Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ். ஜானகி பாடின 'மம்மி பேரு மாரி' பாட்டு கேட்டிருக்கீங்களா? #HBDSJanaki

எஸ்.ஜானகி

இசையை எல்லாவற்றும் மேலான ஒன்றாக நினைப்பவர்களில் நானும் ஒருவன். தமிழ்த் திரையிசையிலேயே ரசிக்க இன்னும் காலம் போதாது எனும்போது எங்கே மற்றவற்றில் மூழ்கி முத்தெடுக்க. இசை என்பது ஒரு மதமென்றால் அங்கே நிச்சயம் இவர் ஒரு கடவுள். எஸ்.ஜானகி. ‘இனி பாடப்போவதில்லை’ என்று அறிவித்துவிட்டார். சோகம்தான். ஆனால், ‘நான் பாடினதெல்லாம் கேளுங்க மொதல்ல’ என்று அவர் சொன்னாலே ரசித்துக் கேட்க ஆயுள் பத்தாது நமக்கு.  அவரது பிறந்தநாளான இன்று.. அவரின் ஒரு சில பாடல்கள் ...

தும்பி வா தும்பக்குடத்தின் - ஓளங்கள்

 

சங்கத்தில் பாடாத கவிதை - டூயட். அதன் மூலம். இந்தப் பாடல். எங்கெங்கோ பயணித்து மீண்டும் தமிழில் எஸ்.ஜானகி குரலில் கண்ணே கலைமானே என்ற படத்தில் ‘நீர்வீழ்ச்சி தீமூட்டுதே’ என்ற பாடலாக வந்தது. அந்த லிங்க்தான் மேலே.

சிங்கார வேலனே தேவா 

கொஞ்சும் சலங்கை. ‘செந்தூரில் நின்றாடும் தேவா..... ஆஆஆஆஆ’ - ஒரு இடத்தில் தே...........வான்னு சங்கதி.. இன்னொரு இடத்துல தேவா.....-ன்னு சங்கதி. ஒவ்வொரு வரியையும் தனித்தனியா எழுதற அளவு அட்டகாசமான பாட்டு. எஸ்.ஜானகியின் இசை அறிவு இந்தப் பாட்டைக் கேட்டாலே ஓரளவு புரியும்.   

நேத்து ராத்திரி அம்மா

போன பாட்டுக்கு அப்டியே மாற்றான ஜானர். ஆனால் ஏன் இந்தப் பாட்டைக் குறிப்பிடுகிறேன் என்றால் கீழே உள்ள வீடியோவைப் பார்த்தால் தெரியும். 

தூரத்தில் நான் கண்ட உன்முகம் (நிழல்கள்), தாலாட்டும் பூங்காற்று நானல்லவா (கோபுரவாசலிலே) இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் மாதிரி. இதுவும் ஜானகியம்மாவின் ஆலாபனையில்தான் ஆரம்பமாகும். நள்ளிரவில் நான் கண்ணிசைக்க - புல்லாங்குழலுக்கும், ஜானகியின் குரலுக்கும் போட்டியே இருக்கு. ‘ஏக்கம் தீயாக’ பாடும்போது குரலில் ஏக்கம். வாசலில் மன்னா உன் தேர் வர வரிகளில் எதிர்பார்ப்பு. இசை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் பாடல்களில் ஒன்று. இந்த இரண்டு பாடல்களையும் கேட்க வேண்டுமென்றால் இங்கே செல்லுங்கள்

குழந்தைக் குரலில் எஸ்.ஜானகி நிறைய பாடல்கள் பாடியுள்ளார்..  மௌன கீதங்கள் படத்தில் ‘டாடி டாடி ஓ மை டாடி’  ‘பூவே பூவே சின்னப்பூவே’ படத்தில் ‘பாப்பா பாடும் பாட்டைக் கேளு’ , ‘சம்சார சங்கீதம்’ படத்தில் சிம்புவுக்கு இவர் குரல் கொடுத்த ‘ஐ அம் எ லிட்டில் ஸ்டார்’  போன்ற பாடல்களைப் பாடியிருக்கிறார். இன்னொரு பாடல் உண்டு. உதிரிப் பூக்கள் படத்தில் ‘ போடா போடா பொக்க; என்ற பாடல். பாட்டி குரலில். கேட்டுப் பாருங்கள். 1.26 நிமிடத்தில் பாட்டி குரலில் வசனமெல்லாம் பேசி அசத்தி இருப்பார்.  

அழகு மலர் ஆட

ஒரு பெண்ணின் தனிமையை இந்தப் பாடலின் குரலில் உணரலாம்.  ‘விடியாத இரவேதும் கிடையாது என்ற ஊர்சொன்ன வார்த்தைகள் பொய்யானது தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை!’ என்ற வரிகளிலெல்லாம் இவர் கொடுக்கும் உணர்ச்சி.. பாடகிகளுக்குப் பாடம். 

மந்திரப்புன்னகையோ

இப்பொழுதே டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் ஒரு ஐந்தரை, ஆறுக்கு வாக்கிங் போய்க்கொண்டே கேட்டுப் பாருங்கள். அப்படி ஒரு நதியோட்டம் போன்ற பாடல். 

 

கண்ணன் வந்து பாடுகிறான்

பாடலின் வீடியோவையே கொடுத்திருக்கிறேன். ஏனென்றால் பாடல் முழுவதும் ராதிகாவின் உடல்மொழியை கவனியுங்கள். அவ்வளவு உற்சாகமாக இருக்கும். அதுவும்  இரண்டாம் சரணத்தில் ‘வானத்தில் செல்லக் கண்ணன் பாடுவான்’ என்று ஆரம்பிக்கும் இடத்தில் அவரது துள்ளலுக்கு ஏற்பவே குரலும் இருக்கும். அதான் எஸ்.ஜானகி   

இது ஒரு நிலாக்காலம்

டிக் டிக் டிக். மேலே உள்ள பாடலுக்குச் சொன்ன அதே காரணம். துள்ளல்! 

ராஜா மகள் ரோஜா மகள்

பிள்ளை நிலா படப் பாடல். ஜெயச்சந்திரன் குரலில் கேட்டிருப்பீர்கள். இதில் பேபி ஷாலினிக்காக குழந்தை குரலில் பாடியிருப்பார் ஜானகி. ஆனால் சரணத்தில் 1.09-ல் ‘முள்ளோடுதான் கள்ளோடுதான்’ என்று குழந்தையாய்  ஆரம்பித்து டக்கென்று 1.23ல் ‘கட்டில் வர எண்ணமிட்டு; என்று இரண்டு வரி ராதிகாவுக்கான குரலில் பாடி மீண்டும்  1.37ல்   பேபி ஷாலினிக்கான குரலில் பாடுவார். Legend For a Reason! 

மம்மி பேரு மாரி

நீங்கள் இதுவரை இந்தப் பாடலைக் கேட்டதில்லை என்றால் நிச்சயம் கேட்டே ஆகவேண்டிய பாடல். எஸ்.ஜான்கி லிஸ்டில இதை ஏன் சேர்த்தீங்க.. இது ஆண் குரல்தானே’ என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம்.  அதுவும் ‘ஏலுகட்டையில சட்ஜமத்த மெல்லுவேன் வாளப்பளத்தோட கோலிக்கறி தள்ளுவேன்’ வரிகளெல்லாம்.. ப்ச்!  

 ‘மேல இருக்கறது எஸ்.ஜானகிதானா?’ என்று இன்னும் சந்தேகம் இருப்பவர்கள் கீழே உள்ள வீடியோவைப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்! பாட்டி, அம்மா, குழந்தை, அப்பா என்று பலருக்கும் குரல் கொடுத்திருப்பார்!  

 

 

சங்கீதமே என் தெய்வமே

படம்: கோவில்புறா. சரணத்தில் சடுகுடு ஆடும் மெட்டு. ‘அந்தக் கனவுகள் எங்கே// என் ஆசைக் கனவுகள் எங்கே’ என்று பாடும்போது ஏமாற்ற உணர்வும், சோகமும் கலந்து ஒலிக்க வேண்டும். நடித்துவிடலாம். குரலில்? எஸ்.ஜான்கியால் முடியும்! 

 

 

கறவை மாடு 3 காள மாடு ஒண்ணு

 ‘மகளிர் மட்டும்’ படம். எஸ்.ஜானகி என்றாலே என் மனதுக்குள் ஓடும் பாடல். ரோகிணி ஆஃபீஸ் கூட்டும் பொண்ணு. ரேவதி ஹைஃபை பொண்ணு. ஊர்வசி ஐயராத்துப் பொண்ணு. மூன்றுக்கும் மூணுவித குரல் மாடுலேஷன் கொடுத்து அசத்தியிருப்பார். ரேவதிக்கு ‘தூங்கவில்ல நெடு நாளா தென்றல் தாக்கியதே கொடுவாளா’ என்றும் ஊர்வசிக்கு ‘அடிச்சா பாரு கண்ணு அய்யாராத்துப் பொண்ணு; என்று ஆரம்பித்து ‘ஆனாலும் அசடு நீங்கதான் வாங்கோன்னா மடியில் தூங்கத்தான்’ என்று கொண்டு போவார். ரோகிணிக்கோ.. ‘வயச்சுப்பொண்ண மாமா வளச்சிக்கட்டு பாப்போம்’ என்று ஆரம்பித்து ‘அட என் ராசா உன் அளக எண்ணி.. நெடுநாள் ஆச்சு நான் நாஸ்தா பண்ணி’ (வாலி!)  என்று ஒரே பாடலில் மரண மாஸ் காட்டியிருப்பார்! 

இன்னும் நிறைய உண்டு. உங்களுக்குப் பிடித்த எஸ்.ஜானகி பாடல்களை கமெண்டில் சொல்லுங்கள்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்