வெளியானது பாண்ட் தீம் பாடல்...ரசிகர்கள் ஏமாற்றம்! | Sam Smith Spectre Bond song splits opinion

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (25/09/2015)

கடைசி தொடர்பு:18:44 (25/09/2015)

வெளியானது பாண்ட் தீம் பாடல்...ரசிகர்கள் ஏமாற்றம்!

 ஒருவழியாக உலக இசைப்பிரியர்களின் எதிர்பார்ப்பான ஸ்பெக்டர் தீம் வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டு வெளியான ஸ்கை ஃபால் படத்தின் தீம் பாடல் ஆஸ்கர் விருதை தட்டிய நிலையில் இன்று வெளியாகியுள்ள ஸ்பெக்டர் தீம் பாடல் பல விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதுவரை இல்லாமல் முதல் முறையாக பாடலில் படத்தின் பெயரே இடம் பெறாமல் வரிகள் எழுதப்பட்டுள்ளது. சாம் ஸ்மித் எழுதி பாடியுள்ள இந்தப் பாடல் பல விமர்சங்களுக்கு ஆளாகியுள்ளது. பெரிய ஏமாற்றம் என ட்விட்டரில் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். மேலும் நம்மூர் பாணியில் இந்தப் பாடலை கேட்டால் ஸ்கை ஃபால் பாடலைப் பாடிய அடெல் இப்படித்தான் விழுந்து விழுந்து சிரிப்பார் என gif இமேஜ்களும் பகிர்ந்து வருகிறார்கள். 

பிரபல பிபிசி மியூசிக் சார்டில் முதலிடத்தை ஸ்பெக்டர் பாடல் தவறவிட்டுள்ளது. இதுவரையில் பாண்ட் தீம் பாடல்கள் இப்படி தவறவிட்டதே இல்லை என்பதுதான் ஆச்சர்யம். மேலும் சாதரண மெலோடி பாடல் போல் இருப்பதாகவும், மேலும் பாண்ட் படத்துக்குரிய சிறப்பு இல்லை எனவும் விமர்சனங்கள் உருவாகியுள்ளன. 

இந்நிலையில் பலரும் பாடல் மைக்கேல் ஜாக்சனின் சிங்கிள் எர்த் பாடலைத் தழுவி எடுக்கப்பட்டது போல் உள்ளது எனவும் கூறியுள்ளனர், எனினும் உலக இசை லிஸ்டில் தற்போது ஜஸ்டின் பீபரின் வாட் டூ யூ மீன் பாடல் முதலிடம் பிடித்துள்ளது மற்றுமொரு கடினமாக பாண்ட் ரசிகர்களுக்கு மாறியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close