சிம்புவைப் பின்பற்றும் புதுநடிகர் | Chillena Oru Mazhai Thuli Cover Video

வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (25/02/2016)

கடைசி தொடர்பு:13:18 (25/02/2016)

சிம்புவைப் பின்பற்றும் புதுநடிகர்

கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் “ அச்சம் என்பது மடமையடா” படத்திற்கான ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியிடப்பட்ட தள்ளிப்போகாதே பாடல் இணையத்தில் வைரல் ஹிட். இப்பாடலுக்கான  கவர் வெர்ஷன் (Cover Version) பாடி வெளியிட்டிருந்தார் சிம்பு.

இவ்வாறு தமிழ் சினிமா பாடலுக்கு கவர் வெர்ஷன் வெளியிடும் கலாச்சாரம் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வாறு இணையத்தில் சிக்கிய நெக்ஸ்ட் கவர்வெர்ஷன் வீடியோ தான் “சில்லென ஒரு மழைத்துளி”. ராஜா ராணி படத்தில் இடம்பெற்ற “சில்லென ஒரு மழைத்துளி” பாடலுக்கான கவர்வெர்ஷனை  நடிகர் யஷ்மித் குழுவினர் புட் சட்னி மியூசிக்குடன் இணைந்து யூடியூப்பில் வெளியிட்டுள்ளனர்.

யாரு இந்த யஷ்மித் என்று தேடிப்பார்த்தால், யூகன் என்ற திகில் படத்தின் ஹீரோ. அடுத்த்தாக, எந்த நேரத்திலும் என்ற திகில் படத்திலும் நடித்துள்ளார். முத்துக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படம் வெளியாகவிருக்கிறது.

நெட்டிசன்களின் அடுத்த டார்கெட், இந்தமாதிரியான கவர்வெர்ஷன் வீடியோக்களை வெளியிடுவதாகத்தான் இருக்கும் போல...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close