அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 12

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர் கண்ணதாசனோடு நான் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்த எம்.எஸ்.வி

நான் மறுத்ததை எம்.ஜி.ஆர். ஒப்புக்கலை. உடனே புறப்பட்டு வரச் சொன்னார். அவரைப் பார்க்கத் தோட்டத்துக்குப் போயிட்டேன்.

என்னைப் பக்கத்துல உட்கார வெச்சுக்கிட்டு "உன்னை எல்லாரும் பாராட்டறத என் காதால கேட்கணும்... அதைக் கேட்டு நான் சந்தோஷப்படுவேன்.... நான் இன்னும் கொஞ்சநாள்தான் உயிரோட இருப்பேன்.. அதனால் நீ ஒப்புக்கணும்.."னு வற்புறுத்தினாரு.

என்னோடகூட டி.எம்.எஸ்., பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ். ஜானகி... எல்லாருக்குமா சேர்த்து விழா எடுக்கணும்னு அவர் ஆசைப்பட்டார். கலைவாணர் அரங்கில் நடந்த அந்தப் பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர். பேச நினைத்ததையெல்லாம் காளிமுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லாம் பேசினாங்க... ஆனா, எம்.ஜி. ஆராலே பேச முடியலை. எம்.ஜி.ஆர். என் பக்கத்துல உட்கார்ந்திருந்தார். ரொம்ப எமோஷனலாகி கண்ணீர் விட்டார்...

'சினிமா இசையமைப்பாளர் யூனியன் நலநிதி'க்காக கச்சேரிகள் நடத்த உதவவேண்டி நான், கே.வி.எம். அண்ணா, இளைய ராஜா, கங்கை அமரன், கே. ராஜா ராம் ( அமைச்சர் ) எல்லாருமா முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனோம். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரம். ராஜீவ் காந்தி தலைமையில் நேரு சிலையைத் திறந்து வெச்சு ரெண்டு நாள் கழிச்சுனு நினைக்கறேன்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நாங்க போனது சர்ப்ரைஸ் விசிட்... இருந்தாலும், எங்களைப் பார்க்கக் கீழே இறங்கி வந்தார். ஜம்முனு டிரஸ் பண்ணிக்கிட்டு ஓர் இளை ஞர் மாதிரி தகதகனு ஜொலிச்சார். ஒவ்வொருத்தரையா குசலம் ஏற்பாடு நிகழ்ச்சியை இன்ஸ்ட்ரக்ஷணப்பிச்சிட்டு விசாரிச்சார். 'எங்க யூனியன் வளர்ச்சிக்காகக் கச்சேரி நடத்தப் போறோம். நீங்க வந்து நடத்தித் தரணும்'னு நான் கேட்டுக்கிட்டேன். உடனே டெலிபோனை எடுத்தார். திருநெல்வேலி, கோயம்புத்தூர் கலெக்டர்களுக்கெல்லாம் "இவங்க நிகழ்ச்சியை நடத்த எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொடுங்க.... கோயம்புத்தூர் நிகழ்ச்சியை நான் ஆரம்பிச்சு வைக்க வரப்போறேன்"னு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டார். பிறகு, எல்லாரையும் அனுப்பிச்சிட்டு என்னை மட்டும் அருகில் வரச்சொல்லி என் கைகளை இறுக்கிப் பிடிச்சாரு. இப்ப நினைச்சாக்கூட என் கைவலிக்குது, அவ்வளவு வலுவான பிடி. என் கையைப் பிடிச்சுக்கிட்டு "நான் உனக்கு என்ன செய்யணும்?"னு கேட்டார். "நீங்க எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம். உங்களுடைய அன்பு மட்டும் எப்போதும் இருந்தா போதும்"னு சொல்லிட்டு விடை பெற்றுக் கொண்டு வந்தேன். கோயம்புத்தூர்ல நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கையால நான் முதல் டிக்கெட்டைப் பெறுவதாக ஏற்பாடு... ஆனா, என்னோட துரதிர்ஷ்டம் பாருங்க, அவர் இல்லை!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

என்னுடைய குருநாதர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு விழா எடுக்க கமிட்டி போட்டு வேலைகள் துவங்கியாச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரும் விழாவுக்கு வர சம்மதம் வாங்கியாச்சு; நண்பர் சோ என்கிட்ட ரொம்பப் பிரியம் உள்ளவர். சுப்பையா நாயுடுவின் விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும்னு சோ விடம் கேட்டேன் . ஒப்புக்கொண்டார் . எல்லாருடைய பெயர்களையும் போட்டு போஸ்டர் அடிச்சாச்சு . போஸ்டரை எம் . ஜி . ஆர் - கிட்ட காட்டிடலாம்னு நினைச்சு பெங்களூருக்குக் கிளம்பினேன் . அங்கே மதுரையை மீட்ட சுந்தரபாண்டி யன் ' படப்பிடிப்பு . எம் . ஜி . ஆர் - கிட்ட கேட்காம சோ பெயரைப் போட்டிருக் கோமேனு திடீர்னு ஓர் எண்ணம் வந்தாலும் , கொண்டு போய்க் காட்டினேன் . விஷயத்தையும் சொன்னேன் .

அந்த போஸ்டரைப் பார்த்து தலையில் அடிச்சுக்கிட்ட எம்.ஜி.ஆர்.," உனக்கு ஒரு சுக்கும் தெரியாது... எனக்கு ஃப்ரெண்ட்தான் சோ... ஆனா, பாலி டிக்ஸ்ல எனக்கும் அவருக்கும் ஆகாதுனு உனக்குத் தெரியாதா? விழாவில் அவர் ஏதாவது பாலிடிக்ஸ் பண்ணிடுவார் அல்லது நான் ஏதாவது பேசிடுவேன். இதெல்லாம் தெரியாத சுத்த மடையனா இருக்கியே... ஆர்மோனியப் பெட்டியைத் தவிர உனக்கு ஒரு சுக்கும் தெரியாது... நீ ஒரு மக்கு... இப்படிப் பண்ணிட்டியே... என்ன பண்ணலாம்..?"னு கேட்டார்.

நான் சொன்னேன்;" எனக்கு ஆர்மோனியப் பெட்டிதான் தெரியும்னு சொன்னீங்க.. அதுகூட இப்பக்கத்துக் கிட்டுதான் இருக்கேன்.. நான் வேணும்னா சோ கிட்ட போய் அந்த விழாவுக்கு வராதீங்கனு சொல்லிடறேன்..... நான் சொன்னா அவரு கேப்பாரு.."

இதைக் கேட்டதும் , திருப்பியும்'மடார்... மடார்'னு தலையில அடிச்சிக்கிட்ட எம்.ஜி.ஆர்.'ஐயோ... இன்னும் பெரிய தப்பு பண்றியே விசு... சரி, நீ ஒண்ணும் கண்டுக்காதே..... சோ வர்றபடி வரட்டும்... நான் பார்த்துக்கறேன்....'னு சொல்லிட்டார்.

நான் மெட்ராஸ் திரும்பி வந்து நடந்ததையெல்லாம் சோ கிட்டயும் சொன்னேன். அப்போ,"ஐயையோ... இதைப் போய் என்கிட்ட வந்து சொல்லிட்டீங்களே... கவலைப்படாதீங்க.... இந்த விழாவுல எந்தவிதமான பாலிடிக்ஸ் கலரும் வராம் எம்.ஜி.ஆருக்குத் தகுந்த மாதிரி பேசி, உங்க குருநாதரோட விழா வெற்றி கரமாக நடக்க உறுதுணையா இருப்பேன்..."னு சொன்னதோட, விழாவையும் சிறப்பா நடத்திக் கொடுத்தாரு.

இப்படி யார் யாருக்கு எப்படி எப்படி அட்ஜஸ்ட் பண்ணணுமோ அதை எம்.ஜி.ஆர். கரெக்டா செய்வாரு..... ஒரு கலைஞரை எப்படி உற்சாகப்படுத்தணுமோ அப்படி உற்சாகப்படுத்தி, தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுத்து, மட்டம் தட்ட வேண்டிய இடத்தில் தட்டி, எங்கே கண்டிக்கணுமோ அங்க கண்டிச்சு... விஷயம் வாங்கறதுல அவருக்கு இணை அவருதான்.

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 12

இதுக்கு இன்னோர் உதாரணம்... 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நம்பியாரை எம்.ஜி.ஆர். சவுக்கால அடிக்கற சிச்சுவேஷனைக் கவிஞர் வாலி கிட்ட சொல்லிட்டாங்க... அதற்கு வாலி, 'நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால்...'னு ஆரம்ப வரிகள் எழுதினாரு... இதுக்கு டியூன் போட்டு எம்.ஜி.ஆர். கிட்ட வாசிச்சுக் காண்பிச்சோம். உடனே எம்.ஜி.ஆர்." இது வேண்டாம்...'னு சொல் , பிறகுதான் இதை மாத்தி ' நான் ஆணையிட்டால்.... அது நடந்துவிட்டால்...‘ என்ற வரிகள் போடப்பட்டது. எம். ஜி. ஆர். தான் என்ன நினைக்கிறாரோ அதைப் பக்கு வமா சொல்லிடுவார். இப்படித் தனக்குத் தகுந்த வரிகளை எம். ஜி.ஆர். கேட்டு வாங்கிக் கொண்டதுண்டு. வீரம் செறிந்த பாடல்தான் என்று இல்லாமல், அவ ரோட காதல் பாட்டுக்கள்லேயும் ஏதா வது ஒரு ‘மெஸேஜ் ' சொல்லிடுவார். தன்னோட படங்களுக்கு கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் இப்படி நிறைய கவிஞர்களை எழுதச் சொல்லி வித்தியாச மான கவிதைகளைத் தனக்கு வேண்டிய வகையில் வாங்குவதில் அவர் மன்னர்!

‘நினைத்ததை முடித்தவர்' - சரித்திரம் படைத்த சாதனையாளர் ' என்று எம் . ஜி . ஆரைப் பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.

இவருடைய காலகட்டத்திலேயே 'காலத்தை வென்ற கவிஞர்' என்ற தொரு கவிதைப் புயல் தோன்றி.... மக்கள் திலகத்துடனேயே மோதி... பின்னர் எம் . ஜி . ஆர் . கையாலேயே ஆஸ்தானக் கவிஞர்' பட்டம் சூட்டப்பெற்ற என் இனிய நண்பர் கவிஞர் கண்ணதாசனோடு நான் சந்தித்த அனுபவங்கள்....


(23.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)