அன்னக்கொடியும் கொடிவீரனும் | அன்னக்கொடியும் கொடிவீரனும், கார்த்திகா, பாரதிராஜா

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (26/03/2013)

கடைசி தொடர்பு:14:03 (26/03/2013)

அன்னக்கொடியும் கொடிவீரனும்

வெளியீடு: சாகா மியூஸிக் : விலை: 99

ஜி.வி.பிரகாஷின் ஆடுகளத்தில் பாரதிராஜாவின் மண்வாசனை! 'என் இனிய தமிழ் மக்களே...’ என ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இனிய இன்ட்ரோ கொடுக்கிறார் பாரதிராஜா.

'ஆவாரங்காட்டுக்குள்ளே...’ பாடலில் வெள்ளாட்டுப் பாலு, ஆடோட்டும் புள்ள, மாராப்பு என்று கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது வைரமுத்து வின் வரிகள். கேட்டுப் பழகிய மெட்டாக இருந்தாலும் 'நரிக ஒறங்க...’ பாடலில் சந்தோஷ், ஹரிஹரன், பூஜா, ஹரிணி சுதாகர் குரல்கள் தாளம் போடவைக்கின்றன. ஏகாதசியின் வரிகளாலும் இசையாலும் காதல் தனிமையின் சோகம் கடத்துகிறது 'அன்னமே அன்னமே...’ பாடல்.

'போறாளே... என்ன விட்டு அன்னக்கொடிதான் போறாளே...’ பாடல் பழக்கவழக்கமான காதல் சோக பேத்தாஸ். 'பொத்தி வெச்ச ஆசத்தான்...’ பாடலில், 'பத்தி விட்ட ஆடுதான் பட்டி வந்து சேர்ந்ததாம்... பட்ட வலியாவுமே இனிக்கிறதே’ என்று அந்தரங்கம் பேசுகிறது அறிவுமதியின் வரிகள். 'கொலவாள எடுங்கடா... குரல்வளைய அறுங்கடா...’ பாடல் கொடி வீரன் சாமிக்கு டெடிகேட்.  கிராமத்து அதிர்வேட்டாக இல்லாமல், தெம்மாங்குத் தென்றலாக ஈர்க்கிறது ஆல்பம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close