேன். ரொம்பத் தொலைவுல அவன் இருந்ததால, நாங்க பேசிக்க முடியல. அப்புறம் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா ஃபேஸ்புக்ல அவனுக்கு ரிக்வெஸ்ட் அனுப்பினேன். பேச ஆரம்பிச்சோம். நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம். ஆனா, முதல்ல லவ் சொன்னது அவன்தான்’’ என்ற பவித்ராவுக்கு, கண்களாலேயே ஹார்ட்டின் லுக் விட்டபடி தன் இன்ட்ரோவைச் சொல்கிறார் அஷ்வத்.

‘`நான் அண்ணா பல்கலைக்கழகத்துல படிக்கறப்ப அங்கே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் நட்பு கிடைச்சது. குறும்படங்களுக்கு இசையமைச்சேன். அப்படியே ‘நளனும் நந்தினி’யும் வாய்ப்பு வந்துச்சு. இசையமைப்பாளராகிட்டேன். நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ்னால எங்க காதல் எளிதா கைகூடிடுச்சு. அப்ப நான் சினிமாவுல முயற்சி பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னதும், பவித்ரா வீட்டுல சின்னதா தயக்கம் இருந்துச்சு. ஒருத்தருக்கொருத்தர் வீட்டுல பேசி அதை உடைச்சிட்டோம்’’ என்கிறார் பூரித்தபடி.

இசையும் மருத்துவமும் இணையும் பயணம்!

‘`அஷ்வத்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். ஒரு கமிட்மென்ட் கொடுத்தா அதைக் காப்பாத்துவார். அவரோட மியூசிக்கை விமர்சிப்பேன். அதைக் காது கொடுத்துக் கேட்டுப்பார். ஆனா, ஒர்க் விஷயத்துல அவர்தான் முடிவெடுப்பார். பொய் சொல்லமாட்டார். நேர்மையா இருப்பார்...’’ என்ற பவியை, பெருமை பொங்க ரசித்த அஷ்வத்,

‘`என் உலகம் இசையால் நிறைந்தது. ஸ்டூடியோதான் என் சந்தோஷம்’’ என்கிறார்.

``எங்களுக்குள் இருக்கிற புரிதல்கள், விட்டுக் கொடுத்தல்கள்னால வாழ்க்கை இப்பவும் அழகா நகருது. இந்தப் பயணமும் இனிக்குது...’’ என்கிறார்கள் கோரஸாய்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism