அப்படி என்ன ஸ்பெஷல் ‘ ஏய் சண்டக்காரா’ பாடலில்!

இறுதிச்சுற்று பாடல்கள் நேற்று வெளியாகின. நேற்று முன் தினமே இணையதளங்களில் வெளியாகின. எனினும் படத்தின் டிரெய்லரிலேயே ஏய் சண்டக்காரா பாடல் சின்னதாக வந்து போக பாடலுக்கு இளசுகளின் மத்தியில் அதீத எதிர்பார்ப்புகள் உருவாகிவிட்டன.

மாதவன் என்றாலே பெண்களின் மத்தியில் இப்போதும் ஒரு கிரேஸ் என்பதால், பாடலின் கரு ஹீரோயின் ஹீரோவான மாதவனை நினைத்து ஏக்கத்துடன் பாடும் பாடல் என்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பெண்கள் மத்தியில் பிரபலமாகிப்போனது.

 பாடலைப் பாடியிருக்கும் தீ (தீக்‌ஷா)  தைரியமான பெண் தோரணையை குரலிலேயே காட்டிய விதம், பாடலுக்கு மற்றொரு பலம். விவேக்கின் வரிகள் சந்தோஷ் நாராயணன் பொறுமையாக அடித்த அழகான மெட்டுகளை நிறைத்துள்ளன. சரி தமிழில் தான் இந்தப் பாடல் இப்படி எனில் இந்தியிலோ அதே இசை, ஆனால் மோனாலி தாக்கூரின் குரலில் அவ்வளவு மென்மையும் ஏக்கமும் கலந்து ஒரே பாடல் இரண்டு விதமான காதல் உணர்வுகளைக் காட்டுகிறது.

படத்தின் இன்னொரு பாடலான வா மச்சானே பாடல் சுதந்திரமாக கொஞ்சம் எதார்த்த வாழ்க்கை வாழ நினைக்கும் பெண்களின் மனதை அப்படியே காட்டுகிறது. சான் ரோல்டனின் கரகர குரல் பாடலின் ஹைலைட், முக்கியமாக இசையுடன் இணைந்து குரலிலேயே இசை கொடுப்பது ஜாலியான மன நிலையை பாடலில் காட்டும் திறம் எனலாம். எம்.எஸ்.வி ஸ்டைலில் மிக முக்கியமான ஒன்று இந்தப் பாடல்களுக்கு இடையில் வரும் இசையில்  குரல்களை கலக்கச் செய்வதுதான். இது பழமை இசைப் பிரியர்களுக்கு தெரியும்.

மற்ற பாடல்களான போடா போடா, உசுரு நரம்புல மற்றும் மாய விசை பாடல்கள் வழக்கமான சந்தோஷ் நாராயணனின் வகை. ஆல்பத்தின் சிறப்புப் பாடல்கள் வா மச்சானே, மற்றும் ஏய் சண்டக்காரா பாடல்கள் தான் எனலாம்.

ஏய் சண்டக்காரா பாடலைக் கேட்க: 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!