Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.ஆர்.ரஹ்மான் - சூர்யா கூட்டணியில் பாடல்கள் ஹிட்டா? #24 இசை விமர்சனம்

 

ஜில்லுன்னு ஒரு காதல், ஆய்த எழுத்து என்று சூர்யா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் அடுத்த படம் 24. அதன் பாடல்களைப் பற்றிய ஒரு அலசல்...

பாடல்:        நான் உன் அருகினிலே தெய்வம் உணருகிறேன்
குரல்கள்:   அரிஜித் சிங் / சின்மயி
வரிகள்:      மதன் கார்க்கி


மெதுவான பூங்காற்றாய் ஆரம்பிக்கிற பாடல். அரிஜித்சிங்கின் மென்மையான குரல் ஆரம்பிக்க, ’உன் முகம் தாண்டி’ என்று அடுத்த வரியில் ஏ.ஆர்.ஆர் ஒரு சின்ன மேஜிக்கில் ஒலிகூட்ட, தொடர்ந்து இணைகிறார் சின்மயி.


இடையிசை முழுதும் வயலின் விளையாட, சரணத்தில் இரண்டு வரிகள் தாண்டி ‘இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை’ எனும் இடத்தில் மெட்டு ஹைபிட்ச்சுக்குப் போய் வருவது ரோலர் கோஸ்டர் அனுபவம். கேட்கக் கேட்கப் பிடிக்கிற பாடல்.

பாடல்:       மெய் நிகர
குரல்கள்:  சித் ஸ்ரீராம் / சனா மொய்துட்டி / ஜோனிடா காந்தி
வரிகள்:      மதன் கார்க்கி


Pick of the Album. சித் ஸ்ரீராம் - ஏஆர்ஆர் கூட்டணி ஏமாற்றியதே இல்லை. ’ஓடாதே தித்திக்காரி   ஓடாதே பொட்டுக்காரி ஓடாதே சிட்டுக்காரி ஓடாதே டிக்டிக்’ என்று டிபிகல் ஏஆர்ஆர் பாணி மேஜிகல் கோரஸ் ஆரம்பிக்க, சித் ஸ்ரீராம் ‘மெய் நிகரா மெல்லிடையே.. பொய் நிகராம் பூங்கொடியே..’ என்று தொடர.. பின்னணியில் அந்தக் கோரஸ் கூடவே வர.. காலர்டோன், ரிங்டோன் ஸ்பெஷலாக உருவாகியுள்ளது இந்தப் பாடல்.


இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம், மதன் கார்க்கியின் வரிகள். ‘புல்லாங்குழலே வெள்ளை வயலே கிட்டார் ஒலியே மிட்டாய் குயிலே ரெக்கை முயலே’ என்று புகுந்து விளையாடியிருக்கிறார்.’பேசும் பனி நீ ஆசைப்பிணி நீ இன்பக்கனி நீ கம்பன் வீட்டுக்கணினி நீ’ - இந்த கணினி நீ’யில் சனாவின் குரலில் இளமை வழிகிறது. ‘எனக்கென்ன ஆனாலும் சிரிப்பதை நிறுத்தாதே’ உட்பட பல வாட்ஸப் ஸ்டேட்டஸ்கள் இப்போதே ரெடி!

                                                            --------------------------------------------------------------

------------------------------------------------------------------

பாடல்:        புன்னகையே
குரல்கள்: ஹரிசரண் சேஷ், சாஷா திரிபாதி
வரிகள்:    வைரமுத்து


கொஞ்சம் தாஜ்மகால், லகான், சங்கமம் பாடல்களையெல்லா ஞாபகப்படுத்துகிற - ஆல்பத்தின் இன்னொமொரு பாடல். இடையிசை, மற்றும் கோரஸ் சிறப்பாக உள்ளது.

பாடல்  :  ஆராரோ
குரல்    :  சக்தி ஸ்ரீ கோபாலன்
வரிகள்:  மதன் கார்க்கி


‘கொல்லையில தென்னை வைத்து’ காதலிக்கு காதலன் பாடும் பாடல் என்றால் இது அதே பாணியில் காதலி, காதலுக்கு பாடும் பாடலாக அமைந்துள்ளது. மெதுவான ஓடைபோல எந்தச் சலனமும் இல்லாமல் கிடார் ஒலி கூடவே இசைக்கப்பட, பாடப்படுகிற பாடல். 

My Twin Brother (Theme Music)
குரல்கள்: ஸ்ரீனிவாச கிருஷ்ணன், ஹ்ருதய் கட்டானி

படத்தின் தீம் ம்யூசிக். ‘ஆயுஷ்மான் பவ’ என்று குரல் கூடவே ஒலிக்க மிரட்டும் இசை தொடர நிச்சயம் படம் பார்க்கும்போது நமக்கு ம்யூசிக் ட்ரீட் நிச்சயம் என்று உறுதிப்படுத்துகிறது.


பாடல்      : காலம் என் காதலி
குரல்கள்: பென்னி தயாள் / சாஷ்வத் சிங் / அபய் ஜோத்புர்கர்
வரிகள்:     வைரமுத்து


சிங்கிள் ட்ராக்கில் ஏற்கனவே வெளியாகி, இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டோம்.

முதல் முறையிலேயே சுண்டி இழுக்கும் மெட்டு, வைரமுத்து வரிகள், ‘ஆற்றல் அரசே வா வா’ என்று கோரஸை பயன்படுத்தியிருக்கிற விதம் என்று கலக்கி விட்டார் ஏஆர்ஆர்.


மொத்தத்தில், நான் உன் அருகினிலே - படமாக்கலில் புதுமை இருந்தால் - முன்பே வா போல ஹிட்டடிகிற பாடல். மெய் நிகர இளைஞர்கள் ஸ்பெஷல். வரிகளில், ‘காலம் என் காதலி’ முதலிடத்தைப் பிடிக்கிறது. ’மெய் நிகர’ பாடல் வரிகளில் பதினாறு அடி பாய்ந்து மதன் கார்க்கி நிற்க, இரண்டடி முன்னால் நின்று, ‘ஆற்றல் அரசே வா’ என்று சிரிக்கிறார் வைரமுத்து.
 

‘24’ படத்தின் பாடல்களுக்கு.... இங்கே க்ளிக்கவும்

.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்