Published:Updated:

“எனக்குக் கல்யாணமாக யேசுதாஸ்தான் காரணம்!”

மனைவி மகனுடன் சிற்பி
பிரீமியம் ஸ்டோரி
மனைவி மகனுடன் சிற்பி

அப்பா மியூசிக் துறையைச் சார்ந்தவங்க என்பதால் எனக்கு ஷூட்டிங் ஸ்பார்ட் அனுபவம் கிடையாது. ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கிடைச்சது

“எனக்குக் கல்யாணமாக யேசுதாஸ்தான் காரணம்!”

அப்பா மியூசிக் துறையைச் சார்ந்தவங்க என்பதால் எனக்கு ஷூட்டிங் ஸ்பார்ட் அனுபவம் கிடையாது. ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கிடைச்சது

Published:Updated:
மனைவி மகனுடன் சிற்பி
பிரீமியம் ஸ்டோரி
மனைவி மகனுடன் சிற்பி

‘`பாடகர் ஆகப்போறேன் என்கிற எண்ணத்தோடுதான் சென்னைக்கு வந்தேன். எதிர்பாராத விதமா இசை என் வாழ்க்கை ஆகிடுச்சு!’’ என்கிறார் சிற்பி. 90களில் பிரபலமான பல பாடல்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். ‘பள்ளிப்பருவத்திலே’ என்கிற படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகராக அடி எடுத்து வைத்திருக்கும் அவரின் மகன் நந்தன் ராமையும், அவரின் மனைவி சசிகலாவையும் நம்மிடம் அறிமுகப்படுத்தினார்.

‘‘எனக்கும், சசிக்கும் திருமணம் ஆனதுக்கு முக்கிய காரணமே யேசுதாஸ் சார்தான்! அவருக்கு என் மேல தனிப் பாசம் எப்பவும் உண்டு. ஏவிஎம் சரவணன் சார்கிட்டலாம் எனக்காக சிபாரிசு பண்ணியிருக்கார். ரொம்ப நல்ல மனிதர். அவரும், எழுத்தாளர் நீரஜாவும் நண்பர்கள். ஒருநாள் நீரஜாவிடம், ‘நீங்க மதுரை தானே... இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல... பொண்ணு பார்த்துக் கல்யாணம் பண்ணி வைங்க!’ன்னு சொன்னார். அவர் எனக்காகப் பார்த்த பொண்ணுதான் என் மனைவி சசிகலா’’ என்றதும் அந்த நாள் நினைவுகளை மீட்டெடுத்துப் பேசத் தொடங்கினார் சசிகலா.

“எனக்குக் கல்யாணமாக யேசுதாஸ்தான் காரணம்!”

‘‘எனக்கு மூன்று அக்கா... ஒரு அண்ணன். பெரிய குடும்பம்! இவர் சினிமாக்காரர்னு சொன்னதும் ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் இருந்துச்சு. ஆனாலும், எப்படியோ வீட்டில் சம்மதம் சொன்னாங்க. திருமணம் உறுதியானதும் என் போட்டோ மட்டும் அவர்கிட்ட கொடுத்தாங்க. நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாகத்தான் பேசவே செய்தோம்’’ என்று பழைய நினைவுகளின் எச்சமாய் அவர் முகத்தில் வெட்கம் படர, புன்னகைத்தபடி சிற்பி தொடர்ந்தார்.

‘‘எங்கள் திருமணத்திற்கு விக்ரமன், ஆர்.பி.செளத்ரி, அறிவுமதி போன்ற சினிமாத் துறை சார்ந்த பலர் வந்திருந்தாங்க. எங்களுக்குத் திருமணம் முடிந்த சமயம்தான் எனக்குப் பட வாய்ப்புகள் அதிகமா வந்துட்டிருந்துச்சு. அந்தச் சமயம் ரொம்ப பிஸியா ஓடிட்டிருப்பேன். இவங்க அழகா குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. அப்போதெல்லாம் பாட்டுக்காக டியூன் போடும்போது டேப்பில் அதை ரெக்கார்டு பண்ணி வைப்பேன். டைரக்டர் கேட்குறதுக்கு முன்னாடி என் இசையை இவங்கதான் கேட்பாங்க. என்னுடைய பெஸ்ட் விமர்சகர் இவங்கதான். பாட்டைக் கேட்டுட்டு அவங்களுக்கு என்ன தோணுதோ அதை வெளிப்படையா சொல்லிடுவாங்க. நாட்டாமை படத்தில் வரும் ‘கொட்ட பாக்கும்’ பாட்டைக் கேட்டவுடன் இது செமையா ரீச் ஆகும்னு சொன்னாங்க... அதே மாதிரி நடந்துச்சு!’’ என்று சொல்ல இடையில் நுழைகிறார் மகன் நந்தன் ராம்.

“எனக்குக் கல்யாணமாக யேசுதாஸ்தான் காரணம்!”

``அப்பாவும் அம்மாவும் வேற லெவல் ஜோடி. ரெண்டு பேரும் அப்படிச் சண்டை போடுவாங்க கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா இவங்களா சண்டை போட்டதுன்னு நாமளே குழம்பிப் போகிற அளவுக்குப் பண்ணிடுவாங்க’’ என்றவாறு நந்தன் ராம் பேசத் தொடங்கினார்.

‘‘அப்பாவைப் பார்க்க சினிமா சார்ந்த பலரும் வீட்டுக்கு வருவாங்க. எல்லாரும் குட்டி ஹீரோன்னுதான் என்னைக் கூப்பிடுவாங்க. அப்பவே நடிக்கணும் என்பது மனசுல பதிவாகிடுச்சு. சினிமாவிலிருந்து வந்த காசுலதான் நான் வளர்ந்திருக்கேன். அதனால, நிச்சயம் சினிமாவில்தான் வேலை பார்க்கணும்னு முடிவெடுத்தேன். ‘கோடம்பாக்கம்’ ஜெகன் அண்ணன்தான் நான் நடிக்கணும்னு முதல் முயற்சியை ஆரம்பிச்சது. அவர்தான் என்னை ஆக்டிங் கிளாஸ் சேர்த்து விட்டார்.

அப்பா மியூசிக் துறையைச் சார்ந்தவங்க என்பதால் எனக்கு ஷூட்டிங் ஸ்பார்ட் அனுபவம் கிடையாது. ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் கதாநாயகனா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். படம் பண்ணினா பொறுமையா நல்ல படங்கள் பண்ணலாம்னு காத்திருந்தேன். அப்போதான் வசந்த பாலன் சார் படத்துக்கு ஆடிஷன் கூப்டாங்க. சேரியில் உள்ள ஒரு பையன் கதாபாத்திரம் என்பதால் நான் கொஞ்சம் கலரா இருக்கேன்னு `அந்தக் கேரக்டருக்கு நீ செட்டாவியான்னு தெரியலை... ஆனா, உன் கண்ணு நல்லா இருக்கு’ன்னு வசந்த பாலன் சார் சொல்லி அனுப்பிட்டார். பிறகு என்னைத் தேர்ந்தெடுத்து கண்ணகி நகர் பகுதிக்கு அனுப்பி வச்சார். அங்கே போய்ப் பார்த்து அந்த மக்களுடன் பழகி கேரக்டரைப் புரிஞ்சுகிட்டேன். அப்படித்தான் ஜெயில் படத்தில் ‘ராக்கி’ என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சேன். ‘பசங்க’ பாண்டிராஜ் சார் படம் பார்த்துட்டு ‘சூப்பரா பண்ணுன’ன்னு சொன்னார். பலரும் ‘எதார்த்தமா நடிச்சிருக்கே’ன்னு பாராட்டினாங்க. அந்தப் பாராட்டு இன்னும் கவனமா நல்ல கதைக்களத்தைத் தேர்வு பண்ணணும் என்கிற பொறுப்பைக் கொடுத்திருக்கு. நடிகரோட பையனுக்குக் கிடைக்கிறது இசையமைப்பாளரோட பையனுக்குக் கிடைக்குதான்னு எனக்குத் தெரியல. ஆனா, இதுவரை அப்பாகிட்ட நான் எதையுமே எதிர்பார்த்தது இல்ல. அப்பாவும் எனக்காக கதையைக்கூட தேர்வு செய்து கொடுத்தது இல்ல!’’ என்றவரின் தோள்மீது தன் கரங்களை வைத்துத் தட்டிக் கொடுத்தவாறு சிற்பி தொடர்ந்தார்.

``இது அவனுடைய கரியர். அவனுக்கு நான் முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கேன். அதே மாதிரி, பலரும் நீங்க உங்க பையனுக்கு மியூசிக் போடுவீங்களான்னு கேட்குறாங்க. அதுவும் வேண்டாம்னு இருக்கேன். அது ரெண்டு பேருடைய சுதந்திரத்தையும் பாதிக்கும். இப்போதைக்கு அந்த எண்ணம் எனக்கு இல்லைன்னு கேட்குறவங்ககிட்ட சொல்லுவேன். ஆனா, இவன் `கிராமத்துக் கதைக்களத்தில் நான் நடிக்கும்போது நீங்க நிச்சயம் எனக்காக இசையமைக்கணும்’னு சொல்லியிருக்கான். இத்தனை வருஷம் ஓடிட்டே இருந்துட்டேன். இப்பதான் என் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஆரம்பிச்சிருக்கேன். இனி, அவங்களுக்காக வாழணும்... அவ்வளவுதான்!’’ என்றவரின் கரத்தைப் பற்றிக்கொண்டார் சசிகலா.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism