Published:Updated:

"பழைய மாருதி 800 ல பயணிச்ச சேது அண்ணா..." - மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

சந்தோஷ் நாராயணன்

மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் ரெண்டு பேருக்கும் கால் பண்ணி இந்த படத்தைப் பத்தி பேசுனேன்.

"பழைய மாருதி 800 ல பயணிச்ச சேது அண்ணா..." - மனம் திறக்கும் சந்தோஷ் நாராயணன்!

மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் ரெண்டு பேருக்கும் கால் பண்ணி இந்த படத்தைப் பத்தி பேசுனேன்.

Published:Updated:
சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர். தனது வெரைட்டியான பாடல்கள், பின்னணி இசையின் வழியே தனக்கென தனியிடத்தைப் பிடித்தவர். அவர், தமிழ் சினிமாவில் இசையமைக்கத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. `மகான்', `கடைசி விவசாயி' என சமீபத்தில் இசையமைக்கும் படங்கள் குறித்தும் அவரிடம் பேசியதிலிருந்து...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

" `கடைசி விவசாயி' கதை கேட்கும்போது எப்படி இருந்தது?"

"படத்தை எனக்கு தியேட்டர்ல ஸ்க்ரீன் பண்ணி காமிச்சாங்க. படத்த பாத்துட்டு நான் ஸ்டன் (stun) ஆகிட்டேன். அந்தப் படம் எனக்கு மூணு நாளைக்கு தாக்கத்தை ஏற்படுத்துச்சு. மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் ரெண்டு பேருக்கும் கால் பண்ணி இந்த படத்தைப் பத்தி பேசுனேன். இந்த படம் ஒரு 'க்ளோபல் பென்ச் மார்க்காக' இருக்கும்னு நினைக்கிறேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

" திரைப்படத்தின் இசைக்கு என்னென விஷயங்கள் எல்லாம் புதுசா கொன்டு வரணும்னு நினைச்சிங்க?"

Santhosh Narayanan
Santhosh Narayanan

"மியூசிக்காக உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணினோம்,டிஸ்கஷன்ல மணிகன்டன் சார் ஒரு குருவாக ஆனாரு. நிறையா விஷயஙள் சொல்லி கொடுத்தாரு, `எஞ்சாய் எஞ்சாமி' னு ஒரு மிகப் பெரிய கிஃப்ட் கொடுத்தாரு, `எஞ்சாய் எஞ்சாமி' பாடல் அவரோட ஐடியாதான்."

"விஜய் சேதுபதி அவர்களோட ஆரம்பத்துல இருந்து ட்ராவெல் பண்றீங்க. அவரோட வளர்ச்சி பத்தி சொல்லுங்க. அவரோட ஸ்கிரின் ப்ரெசன்ஸ் ( screen presence ) பத்தி சொல்லுங்க?"

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

"சேது அண்ணா மாறவே இல்ல. அப்படியே இருக்காரு. அவருக்கு ஃபினான்சியல் ஆக பலமும், மக்கள் ஆதரவாகவும் பெருகியிருக்கு. அள்ளிக் கொடுப்பாரு. அப்போ 100 ரூபா வச்சுருந்தா 95 ரூபாவ கொடுத்துட்டு 5 ரூபாய்க்கு சாப்பிடுவாரு. இப்போ அது கோடில மாறியிருக்கு. அவரோட நடிப்ப, நம்ம சேது அண்ணானு ரசிப்பேன். பழைய மாருதி 800 ல சுத்திட்டு இருப்பாரு. அதே சேது அண்ணா அப்படியே இருக்காரு!"

"மணிகண்டன் கூட முதல் தடவ வொர்க் பண்றீங்க, எப்படி இருந்தது சார் அந்த எக்ஸ்பீரியன்ஸ்..."

'கடைசி விவசாயி' படத்தில் மணிகண்டன்
'கடைசி விவசாயி' படத்தில் மணிகண்டன்

"பயங்கரமாக இருந்தது. கடைசி விவசாயி பண்றதுக்கு நான் பயிற்சி எடுத்துகிறதுக்காகத்தான் நான் பண்ண முதல் மூணு படம்னு சொன்னாரு. நான் மணிகண்டன் ஐ மீட் பண்ணி, அவர்கிட்ட விஷயங்கள் கத்துகிறதுக்காக தான் 10 வருசமா வொர்க் பண்ணேனு நினைக்கிறேன். ஹி இஸ் அ மாஸ்டர் (he is a master)"

"மணிகண்டன் எந்த மாதிரியான மியூசிக் எதிர்பார்பாரு?"

"மணிகண்டன் அவரோடைய ஆர்ட் பார்ம் ஒட டூல் -ஆ என்னை மாத்துவாரு. மாரியும் இதே மாதிரி தான். அவங்க நம்மகிட்ட சொல்லும்போது, நம்ம ஒரு பாட்டு நினைச்சிருப்போம், அதே பாடல் அவருக்கும் தோணும். இந்த படத்துல 'என்னைக்கோ ஏர் புடிச்சானே' பாடலுக்காக நான்கு மணிநேரம் பேசுனாரு, அவரோட சிந்தனைகளை விதைப்பாரு"

"மகான் படம் எப்படி வந்திருக்கு..."

மகான் போஸ்டர்
மகான் போஸ்டர்
twitter

"மகான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!,ரெண்டு பெயரும் பயங்கரமா நடிச்சுருக்காங்க,அவுங்க ரெண்டு பெயரையும் மீட் பண்ணதுல ரொம்ப சந்தோஷம்,மகான் கார்த்திக் சுப்புராஜ் னுடைய ஸ்டிராங் ஸ்டேட்மென்ட் ஆக இருக்கும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism