கேடி பில்லா கில்லாடி ரங்கா | கேடி பில்லா கில்லாடி ரங்கா, விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (26/03/2013)

கடைசி தொடர்பு:14:01 (26/03/2013)

கேடி பில்லா கில்லாடி ரங்கா

இசை: யுவன்ஷங்கர் ராஜா;     வெளியீடு: சோனி மியூஸிக்;   விலை: 99

'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ அப்பா பாசம் பேசும் பாடல். நா.முத்துக்குமாரின், 'நமக்கென வந்த நண்பன் தந்தை’ போன்ற மென்வருடல் வரிகளை அம்பாரி ஊர்வலமாக ஆடி அசைந்து அழைத்துச் செல்கிறது இசை. வழக்கமாக அதிரடிக்கும் வேல்முருகனின் குரல் 'கொஞ்சும் கிளி பாட வெச்சா...’ பாடலில் நெக்குருகி நெகிழவைக்கிறது. 'சாராயத்தில் ஏது போதை... அந்தப் புள்ள பார்த்தா... சட்டுனு மாறும் பாதை...’ எனக் காதல் கிறக்கமும் மயக்கமும் தளும்பி நிரம்புகிறது யுகபாரதி வரிகளில். சிம்பு, யுவன் குரல்களில் 'ஒரு பொறம்போக்கு மொத மொதல்ல சரக்கடிக்கக் கத்துத் தந்தான்’ பாடல்... பக்கா டாஸ்மாக் கீதம். 'லார்ஜுக்கு நோ... ஸ்மாலுக்கு நோ... ஃபாரின் நோ... லோக்கல் நோ’ என்று குடிக்கு எதிராகப் பாடினாலும், பத்து மணி டெட்லைனை நினைவுபடுத்தும் பாடல். தேர்தல் பிரசாரமாக ஒலிக்கும் 'உள்ளதை நான் சொல்லப்போறேன்...’ பாடலின் வாக்குறுதிகள் சுவாரஸ்யம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close