வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (03/04/2013)

கடைசி தொடர்பு:17:06 (03/04/2013)

போட்டியே இல்லாத சேட்டை!

ஆர்யா நடிப்பில் 5ம் தேதி வெளியாக இருக்கும் 'சேட்டை' படம், அவர்  நடித்த படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படமாக உள்ளது.

ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, அஞ்சலி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க கண்ணன் இயக்கி இருக்கும் படம் 'சேட்டை'. யு.டிவி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது.

பாஸ் (எ) பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் கூட்டணி இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'DELHI BELLY' படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

5ம் தேதி வெளியாக இருக்கும் 'சேட்டை' படத்துடன் வேறு எந்த ஒரு படமும் போட்டியிடவில்லை. ஆகையால் தனியாக வந்து கல்லா கட்ட தயாராக இருக்கிறது 'சேட்டை'.

'சேட்டை' படத்தினைத் தொடர்ந்து பெரிய நிறுவனங்களின் படங்களில் 'உதயம் NH4' வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படக்குழு இன்னும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்