Published:Updated:

நாய் சேகர் - சினிமா விமர்சனம்

நாய் சேகர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
நாய் சேகர் - சினிமா விமர்சனம்

இது ஃபேண்டஸி படம், அதனால லாஜிக் பார்க்காதீங்க என்கிற டைட்டில்கார்டுடன் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்.

நாய் சேகர் - சினிமா விமர்சனம்

இது ஃபேண்டஸி படம், அதனால லாஜிக் பார்க்காதீங்க என்கிற டைட்டில்கார்டுடன் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்.

Published:Updated:
நாய் சேகர் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
நாய் சேகர் - சினிமா விமர்சனம்

மனிதனும் நாயும் தங்களின் DNA-க்களைக் கூடுமாற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் பேண்டஸி சயின்ஸ் பிக்‌ஷன் படமான நாய் சேகரின் ஒன்லைன்.

ஐ.டி-யில் வேலை பார்க்கும் சதீஷுக்கு நாய் என்றாலே ஒவ்வாமை. ஹீரோயின் பவித்ராவைப் பார்த்ததும் சதீஷுக்கு இன்ஸ்டன்ட் காதல் வந்துவிடுகிறது. அதே தெருவில் வசிக்கும் விஞ்ஞானி ஜார்ஜ் மரியன் மிருகங்களை வைத்து வினோதமாக ஆராய்ச்சி செய்துவருகிறார். இப்படியான ஒரு சூழலில், ஒரு நல்ல நாள் பார்த்து, ஆராய்ச்சியில் இருக்கும் நாய் சதீஷைக் கடித்துவிட; இருவருக்குமான குணநலன்கள் மாறிவிடுகின்றன. நாய்க்குள் இருக்கும் மனிதமும், மனிதனுக்குள் இருக்கும் நாய் குணமும் தங்களுக்குள் போட்டி போடுகின்றன. இதோடு முடித்துக்கொள்ளாமல் நாய்க்கறி வெட்டும் ஹோட்டல்; இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கடத்தும் சிலைகள்; ஐ.டி வேலை அக்கப்போர்கள் என ஏகப்பட்ட கிளைக்கதைகளுடன் சுபம் போட்டு முடிகிறது நாய்சேகர்.

கதையின் நாயகனாக காமெடி நடிகர் சதீஷ். எமோஷனல் காட்சிகளில்கூட சிறப்பாகச் செயல்படும் சதீஷுக்கு, காமெடிதான் கைகூடவில்லை. நாய்க்கான குரலுதவியைச் செய்திருக்கிறார் சிவா. அந்தக் காட்சிகள் ரகளையாக வந்திருக்கின்றன. காமெடி வில்லனாக சங்கர் கணேஷ் & குழு செய்யும் ரகளைகள் சில சிரிப்பு ரகம், பல முறைப்பு ரகம். ஞானசம்பந்தம், இளவரசு, மனோபாலா, மன், லிவிங்ஸ்டன், மாறன், பாலா என நீளும் நடிகர்களின் பட்டியலில் யாருக்கும் பெரிய அளவிலான காட்சிகள் இல்லாமல் கடந்து போகிறார்கள். படத்தின் பெரும்பலம் பின்னணி இசை. பல பழைய படங்களின் பின்னணி இசையை சரியான இடங்களில் ஒலிக்கவைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள். ரஜினியைப் படத்துக்குள் கொண்டுவந்த விதமும் சிறப்பு. அனிருத் இசையில் எடக்கு மடக்கு ஜாலி ரகம்.

நாய் சேகர் - சினிமா விமர்சனம்

இது ஃபேண்டஸி படம், அதனால லாஜிக் பார்க்காதீங்க என்கிற டைட்டில்கார்டுடன் படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார். லாஜிக் பார்க்க விரும்பவில்லை என்றாலும், அரதப் பழைய காமெடிகளை என்ன செய்யலாம் இயக்குநரே. பட்டிமன்றப் பேச்சாளர் ஞானசம்பந்தத்தை வைத்தே, ஒரு மொக்க ஜோக் சொல்ல வைக்கிறார்கள். அதே ரகத்தில் ஒரு டஜன் காமெடிகளைப் படத்தில் வைத்திருக்கிறார்கள். அவற்றைக் கடப்பதிலேயே நமக்குப் பாதி நேரம் போய்விடுகிறது.

தலைப்பைக் கெட்டியாகப் பிடித்த அளவுக்கு, காமெடியையும் கலகலப்பாகப் பிடித்திருந்தால் நாய் சேகர் LOL சொல்லியிருப்பான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism