சேட்டை

இசை: எஸ்.எஸ்.தமன்
வெளியீடு: சோனி
விலை: 99

ஆரம்பம் முதல் இறுதி வரை மெல்லிய தாளம், சின்னச் சின்ன வார்த்தைகள்... இதுதான் 'அகலாதே’ பாடல். மதன் கார்க்கியின் 100- வது  பாடல் மிக மென்மையாகக் கடக்கிறது. கானா பாலா குரலில் துள்ளத் துடிக்க வெடிக் கிறது 'நீதாண்டி ஒஸ்தி பொண்ணா?’ பாடல். 'அவளுக்கு ஃபர்ஸ்ட் ஓனர் நானுடா... ஆர்.சி. புக்கைப் பாருடா... இது எஃப்.சி. பண்ண காருடா!’ என்று பாலா வின் கானா முழுக்க 'சேட்டை’ வரிகள். தாமரையின் வருடல் வார்த்தைகளில், 'என் அர்ஜுனா... அர்ஜுனா...’ மெல்லிய மெலடி. 'தரையிலே மீனாய்க் கிடக்கிறேன் நானாய்... நீ எங்கே போனாய்?’ என்று கிறக்க க்ரீட்டிங் கொடுக் கிறது சுசித்ரா குரல். தமிழ் சினிமாவின் காதல் பாடல் எண்ணிக்கையில் ஒன்று சேர்கிறது 'போயும் போயும் இந்தக் காதலுக்குள்ளே’ பாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!