எதிர்நீச்சல் | எதிர்நீச்சல், சிவகார்த்திகேயன், தனுஷ், ப்ரியா ஆனந்த், அனிருத்

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (26/03/2013)

கடைசி தொடர்பு:14:04 (26/03/2013)

எதிர்நீச்சல்

இசை: அனிருத் வெளியீடு: சோனி மியூஸிக் விலை: 99

'கொலவெறி’ புகழ் அனிருத்தின் இரண்டாவது படம்.

'போயட்டு தனுஷ்’ எழுதியிருக்கும் 'பூமி என்னைச் சுத்துதே’... செம ஜோக்கு பாட்டு. 'டேமேஜான பீஸு நானு... ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்’ போன்ற சிம்பிள் வரிகளை அதைவிடச் சிம்பிளாகப் பாடியிருக்கிறார் அனிருத். யூ டியூபில் ஐந்து லட்சம் ஹிட்டுகளை அள்ளியிருக்கும் 'யோ யோ ஹனி’ பாடல் கருத்துக் குத்து காக்டெய்ல் மசாலா.

வாழ்க்கை முன்னேற்றக் கருத்துகளை டிஸ்கோ ஹால் அதிரடியுடன் ஒலிக்கவைக்கிறார்கள். ஒரு வரி, கொஞ்சம் இசை என ஒன்றரை நிமிடம் ஒலிக்கும் 'உன் பார்வையில்’ பாடலில் க்யூட் ரிங்டோன் இனிமை. 'சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்லை’ அக்மார்க் தனுஷ் குத்து. 'கீழே மண் இருக்கு... வானத்துல சன் இருக்கு’ என்று தரை டிக்கெட் ரேஞ்சுக்கு இறங்கி ரசிக்கவும் ஆடவும்வைக்கிறது. பேத்தாஸாக ஒலிக்கும் 'வெளிச்சப் பூவே’ பாடலில் 'ஒரு மின்வெட்டு நாளில் மின்சாரம் போல வந்தாயே’ என 'கரன்ட்’ டிரெண்ட் புகுத்தியிருக்கிறார் வாலி. மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல் குரல்கள் வருடல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்