Published:Updated:

நான் ஒரு ரசிகன் -எம்.எஸ்.விஸ்வநாதன் - 10

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சாரு.

நான் ஒரு ரசிகன் -எம்.எஸ்.விஸ்வநாதன் - 10

எம்.ஜி.ஆர். என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சாரு.

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சென்னை ஒற்றைவால் தியேட்டர்ல நாடகங்கள்ல எம்.ஜி.ஆர். நடிச்சிக்கிட்டிருக்கிறபோதே அவரை எனக்குத் தெரியும்.

பிறகு, ஜுபிடர் பிக்சர்ஸ் ராஜகுமாரி, அபிமன்யூ படங்களில் ஹீரோவாக நடிக்கக் கோவைக்கு எம்.ஜி . ஆர் வந்தபோதுதான் நான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது . அப்போது பார்ப்பதற்கு அவர் ரொம்ப அழகா இருப்பார் . இந்தச் சமயத்தில்தான் எம்.என். நம்பியார், அண்ணா, கலைஞர் எல்லோருமே மாதச் சம்பள காண்ட்ராகட்டுல வேலை செஞ்சுகிட்டிருந்தோம் .

நான் மியூசிக் டிபார்ட்மெண்ட்டில் இருந்ததால , அரோடலை - சறுகுப்பா இருக்கான்று பபையா நாயடுபட்டயம்தா செ மிருக்க எனக்கு இசையில் பொடு . நாட்டம் கொடுக்கற வி

இதற்குப் பிறகு பல வாதங்கள் - சந்தா மிக்கால் முதலாளி எம் பபதுக்க விழவிக டைரக்டர் அம் 50 வெளியார் . அது சில பாடல்கள் கண்கோப்பாக மடத்தும் சோர்க்கவாசல்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எம்.ஜி.ஆருக்கு என்மேல ஒரு கண் விழுந்தது . மகாதேன் . இல்லையேல் மானதோ என்று நது வரப்பட பாப்பாக அந்தப்பக்கான ப வங்களை நியூன் டைரக்டரம் ஒப்பத்தின் பன்வாங்க ட கன்னத்தில் படத்துக்காக பெல்லார் கேனைபார்த்த டேக் போகன் தயாரிப்பாளர் . அவருக்கு தடை பற்றி நல்வாயே கொதான் எம்.ஜி.ஆர் . நடிச்ச மன்னாதி மன்னன் 1960 ) படத்துல ( அச்சம் ன்பது மடமையடால் கண்கள் இரண்டும் பாட்டெல்லாம் படுவி சசே ஆடாத மனமும் உண்டோ என்ற பாட்டுக்கு பத்திரிக் ஜோயா எம் ஆர் டான்ல ஆடி எல்லோரையும் அசத்திட்டாரு . * - நாங்கள் தொடர்ந்து அவர் நடித்த பணத்தோட்டம் , படகோட்டி , ஆ வதும் பெரிய இடத்துப் பெண் தெய்வத்தால் - படங்களுக் , சொவரம் போட்ட பாட்டுகள் அனைத்தும் காட்டும் எம் . ஆர் . மனசுக் குன்னே ஒரு இடத்தைப் பிடிச்சோம் . அவரோ பொட்டுகள் மிட்டானதுக்கு . வேலை பார்க்கும் பரமாதமான பானை கொடுப்பாங்க என்ற படங்களுக்கு எங்களை முழிபிதுங்க வெச்சார் . - இடையில் , எம் . ஜி . ஆர் . தன் படங்களுக்கு - சப்பையா நாயுடு , கே . வி . மகாதேவன்னு போட ஆரம்பிச்சார் . எங்களைப் புறக்கணிக்கற மாதிரி இப்படி இருக்கையில் , திடீர்னு ஒரு நாள் . . . . சாயங்காலம் என் வீட்டைத் தேடி எம். எம் . ஏ . சின்னப்பா தேவர் வந்து - - தார் என்னைவிட வயசுல பெரியவரான அவரே என்னைத் தேடி வந்ததைப் பார்த்துத்திகைச்சுப் போய் , அவர் காலில் விழுந்து ஆசிபெற்றேன் . உள்ளே வந்து உட்கார்ந்த தேவர் பேச ஆரம்பித்தார் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டவனே , அந்தக் காலத்துல நான் இருநூற்றைம்பது ரூபாய் - சம்பளம் வாங்கியபோது நீங்க எழுபத்தஞ்சு ரூபாய் சம்பளம் வாங்கினதை - ஜூபிடர்ல பார்த்திருக்கேன் . . . அவ்வளவு நாள் பழக்கம் இருந்தும் , நீங்க - இதுவரைக்கும் என் படங்களுக்கு மியூஸிக் டைரக்டரா வேலை செய்யலை . . . . - என்னோட தாய்க்குப் பின் தாரம் முதல் படம் ) படத்துக்கே நீங்க மியூஸிக் போட வேண்டியது . ஆனா , மாடர்ன் தியேட்டர்ஸ்ல நீங்க பிஸியா இருந்த தால மாமாவை ( கே . வி . மகாதேவன் ) வெச்சுப் பண்ணிட்டேன் . இப்போ வேட்டைக்காரன் னு ஒரு படம் எடுக்கறேன் . இந்தப் படத்தோட ஹீரோ - எம் . ஜி . ஆர்லேருந்து உஸ்ட்ரிபியூட்டர் வரைக்கும் நீங்க மியூஸிக் போட்டா நல்லாயிருக்கும்னு ஒட்டுமொத்தமா சொல்லிட்டாங்க . . . . . நீங்க எனக்குப் பண்ணித் தரணும் . . . " என்று கேட்டார் .

கொஞ்ச நாட்கள் வேண்டாம்னு நினைச்ச எம் . ஜி . ஆருக்கே எங்கமேல ஈடுபாடு வந்து , ஒரு படம் பண்ணுகிற ஆசையோட தேவரை அனுப்பி வெச்ச தைக் கேட்டதும் அசந்து போயிட்டேன்.

தேவர்கிட்ட நான் , ' வழக்கமா கே . வி . எம் . மாமாதானே உங்களுக்குப் பண்றவரு . . . இதுவரைக்கும் அவர் போட்ட பாட்டுகள் எதுவும் சோடை போகலையே . . அப்படி இருக்கும் போது . என்னை ஏன் தேடி வர்றீங்க ? அதுவுமில்லாம் , சின்ன வயசுல நான் கஷ்டப்பட்ட போது எனக்குச் சட்டை வாங்கிக் கொடுத்து , ரயில் செலவுக்குப் பணமும் கொடுத்து , என் வாழ்க்கைக்கு வழிகாட் டிய குருநாதர் கே . வி . எம் . ! அதனால் அவரேதான் வேட்டைக்காரன் ' படத்துக்கும் பண்ணணும் . நான் செய்யமாட்டேன் . . . " என்று அழுத்தந்திருத்தமா சொன்னேன் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

' இதெல்லாம் சொல்லக்கூடாது . . . . எல் லோரும் நீங்கதான் மியூஸிக் பண்ணணும் கறாங்க . . . இதோ பாருங்க , மடி நிறைய பணம் கொண்டு வந்திருக்கேன் . நீங்க இதை வாங்கிக்கிட்டு ஒப்புக்குங்க . . . . " என்று சொன்னதோடு , மடியில் கட்டிக் கொண்டு வந்திருந்த நோட்டுக்கற்றை களையும் காட்டினார் தேவர் .

இந்த விஷயத்தை அம்மாகிட்ட போய்ச் சொன்னேன் . பளீர் ' னு ஒரு அறை கொடுத்தாங்க .

" நன்றியோடு இருக்கணும்னு உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன் . . . ஒரு காலத்துல உனக்கு வழிகாட்டிய குருநாத ருக்கா துரோகம் பண்ண நினைக்கிறே ? " என்று அம்மாவும் அதையேதான் சொன் னாங்க . இதைக் கேட்ட தேவர் கண்கலங் கியவராக உடனே எம் . ஜி . ஆர் . கிட்ட விஷயத்தைச் சொல்லப் போயிட்டாரு .

விஷயமறிந்த எம் . ஜி . ஆர் . . " எனக்குத் தெரியும் விசு ஒப்புக்கமாட்டார்னு . . . . நன்றி உணர்ச்சி உள்ளவர் அவர் . சரி . . . . சரி . . . இந்த விஷயம் கே . வி . எம் . மாமா கிட்டப் போகாம பார்த்துக்குங்க . . . .

அவரே இசையமைக்கட்டும் . . . " என்று சொல்லியிருக்கிறார் . நான் மறுத்தாலும் , அதுக்காகக் கோவிச்சுக்காம மாமாவுக்கு ஒரு படம் . எனக்கு ஒரு படம்னு மாத்தி மாத்தித் தர ஆரம்பிச்சாரு எம்.ஜி . ஆர் . !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

இந்தியில் ' யாதோங் கி பாரத் னு வழக்கமான மசாலாக்களோட . நல்ல மியூஸிக்கும் சேர்ந்து படம் சக்கைப் போடு போட்டுக்கிட்டிருந்தது . ஆர் . டி . பர்மன் இசையமைச்ச படம் . எல்லாப் பாட்டுகளும் ஹிட் ! இந்தப் படத்தைத் தமிழ்ல ( ' நாளை நமதே ' ) எடுக்கணும்னு ஆசைப்பட்டு கே . எஸ் . சேதுமாதவனும் . அவர் தம்பி மூர்த்தியும் எம் . ஜி . ஆர் . கிட்ட போய்க் கேட்டாங்க .

" இந்தப் படத்துல எனக்கு என்ன வேலை இருக்கு ? இது ஒரு மியூஸிகல் சப்ஜெக்ட்டுதானே ? நான் நடிக்கமாட்டேன் . . . " - எம் . ஜி . ஆர் !

' சார் . . . இந்தப் படம் வடநாட்டுல நல்லா போச்சு . . . அதனால் நீங்க நடிச்சுக் கொடுக்கணும் . . . " - டைரக்டர் சேது மாதவன் .

" பாட்டுகளுக்காகப் போச்சுய்யா அது . . . . வேணும்னா மியூஸிக் டைரக்டரா விஸ்வநாதனைப் போடு . . . . . நான் நடிக்கறேன் ! " என்று சொல்லி , அவங்களை என் கிட்ட அனுப்பிச்சுட்டாரு எம்.ஜி.ஆர் . !

" ஸாரி . . . நான் இதுக்கு மியூஸிக் போட முடியாது . அந்த இந்திப் படத்தை ஏற்கெனவே பார்த்துட்டேன் . . . . . நான் என்னதான் நாயா கத்தினாலும் , பேயா உருண்டாலும் , தரையில் புரண்டு உயிரை விட்டு வேலை செய்தாலும் கூட , இந்திப் படம் மாதிரி மியூஸிக் இல்லேன்னு கம்பேர் ' பண்ணுவாங்க . அதனால் என்னை விட்டுடுங்க . . . . . நான் செய்ய முடியாது . . . " என்று மறுத்தேன் .

இதற்கு நடுவில் , ஜெமினி நிறுவனம் எடுத்து வசூலில் சக்கைப்போடு போட்ட வெற்றிப்படமான அபூர்வ சகோதரர் கள் ' கதையோட கருவையே வெச்சு ' நீரும் நெருப்பும் னு ஒரு படம் . எம் . ஜி . ஆர் . ( டபுள் ரோல் ) பண்ணாரு . . . இந்தப் படத்துக்கு என்னைத்தான் மியூஸிக் டைரக்டரா போட்டாரு . ஒரிஜினல் அபூர்வ சகோதரர்கள் ' படத் துல வந்த பாட்டெல்லாம் ஹிட் ! ஆனா . ' நீரும் நெருப்பும் படத்துல ஒரு பாட்டு கூட பாப்புலர் ஆகலே . . . . இதுக்கு முக்கிய காரணம் . என் இஷ்டத்துக்கு விடலை . பாட்டுகள் நல்லா வரணுமேங்கிற அன்புத் தொல்லையை எம் . ஜி . ஆர் . கொடுத்தார் . அவர் இஷ்டப்படி போட்ட தால ஒரு பாட்டுகூடத் தேறலை . எனக்கு ரொம்பத் தாபம் வந்துடுச்சு .

இந்த அனுபவம் கிடைச்சதனாலே தான் ' யாதோங் கி பாரத் ' பட வாய்ப்பு வந்தபோது மறுத்தேன் . என்னைத் தனியாக விட்டால் நல்ல பாட்டுகளைத் தரமுடியும் ' என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு . அதே சமயம் . எம் . ஜி . ஆர் . ' நாளை நமதே ' படத்துலயும் தலையிடு வாரோனு நினைச்சுத்தான் நான் வேண் டாம்னு சொன்னேன் .

எம் . ஜி . ஆர்கிட்டேயிருந்து எனக்கு போன் .

' ஏன் விசு . இதுமாதிரி அடம்பிடிக்கிறீங்க . . . . . உங்களுக்குப் பணம் பத்த லையா ? நிறைய வாங்கித் தர்றேன் . . . " - எம் . ஜி . ஆர் !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" சார் . . . . அந்த இந்திப் படத்துல பாட்டுகள் எல்லாமே நல்லா இருக்கு . . . . ' நீரும் நெருப்பும் ' படம் மாதிரி , இந்தப் படத்துக்கும் நீங்க என்னைக் குடைஞ் செடுப்பீங்க . . . . நீங்க அதிகம் குடைஞ்சா , ' நீரும் நெருப்பும் மாதிரி ஆயிட்டா நான் என்ன பண்ணுவேன் ? " என்றேன் நான் , தயக்கத்துடன் .

' ஓகோ ! நான் தலையிட்டா அப்படி ஆயிடுமோ ? நான் நல்ல பாட்டே உங்க கிட்ட வாங்கினதில்லையா ? ' ரிக்ஷாக் காரன் ' படத்துல அழகிய தமிழ் மகள் . . . ' பாட்டுப் போடலையா ? ' என்று கேட்டார் எம் . ஜி . ஆர் . !

நான் அதையே கப்புன்னு பிடிச்சுக் கிட்டேன் . ' அப்படி வாங்க சார் . . . இதே அழகிய தமிழ் மகள் ' பாட்டை ஷூட் பண்ண செட்டுக்குப் போறதுக்கு முன்னாடி , என்ன விசு . . . வாயில் நுழை யாத சந்தம் எல்லாம் போட்டிருக்கே . . . ? இந்தப் பாட்டை ரீ - டேக் எடுன்னு சொன்னீங்களா இல்லையா ? அது பாப்புலர் ஆனதுக்குப் பிறகுதானே இப்ப நல்லாயிருக்குன்னு சொல்றீங்க . . . " என்று நான் பதிலுக்குச் சொன்னேன் .

" அதெல்லாம் எனக்குத் தெரியாது . நீ கிளம்பி வா ! இந்தப் படம் நீ பண்றே . . . . " என்று சொல்லி எம் . ஜி . ஆர் . போனை வெச்சுட்டார் .

மறுநாள் அமாவாசை . டைரக்டர் சேதுமாதவன் வீட்டுல் படத்துக்கான ( நாளை நமதே ' ) பூஜை . எம் . ஜி . ஆர் . தன் கையால் எனக்கு ஒரு செக் கொடுத் தார் . காலைத் தொட்டு அந்த செக்கை வாங்கிக்கிட்டேன் . அப்படியே ' இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் ஒரு சேலஞ்சா எடுத்துப் பண்ணணும்னா , நீங்க இதுல தலையிடாம இருந்தா நல்லா இருக்கும் ' னு அவர்கிட்ட மெள்ளச் சொன்னேன் .

இதைக் கேட்ட எம் . ஜி . ஆர் . என்னைப் பார்த்து ஒரு முறை முறைச்சாரு.

(09.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)