Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘தள்ளிப் போகாதே...’ - சிங்கிள் டிராக் ரிவ்யூ

      சரியாக 6 வருடங்கள் முன் 12 ஜனவரி 2010ல், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ‘ஹோசான்னா’ பாடல், வெளியான நொடியிலிருந்து, இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாய் இருந்தது. அந்த மேஜிக்கை கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை கூட்டணி மீண்டும் இந்த ஜனவரியில் நிகழ்த்தியிருக்கிறது.

     ஆம். ‘அச்சம் என்பது மடைமையடா’ படத்தின் ஒரு சவுண்ட் ட்ராக்கை ‘இந்தாங்க பசங்களா’ என்று ட்விட்டரில் கௌதம் வாசுதேவ் மேனன் தூக்கிப் போட, மெர்சல் வைரலாகியிருக்கிறது பாடல். வருடத்தின் முதல் நாள் சில வரிகளாக டீசரே டீன் டிக்கெட்ஸ் துவங்கி காதல் கிளிகள் வரை பலரின் ரிங்டோன் ஆகியிருக்க, இப்போது அஃபீஷியல் முழுப்பாடல் வெளியாகியிருக்கிறது! பாடல் எப்படி?

    அபர்ணா நாராயணன் ‘ஓவ்வ்.. ஒ ஒ ஓவ்வ்’ என ஆரம்பிக்கும்போதே மனம் சிறகடிக்கிறது. தொடர்ந்து ஒலிக்கிறது, சித் ஸ்ரீராமின் மெஸ்மரைஸிங் குரல். கவிதாயினி தாமரை. காதல் என்றால் இவர் பேனா வானவில்லாய் மாறி வரிகளை, வண்ணங்களாய் இறைக்கும். ‘ஏனோ வானிலை மாறுதே.. மணித்துளி போகுதே..’ என ஆரம்பித்து மெட்டென்ற கட்டுக்குள் எதும் அடங்காத ஏ.ஆர்.ரஹ்மானின் மென் ரசனை மெலடி ரகளையில் வழுக்கிக் கொண்டு போகிறது பாடல். அதுவும், ‘கசையடி போலே.. முதுகின் மேலே.. விழுவதினாலே.. வரிவரிக்கவிதை..!’ – இந்த வரிகளில் ஸ்லோமோஷனில் விழும் பேரரருவியாய் தழுவி இறுக்குகிறது மெட்டு. பாடலின் இறுதியில் கனவிலே தெரிந்தாய் எனத்தொடங்கும் ADKயின் ராப் வரிகள், ஐஸ்க்ரீம் மேல் செர்ரிப்பழம்!

    அதே சமயம், ‘ஒரேடியா சூப்பர்னெல்லாம் சொல்ல முடியாது’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு. அவர்கள் தரப்பு வாதம்: ”தாமரைன்னா புதுசான வார்த்தைகள் இருக்கும். வசீகரா, கலாபக் காதலா, ஓமணப் பெண்ணே.. இப்படி ஒரு ஒற்றை வார்த்தை. இல்லேன்னா, ஒரு சொக்க வைக்கற உவமை வரிகள்ல இருக்கும். ‘அனல் மேலே பனித்துளி’, ’வெள்ளிக் கொலுசு போலே.. அந்த வானம் மினுங்கும் மேல’ – இப்படி சொல்லிட்டே போகலாம். ஆனா, ‘தள்ளிப் போகாதே...’ பாட்டு வார்த்தைகளின் கோர்வையா மட்டுமே இருக்கு!’’ - இதுவும் மறுக்க முடியாத வாதம்தான். ஆனால், ஆல்பத்தின் ஒரு பாடல்தான் இது. மற்ற பாடல்களை கேட்காமல் எப்படி முடிவுக்கு வரமுடியும். ஸோ... ’நாசா’ போல கொஞ்சம் காத்திருக்கலாம். தப்பில்லை!

ரஹ்மான் இசையின் அழகே, பாடலை எவ்வளவுக்கெவ்வளவு கேட்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அது ஈர்க்கும். இந்தப் பாடல் மெட்டுக்குள் அடங்காத பாடல் என்பதால், ’ஏனோ வானிலை மாறுதே’ என்பதை அடுத்து பாட ஆரம்பித்தால் சாதாரண ரசிகன் பாட இயலாத மெட்டாகவே இருக்கிறது. அதனாலேயே சிலர், ‘போங்க பாஸ்.. நான் மனமன மெண்டல் மனதிலேவையே பாடிட்டிருக்கேன். அடுத்தடுத்த சாங்க்ஸ் வரட்டும்’ என்கிறார்கள். எது எப்படியோ, இன்னும் சில காலத்துக்கு இளைஞர்கள் மற்றும் இளைஞர் மனதுக்காரர்களின் வாட்ஸப் ஸ்டேட்டல்...‘தள்ளிப்போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே’-தான்! -

முழுப்பாடல் வரிகள்....-

 
ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரி வரிக்கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள் எனது
கடல் போல பெரிதாக நீ நின்றாய்
சிறுவன் நான்
சிறு அலை மட்டும்தான் பார்க்கிறேன் பார்க்கிறேன்
எரியும் தீயில் என்னை நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடி தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே
கை நீட்டி உன்னை தீண்டவே பார்த்தேன்
ஏன் அதில் தோற்றேன்
ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது
தாமரை வேகுது
தாமரை வேகுது
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே........
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே........
தேகம் தடையில்லை என நானும் ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான் என நீயும் அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....
 
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைதுளியாய் பொழிந்தாய்
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே....
 
பாடலைக் கேட்க: 
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்