முடிவை மாற்றிக் கொண்ட அஞ்சலி!

கோலிவுட்டில் தற்போது கிளாமர், குடும்ப பாங்கான வேடம் என ஏதாக இருந்தாலும், கதை பிடித்து இருந்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வார் அஞ்சலி.

சில மாதங்களுக்கு முன்பு இனிமேல் வயதான நடிகர்களுடன் நடிப்பதில்லை என தெரிவித்தார். ஆனால் தனது முடிவை அவர் தற்போது தளர்த்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற Bolbachaan படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். அப்படத்தில் வெங்கடேஷிற்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார். அஜய் தேவ்கான் வேடத்தில் வெங்கடேஷ், அபிஷேக் பச்சன் வேடத்தில் ராமும் நடித்து வருகிறார்கள். அசின் நடித்த பாத்திரத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.

அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் வெங்கடேஷ் உடன் இணைந்து சில காட்சிகள் நடித்து இருக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

'Seethamma Vakitlo Sirimalle Chettu' படத்தில் ஏற்கனவே வெங்கடேஷிற்கு ஜோடியாக நடித்து இருப்பதால், பழக்கம் காரணமாக இப்படத்தினையும் ஒப்புக் கொண்டாராம் அஞ்சலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!