தலைவா

தலைவா இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்; வெளியீடு: சோனி; விலை: 99

டதட கடகடவென ஆங்கில பாப் போல ஒலித்தாலும் முழுக்கவே தமிழ் வார்த்தைகள் ஒலிக்கும் 'தமிழ் புகழ்’ பாடல் 'தமிழ் பசங்க’. இட்லி-தோசை, மீசை, கூழ், வேட்டி, பாட்டி, கபடி, கண்ணாமூச்சி, ஜல்லிக்கட்டு, சங்கத் தமிழ், வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் எனத் தமிழும் தமிழ் சார்ந்த வரிகளுமாகப் பாடலை அலங்கரித்திருக்கிறார் நா.முத்துக்குமார். 'தளபதி தளபதி’... விஜய் புகழ் பாடும் பாடல். 'நல்லவரு... வல்லவரு’ ஆகியவற்றுக்கு நடுவே 'மானே தேனே பொன்மானே’ போட்டுத் துதிபாடியிருக்கிறார்கள்.  

விஜய் பாடும் 'வாங்கண்ணா... வணக்கங்கண்ணா...’ பாடல்தான் பீக் ஆஃப் தி ஆல்பம். 'விஸ்கி பீர் போதைதான்... மூணே ஹவரில் போகுமடா... ஹஸ்கி வாய்ஸில் பேசுவா... போகாதந்த போதைதான்’ போன்ற காதல் 'ஹேங்க்-ஓவர்’ தத்துப்பித்துவங்களை மப்பு குரலில் குதூகலிக்கும் விஜய், 'நான் உளறலை... உளறலைண்ணா’ என்பதைச் சின்ன உளறலுடன் பாடுமிடம்... க்யூட் மெலடிக்கு ஜோடி சேரும் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவியின் கூட்டணி 'யார் இந்த சாலையோரம்’ பாடல் முழுக்கக் காதல் தூவுகிறது.

'இளைய தளபதி’ ரசிகர்களுக்கானவன் இந்தத் 'தலைவா’!

தலைவா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!