விஸ்வரூபம்

விஸ்வரூபம்
இசை: ஷங்கர் எஹ்சான் லாய்
வெளியீடு: சோனி மியூஸிக்
விலை: 99

சுராஜ் ஜெகனின் மெட்டாலிக் குரலில் ஒலிக்கும் 'விஸ்வரூபம்’ டைட்டில் பாடல் கமல் ரசிகர்களுக்கானது. 'யார் என்று புரிகிறதா? இவன் தீ என்று தெரிகிறதா? தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா?’ எனப் பாடும்போது கமல் ஞாபகம் வரத்தான் செய்கிறது. 'இவன் யாருக்கும் அடிமை இல்லை... இவன் யாருக்கும் அரசன் இல்லை!’ - வரிகளில் ஈர்க்கிறார் வைரமுத்து. 'துப்பாக்கி எங்கள் தோளிலே...’ பாடலின் மெட்டைவிட வரிகளில் அனல். 'ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது... டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது!’ என ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பேனா முனை!

கமலின் கதக் ஜதியோடு ஒலிக்கத் துவங்கும், 'உன்னைக் காணாது நான்...’ ஷங்கர் மகாதேவனின் மயக்கும் கஜல் குரலுக்கு மாறி பரவசப்படுத்துகிறது. ஆல்பத்தின் ஒரே மெலடி பாடலான இதைத் திரும்பத் திரும்பக் கேட்கலாம். 'காமக் கலைஞன்... மாயத் திருடன்’ என வரிகளிலும் இள'மை’ தெளித்து இருப்பது கமலேதான்!

'அணு விதைத்த பூமியிலே... அறுவடைக்கும் அணுக்கதிர்தான்...’ பாடல் 'அன்பே சிவம்’ பாடலை ஞாபகப்படுத்தினாலும் இனிமை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!