சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ரிலீஸ் டென்ஷன்... விஜய் சொன்ன அட்வைஸ்!”

ஜி.வி.பிரகாஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.வி.பிரகாஷ்குமார்

செல்வராகவன் மெசேஜ்ல வாழ்த்துகள் சொன்னார். ‘நன்றி ப்ரோ. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு எதிர்பார்த்தேன். அப்போ கிடைக்கலை’ன்னு ரிப்ளை பண்ணினேன்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டச் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் பங்கேற்றார். மாணவ நிருபர்களின் கேள்விகளும் ஜி.வி-யின் சுவாரஸ்ய பதில்களும் இங்கே...

‘‘தேசிய விருது கிடைத்த தருணம் எப்படி இருந்தது?’’

‘‘ஜாலியா இருந்துச்சு. ஏன்னா, விருது அறிவிக்கிறதுக்கு முந்தின நாள் நைட் முழுக்க ஷூட்டிங் இருந்துச்சு. அதிகாலை நாலரை மணிக்கு மேலதான் தூங்கப் போனேன். மறுபடியும் மாலை ஆறு மணிக்கு ஷூட். தூக்கக் கலக்கத்தோடு கார்ல ஸ்பாட்டுக்குப் போயிட்டிருந்தேன். அப்ப சுதாகிட்ட இருந்து போன் வந்ததும், பாதித் தூக்கத்துல பேசினேன். ‘என்ன இப்படிப் பேசுறே... உனக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு. டி.வியை உடனே பாரு'ன்னு சொன்னாங்க. அப்புறம் வீட்டுல என் அப்பா, என் மனைவி யாராலேயும் என்னை ரீச் பண்ண முடியல. அப்படி பிஸியா போன் வந்துட்டே இருந்துச்சு. இப்படி ஒரு மொமன்ட்டை இதுக்கு முன்னாடி அனுபவிச்சதில்லை.

செல்வராகவன் மெசேஜ்ல வாழ்த்துகள் சொன்னார். ‘நன்றி ப்ரோ. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு எதிர்பார்த்தேன். அப்போ கிடைக்கலை’ன்னு ரிப்ளை பண்ணினேன். ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்துக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும்’னு அனுப்பினார்.''

“ரிலீஸ் டென்ஷன்... விஜய் சொன்ன அட்வைஸ்!”

‘‘உங்க இசையை, நடிப்பை உரிமையோடு விமர்சனம் செய்யற திரைப்பிரபலங்கள் யாரெல்லாம்..?’’

‘‘நண்பர்கள் எல்லாருமே கருத்து சொல்வாங்க. தனுஷோடு வொர்க் பண்றப்ப செம ஜாலியா போகும். ‘மச்சான், இப்படிப் பண்ணிக்கலாமா? அப்படிப் பண்ணிக்கலாமா'ன்னு ரொம்பவே இன்வால்மென்ட்டோடு சொல்வார். அதைப் போல வெற்றிமாறன், சுதா கொங்கரா நல்ல விமர்சகர்கள். இவங்க மூணு பேரும் என்ன சொன்னாலும் பாசிட்டிவா எடுத்துக்குவேன்.''

`` ‘தலைவா' படத்துல ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடல்ல விஜய்யுடன் வேலை செஞ்ச அனுபவம் சொல்லுங்க?’’

‘‘அந்தப் பாடல்ல கோவை ஸ்லாங் வரணும்னு ஏ.எல்.விஜய்ண்ணா விரும்பினார். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். என் கரியரில் அவருக்கு முக்கியமான இடம் இருக்கு. நா.முத்துக்குமார் சார் பாடலை எழுதினார். விஜய் சார் அந்தப் பாடலைப் பாடி முடிச்சதும் அவர்கிட்ட ஒரு விஷயம் கேட்டேன். ‘உங்க படங்கள் ரிலீஸ் ஆகற அன்னிக்கு எப்படி இருப்பீங்க? டென்ஷன் இருக்குமா?’ன்னு கேட்டேன். ‘அதெல்லாம் இல்லப்பா. நிறைய படங்கள் பண்ணிட்டதால டென்ஷன் ஆகுறதில்ல. படம் நல்லா இருந்தால் ஓகே. நல்ல வரவேற்பு அமையலைன்னாலும் ஓகேன்னுதான் எடுத்துப்பேன்'னு சொன்னார். எனக்கு அந்த விஷயம் பிடிச்சிருந்தது. என் படம் வெளியானாலும் அன்னிக்குப் பதற்றமில்லாமல் இருக்கணும். ரிலீஸ் டென்ஷனை கூலா ஹேண்டில் பண்ணணும்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன்.''

``கங்கனாவின் ‘எமர்ஜென்ஸி' (இந்திரா காந்தி பயோபிக்) படத்துக்கு இசையமைக்கிறீங்க. அதன் வேலைகள் எப்படிப் போகுது?’’

‘‘கங்கனா பேசும்போதே நடிச்சு அசத்துவாங்க. ஜே.பி.நாராயணன் எழுதிய கவிதையை ஒரு பாடலாக்கணும்னு சொன்னாங்க. அந்தக் கவிதையை அவங்க பவர்ஃபுல்லா எடுத்துச் சொன்னதும், அதுலேர்ந்து இன்ஸ்பயர் ஆகி, பாடல் உருவாக்கினேன். அவங்களோட ஒர்க் பண்ணினது வித்தியாசமான அனுபவம்.''

``பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து, அதுவும் ஹிட் அடிக்குது. அப்படி நீங்க ரீமிக்ஸ் பண்ண விரும்பும் பாடல்?’’

‘‘ரீமிக்ஸ்ல எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா, அந்தப் பாடல்களை அப்போதைய காலகட்டத்தினர் கொண்டாடுவாங்க. நாம ரீமிக்ஸ் பண்றப்ப ஒப்பீடு செஞ்சு. ‘அது போல இல்லையே. ஒரிஜினலை ஏன் கெடுக்குறீங்க'ன்னு சொல்வாங்க. அதனால ரீமிக்ஸ் பக்கம் போகாமல் இருக்கறதுதான் நல்லது.''

``அடுத்து நீங்க இசையமைக்கிற ‘கேப்டன் மில்லர்' ஒரு பீரியட் படம். எவ்வளவு சவாலா இருக்கு?’’

‘‘அதை ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு அப்படியே ஒரு பேரலல்னு சொல்லுவேன். அது பீரியட் படம் மட்டுமல்ல, ஃபேன்டஸி படமும்கூட. ‘ஆயிரத்தில் ஒருவன்'ல இருந்து அப்படியே வேற மாதிரி அணுகலாம்னு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். ‘வாடிவாச’லும் பீரியட் படம். சுதா கொங்கரா இயக்குறதும் அப்படித்தான். அந்தப் படங்களுக்கான வேலைகள் செய்ய ஆர்வமா இருக்கேன்.”

``இசையமைப்பாளர், பாடகர், நடிகர் தாண்டி படம் இயக்கணும்னு ஆசையிருக்கா?’’

‘‘படம் இயக்கணும்னா ஏழெட்டு மாசம் இதை மட்டும் யோசிச்சு வேலை செய்யணும். அதுக்கான நேரம் இப்போ இல்லை. ஆறேழு வருடங்கள் கழிச்சு நடக்கலாம், பார்ப்போம்.’’

“ரிலீஸ் டென்ஷன்... விஜய் சொன்ன அட்வைஸ்!”

``யாருடைய இசையில நடிக்க ஆசை?’’

‘‘இளையராஜா சார், ரஹ்மான் சார் இவங்க ரெண்டு பேருடைய இசையில நடிக்க ஆசைப்பட்டேன். ரெண்டுமே நடந்திடுச்சு. சமீபமா யுவன் சாரைப் பார்த்தேன். ‘உங்க மியூசிக்ல ஒரு நல்ல லவ் ஸ்டோரில நடிக்கணும். நீங்களே கதை கேட்டுச் சொல்லுங்க'ன்னு கேட்டேன். அவர் இசையில பாடணும், நடிக்கணும்.’’

``வெற்றிமாறன் இயக்கத்துல நடிக்க ஆசைப்பட்டிருக்கீங்களா?’’

‘‘ஒருமுறை அவர் எனக்கொரு கதை சொன்னார். செம்மயான பீரியட் கதை. அதைப் பண்ணலாம்னு பேசி வேலைகளும் ஆரம்பமாச்சு. கடைசி நேரத்துல தயாரிப்புத் தரப்புல சொதப்பல்கள். இல்லைன்னா, அது நடந்திருக்கும். வெற்றிகிட்ட இப்படியொரு படமான்னு நினைச்சிருப்பீங்க.’’

``நீங்க தமிழக அரசியலை கவனிக்கிறீங்களா?’’

‘‘கண்டிப்பா! தமிழக அரசியல் மட்டுமல்லாமல் நம்மள சுத்தி என்ன நடக்குது, உலகத்துல என்ன நடக்குதுன்னு எல்லாம் கவனிக்கணும். குரல் கொடுக்க வேண்டிய விஷயங்களுக்குக் கொடுக்கணும்.’’

``பா.இரஞ்சித் இயக்கத்துல உங்க மியூசிக்ல வரப் போற படம் பற்றி?’’

‘‘அது பீரியட் அட்வெஞ்சர் படம். என்னன்னு தெரியல, நிறைய பீரியட் படமாவே வருது. பேன்டஸி எலிமென்ட்ஸ் நிறைய இருக்கும். இன்டர்நேஷனல் ரைட்டிங் இருக்குற படம். இரஞ்சித் படங்கள் எல்லாருக்கும் பிடிக்கும். அவர் இசையை அணுகுற முறை எனக்குப் பிடிக்கும். அவர்கூட வொர்க் பண்றது நல்லாருக்கு.’’