Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 13

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

"ராஸ்கல்... பொடிப்பயலே... உனக்கு இவ்வளவு திமிரா ? உனக்கு என்னடா தெரியும் தமிழைப்பத்தி?

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 13

"ராஸ்கல்... பொடிப்பயலே... உனக்கு இவ்வளவு திமிரா ? உனக்கு என்னடா தெரியும் தமிழைப்பத்தி?

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

விஞர் கண்ணதாசனை நான் முதன் முதலாகச் சந்தித்தது 1946 - ம் வருஷம் . ஜூபிடர் பிக்சர்ஸின் ( கோவை ) கன்னியின் காதலி ' படத்துக்குப் பாட்டெழுத வந்திருந்தார் . நான் அப்போ ஐபிடால ஆபீஸ் பாய் , மியூஸிக் ஹால் அசிஸ் டெண்டா மாசம் இருபத்தஞ்சு ரூபாய் சம்பளத்துல இருந்த நேரம்...

நெற்றியில் பட்டடை பட்டையாக விபூதி . நடுவில் வட்டமான குங்குமப் பொட்டு வெள்ளை வெளேர்னு வேட்டி , சட்டை ... தோள்லே அங்கவஸ்திரம்..." என் பேரு முத்தையா... செட்டிநாட்டு லேருந்து வர்றேன்..." - இப்படித்தான் கவிஞர் எனக்கு அறிமுகமானார் .

வந்தவுடனேயே அவர் ' கன்னியின் காதலி ' படத்துக்குக் ' கலங்காதிரு மனமே ' னு ஒரு பாட்டு எழுதிக்கொடுத் தார் . இந்தப் பாட்டுக்கு எஸ் . எம் . சுப்பையா நாயுடு உடனே மியூஸிக்கும் போட்டுட்டார்...

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கண்ணதாசன் வந்த சமயத்தில் , உடுமலை நாராயண கவிதான் ஜூபிடரின் ஆஸ்தான கவியாகக் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந் தார் . ஆஸ்தான மியூஸிக் டைரக்டர் எஸ் . எம் சுப்பையா நாயுடு . இவர் தவிர , எஸ் . வி . வெங்கட்ராமன் , சி . ஆர். சுப்பராமன் . சி . எஸ் . ஜெயராமன் போன்ற பிரபலமான மற்ற மியூஸிக் டைரக்டர்கள் வெவ்வேறு படங்களுக்கு இசையமைக்க வந்து போவார்கள் . இவங்களுக்கெல்லாம் நான்தான் அசிஸ்டெண்ட் அப்போல்லாம் டேப்ரிக்கார்டர் வசதி எல்லாம் கிடையாது . ஒரு ட்யூன் போட்டு என் கையில் கொடுத்துடுவாங்க . நானும் என்னோட இருந்த கோபாலகிருஷ்ணனும் ( தபேலா , டோலக் எல்லாம் வாசிப்பார் ) பாட்டெழு தறவங்க முன்னாடி போய் உட்கார்ந்து ஒரு நாள் பூரா ட்யூனைத் திருப்பித் திருப்பி வாசிச்சுக் காண்பிச்சுக் கிட்டே இருப்போம் . கவிஞர்கள் பாட்டெழுதுவாங்க... இதுதான் அப்போ வழக்கமா இருந்தது .

கண்ணதாசன் பாட்டு எழுத ஒரு சந்தத்தை ட்யூன் போட்டுக் கொடுத்துட்டாரு மியூஸிக் டைரக்டர்...

இந்தச் சந்தத்தைக் கவிஞர் முன்னாடி ஒன்றரை நாள் நான் விடாமல் வாசிச்சேன் . அப்புறம்தான் கவிஞர் கிட்டேயிருந்து வார்த்தைகள் வந்து விழ ஆரம்பித்தன . ' காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டே கூத்தாடுதே...‘ னு சொல்ல ஆரம்பிச்சாரு . நான் உடனே . ' இது என்னங்க... களி , கூத்துனு அசிங்கமா இருக்கு. நல்லாயில்லையே... வேற ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்...' னு சொன் னேன்... அவருக்குக் கோபம் வந்துடுச்சு. " ராஸ்கல்... பொடிப்பயலே... உனக்கு இவ்வளவு திமிரா ? உனக்கு என்னடா தெரியும் தமிழைப்பத்தி ? நான் படிச்சிருக் கேன்... பல்லவியை மாத்துனு நீ எனக்கு அட்வைஸ் பண்றியா... ரொம்பக் கொழுப்புத்தாண்டா உனக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நான் சொல்ற பல்லவியை எழுது ... ' ன்னாரு . " இல்லே.... வேற பல்லவி சொல்லுங்க‘னு கேட்டேன்

அந்தக் காலகட்டத்துல , மியூஸிக் டைரக்டர் ட்யூன் போட்டுக் கொடுத்தாங்கன்னா அதுக்கேத்த பல்லவியைக் கவிஞர் கள்கிட்டேருந்து வாங்கறது என் பொறுப்பு. அப்போதிலிருந்தே எனக்கு அப்படியொரு பிராக்டிஸ் . ஒரு மனுஷனுக்கு முகம் எப்படியோ அதே மாதிரி ஒரு பாட்டுக்குப் பல்லவி முக்கியம் . பல்லவி ரொம்ப சிம்ப்பிளா ரசிகர்கள் கிட்டே போய்ச்சேர்ற அளவுக்கு கேட்ச்சியா இருக்கணும்கிறதுல நான் ரொம்பப் பிடிவாதமா இருப்பேன் . அதனால கவிஞர்கிட்டே கடைசிவரை ஒப்புக்காம வேற வரிகளை மாத்தணும்னு கண்டிப்பா இருந்தேன் . ரெண்டு பேருக்குமே சின்ன வயசு . வரிகளை மாத்தற விஷயத்துல சண்டை போட்டுக் கிட்டு இருந்தோம் .

அந்த நேரத்துல ஆஸ்தான கவிஞர் உடுமலை நாராயண கவி வந்தாரு . " என்னடா பல்லவி எழுதியிருக்கான் இவன் ? ..." ன்னு என்கிட்டே கேட்டாரு .

நான் உடனே கண்ணதாசன் எழுதிக் கொடுத்த காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டே...' பல்லவியை வாசிச்சுக் காண்பிச்சேன் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" என்னடா இது... களி கிளின்னு " னு கேட்டார் நாராயண கவி .

நான் எந்த வரிகளை மாத்தச் சொல்லிக் கேட்டேனோ , அதையே நாராயண கவியும் சொல்

லவே , கண்ணதாசன் என்னை ஒரு பார்வை பார்த்தாரு . பொடிப்பயலா இருக்கான்... இவன் இவ்வளவு தெரிஞ்சு வெச்சிருக்கானே னு நெனைச்சாரோ . என்னவோ... கண்ணதாசனுக்கும் எனக்கும் அப்போதிலிருந்தே ஒரு அண்டர்ஸ் டாண்டிங் வந்திருச்சு . அந்தச் சம்பவத்திலிருந்தே அவருக்கு என்மீது தனிப் பிரியம் .

நான் பல்லவிகளை செலக்ட் பண்றது . ட்யூன் போடறதுல காட்டற உற்சாகம் , வேகம் - அதே மாதிரி அவரோட வார்த் தைகளுக்கு ஏற்ப நான் ட்யூன் போடறது... இப்படியே ' தம்பி விசு ' என்று அழைக்கு மளவுக்கு எங்களுக்குள்ளே நெருக்கமான ஒரு பாச உறவு வளர்ந்தது .

கவிஞருக்கும் எங்களுக்குமிடையே ஒரு காம்பினேஷன் உருவாச்சு . இது இப்படியே டெவலப் ஆனது... சில சமயங்கள்லே உடனே பாட்டெழுதுவார்... அதை மாத்தணும்னா உடனே மாத்தக் கூடிய ஆற்றல் அவர்கிட்ட இருந்தது . ஒரு டாக்டர் அல்லது இன்ஜினீயர் தொழில்லே பிராக்டிஸ் பண்ணப் பண்ண இம்ப்ரூவ் ஆகி மெருகேத்தற மாதிரிதான் மியூஸிக் டைரக்டர் தொழிலும் . ஒரு படம் ரிலீஸான பிறகு , ஒரு பாடல் ஏன் ஹிட் ஆச்சு... இன்னொரு பாடல் ஏன் ஹிட் ஆகலை...? ' னு வெற்றி தோல்வியை நாங்க ஆராய்வோம் . இப்படி அனுபவப் பட்டுப் பட்டு ஒரு ட்யூனுக்கு நிறைய எழுதித் தள்ளுவார் கவிஞர் . இதைப் பத்திக் கண்ணதாசன் , " ட்யூனுக்குப் பாட்டு எழுதி எழுதியே எனக்குக் கூன் விழுந்துடுச்சு... சில பேரு இந்தி ட்யூன்லாம் கொடுத்துடறாங்க... எனக்குக் கற்பனையே வரலை " னு சொல்வார் . கவிஞர் மனசுல இப்படி ஒரு பெரிய ஆதங்கம் இருந்தது .

திடுதிப்புனு ஒரு நாள் கவிஞர் என் னைக் கூப்பிட்டாரு . அப்பதான் மாடர்ன் தியேட்டர்ஸ் , ஜூபிடர் பிக்சர்ஸ்க்கெல்லாம் பாட்டெழுதி கவிஞர் பாப்புலரா இருந்த சமயம்...

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" நான் ஒரு படம் எடுக்கப்போறேன்... அதுல பத்துப் பாட்டு வரப்போவுது... அந்தப் பத்துப் பாட்டுக்கும் நீதான் மியூஸிக் போடணும்... ஆனா , உன் ட்யூனுக்கு நான் பாட்டு எழுதமாட்டேன் .. என்னுடைய பாடல்களுக்கு நீ ட்யூன் போடணும்... உன்னால் முடியுமா . . . . ? " னு கவிஞர் கேட்டாரு .

' ட்ரை பண்ணிப் பார்ப்போம்... முடியும் . முடியலைன்னு இப்ப எப்படிச் சொல்ல முடியும் ? கொஞ்சம் அப்படி இப்படி வந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க..." னு நான் சொன்னேன் .

' பத்துப் பாடல்கள் - முத்துப் பாடல்கள் ' னு உடனே பத்திரிகைல பெரிசா விளம்பரம் கொடுத்தாரு . அந்தப் பாடல் கள் இடம்பெற்ற படம்தான் - ' மாலை யிட்ட மங்கை ' . டி . ஆர் . மகாலிங்கம் ஹீரோ. படத்துல பத்துப் பாட்டுகளும் ' ஹிட் ' ஆயிடுச்சு . குறிப்பா , டி . ஆர். மகா லிங்கம் பாடின எங்கள் திராவிடப் பொன்னாடே...', 'செந்தமிழ்த் தேன் மொழியாள் ' பாட்டுக்கள் எல்லாம் பரபரப்பா பிரபலமாகின. ' எங்கள் திராவிடப் பொன்னாடே ' - பாட்டுக்கு ஹைபிட்ச்சிலேருந்து ஆரம்பிச்சு அவரு டைய வாய்ஸையே மாத்தியமைச்சு ' நானன்றி யாரறிவார் ' என்ற பல்லவியை லோபிட்ச்சில் கொடுத்து..." என்னை என்ன இந்திப் பாடகர் சைகால் வாய்ஸ்னு நெனைச்சுட்டயா... உள்ளே புகுந்து இப்படிக் குடையறியே...? " னு மகாலிங்கம் என்னோடு - சண்டையே போட்டாரு ... படம் ரிலீஸான பிறகு அவருக்கு ஒரு ' ப்ரேக் ' கிடைச்சது.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞருக்கு என்கிட்ட ரொம்ப நம்பிக்கை வந்திருச்சு . ஒரு தடவை ஒரு பாட்டை எழுதி எடுத்துக்கிட்டு வந்தாரு . " இந்தப் பாட்டை ஏழெட்டு மியூஸிக் டைரக்டர்கள் கிட்டே கொடுத்துட்டேன் . எல்லாருமே இந்த வரிகளுக்கு ட்யூன் வரலைனு சொல்லிட்டாங்கடா... நீ எப்படியாவது போட்டுக்கொடுடா... நல்லாயிருக்கும்... " னு கவிஞர் என்கிட்ட கொடுத்தாரு . அப்போ பக்கத்திலிருந்த டைரக்டர் பீம்சிங்கும் " கவிதை நல்லாயிருக்கு... இதுக்கு மியூஸிக் போட்டுடுங்க விசு"ன்னாரு . நானும் ராமமூர்த்தியும் பத்தே நிமிஷத்துல அந்தப் பாட்டுக்கு ட்யூன் போட்டுக் கொடுத்துட்டோம் . அந்தப் பாட்டுதான் - ரொம்ப பாப்புலரான பாவ மன்னிப்பு 'படத்துல பி . சுசீலா பாடின அத்தான்...என்னத் தான்...' பாட்டு!

இப்பல்லாம் தனியா உட்கார்ந்து கம்போஸ் பண்ணணும்னு நெனைக்கிறோம். ஆனா , அந்தக் காலத்துல ஒரு பாட்டுக்கு இசையமைக்கிறதுனு வந்துட்டா, பாட்டு எழுதற கவிஞர், மியூஸிக் டைரக்டர், வசனகர்த்தா, டைரக்டர்... அந்தக் காட்சியில் நடிக்கற நடிகர்... இப்படி ஒரு மாமாங்கக் கூட்டமே எங்களைச் சுத்தி உட்கார்ந்திருக்கும் . ஏதோ கோர்ட்டுல கேஸ் விசாரிக்கற மாதிரி இது நல்லாயில்லே... அது நல்லாயில்லே ' னு ஆளாளுக்குப் பாட்டைப்பத்தி காமெண்ட் அடிப்பாங்க...

இதைச் சொல்லும்போது கவிஞர் , நான் எல்லாம் ஒரு படத்துக்குப் பாட்டு கம்போஸ் பண்ணும்போது நடந்த தமாஷான ஓர் அனுபவம் இப்ப ஞாபகத்துக்கு வருது . அது...

(30.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)