'இளையராஜா வெளியிட்ட மருதநாயகம் Single!'- முழுப்பாடல் விவரம்

நேற்று நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற 'இளையராஜா ஆயிரம்' நிகழ்ச்சியில், சில நிகழ்ச்சிக்குளறுபடிகள் இருந்தாலும், கடைசி வரை காத்திருந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள் இளையராஜாவும் கமலஹாசனும். எப்படா வரும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும், ‘மருதநாயகம்’ படத்தின் பாடல் ஒன்றை, மேடையிலேயே அரங்கேற்றினார்கள். இளையராஜா பாடியிருக்கும் அந்தப் பாடலை, மேடையில் ராஜாவோடு கமலும் பாடினார். ரசிகர்களின் கைதட்டலில் காதைப் பிளக்க, இன்னொரு வாட்டி போடலாமா?’ என்றபடி மருதநாயகம் படக்காட்சிகளோடு மீண்டும் ஒளிபரப்பினார்கள்.

அந்தப் பாடல்வரிகள் உங்களுக்காக...

 

தாந்ததன்ன தாந்தன்ன தானா - தன

தாந்தன்ன தாந்தன்ன தாந்தன்ன தானா..

பொறந்தது பனையூரு மண்ணு – மருத

நாயகம் என்பது பேர்களில் ஒண்ணு

வளர்ந்தது பகையோட நின்னு – இங்கு

தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒண்ணு

மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்

மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி

சித்தங்கலங்குது சாமி - இது ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி

(பொறந்தது..)

முப்புறம் எரிச்ச செவனே – இங்கு

எப்புறம் போனாலும் எரிவது என்னே

சாதிக்கோர் சமயம் சொல்வானே – தக்க

சமயத்தில் காக்கும் ஓர் சாதிசொல்வானா

இடப்பாகம் இருந்த நல்லாளை – கயவர்

இடுகாட்டுச் சோறாக்கி உலரவிட்டாரே

கண்ணீரில் நனையாத பூமி யாரும்

கண்ணில் காணத்தகுமோ அது

காணும் காலம் வருமோ

மதம்கொண்டு வந்தது சாதி – இன்றும்

மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி

சித்தங்கலங்குது சாமி - இது

ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி (பொறந்தது)

பாடலை வெளியிட்டாலும், படம் எப்போது வரும் என்று குறிப்பிடவில்லை. ‘வரும்’ என்பது போல பேசினார்கள் கமலும், ராஜாவும். இதனால் மீண்டும் மருதநாயகம் வேலைகள் தொடங்கப்படலாம், விரைவில் திரையில் காணலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

-பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!