Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 14

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞரைப் பொறுத்த வரைக்கும் தொல்லைகள், இம்சைகள் இருந்தாத்தான் பாடலே எழுத வரும்...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 14

கவிஞரைப் பொறுத்த வரைக்கும் தொல்லைகள், இம்சைகள் இருந்தாத்தான் பாடலே எழுத வரும்...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ங்கை ' என்ற படத்துக்காக நான் , கண்ணதாசன் , டைரக்டர் திருலோகசந்தர் , கம்போஸிங் குரூப்னு எல்லாருமா தயாரிப்பாளர் பாலாஜியோட ஆபீஸ்லே பாட்டுகளை கம்போஸ் பண்ணக் கூடியிருந்தோம் . அந்தப் படத்துல , சிவாஜி ஜாலியா ஒரு பாட்டுப் பாடற மாதிரி சிச்சுவேஷன் . இதுக்கான பல்லவியை கம்போஸ் பண்ணோம் . இதுக்குக் கவிஞர் , அஞ்சு விதவிதமான பல்லவிகளை எழுதினாரு . நானும் வெவ்வேறு ட்யூனா அஞ்சு போட்டேன் . ஒரு பல்லவி எனக்குப் பிடிச்ச மாதிரியிருந்தது . இன்னொரு பல்லவி கவிஞருக்குப் பிடிச்சுது . மூணாவது - பாலாஜிக்குப் பிடிச்சுது . நாலாவது - திருலோகசந்தருக்கு . அஞ்சா வது - கம்போஸிங் குரூப்புக்குப் பிடிச்சிருந்தது . இந்த அஞ்சு பல்லவிகள்ல , நாங்க எதை வெச்சுக்கிறதுனு குழம்பிக்கிட்டிருந்தோம் .

அப்போ காலை பதினோரு மணி இருக்கும் . அம்பத்தஞ்சு வயசுள்ள ஒரு போஸ்ட்மேன் , பாலாஜி ஆபீஸுக்குள்ள லெட்டர்ஸ் கொடுக்க வந்தார் . அந்த போஸ்ட்மேனைக் கொஞ்சம் உட்காரச் சொன்னார் கவிஞர் .

" விசு... அந்த அஞ்சு பல்லவிகளையும் இப்ப வாசிச்சுக் காண்பி.... "

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அந்த போஸ்ட்மேனுக்கு எல்லாத்தையும் வாசிச்சுக் காண்பிச்சேன். அவருக்குப் பிடிச்சதையே ஏகமனதா நாங்க எல்லாரும் ஒப்புக்கிட்டோம் . அவருக்குப் பிடிச்ச அந்த வரிகள்... ' கேட்டவரெல்லாம் பாடலாம்... என் பாட்டுக்குத் தாளம் போடலாம்... மறுநாளும் அந்தப் படத்துக்குப் பாட்டு கம்போஸ் பண்ண உட்கார்ந்தோம் . பல்லவி , ட்யூன் எல்லாம் ரெடி .

" எங்கே... அதை வாசிச்சுக் காண்பி...' னு என்கிட்டச் சொன்னாரு . பாலாஜியைக் கவிஞர் கூப்பிட்டு , ' இங்க யாரும் வேணாம்... நீ போயிடு... டைரக்டரும் போகலாம்... நேத்து வந்தாரே. அந்த போஸ்ட்மேனை மட்டும் கூட்டிட்டு வரச் சொல்லுப்பா... அவரு கேட்கட்டும்...' னு வேடிக்கையாக சொல்லிட்டாரு . இந்தச் சம்பவத்தை நான் ஏன் சொல்றேன்னா...

அபிப்பிராயங்களை எடுத்துக்கறதில தப்பில்லைங்கிற பாலிஸி அப்போ இருந்தது . இதுமட்டு மல்ல , பாட்டு கம்போஸ் பண்ணும்போது கவிஞர் ரொம்ப ஜோவியலா இருப்பார்ங்கிறதுக்கும் இது ஒரு சாம்ப்பிள் .

கவிஞரைப் பொறுத்தவரைக்கும் சீரியஸ்னஸ் அதிகம் இருக்காது. அவர் சந்திக்கிற அனுப வங்களைப் பாட்டுகளா எழுதித் தள்ளுவார்.

அவர் ஒரு கட்சியிலிருந்து விலகி வந்த நேரம்னு நினைக்கிறேன். அதை வெச்சுப் போனால் போகட்டும் போடா...' பாட்டை எழுதிட்டாரு - பாலும் பழமும் ' படத்துக்கு .

நான் சொன்னேன் : " இது என்னங்க... போனால் போகட் டும் போடான்னு மரியாதையில்லாம் எழுதறீங்களே ? யாராவது கேட்டா தப்பா நெனைக்க மாட்டாங்களா ? "

கவிஞர் : ' போனால் போகட் டும் போடா ' பல்லவிக்கு ஏதா வது மெட்டு வருமா. பாரு... மாத்தற விஷயம் பத்தி என்கிட்ட பேசாதே.... "

நான் விடவில்லை. " போடா போடான்னு நீங்க என்னையே திட்டற மாதிரியிருக்கு ... கொஞ்சம் அசிங்கமா இருக்கு... மாத்திடுங்க ளேன்..." என்றேன்.

கவிஞர் : " எனக்குத் தெரி யாது... நீ எப்படியாவது இதுக்கு ட்யூன் பண்ணிடு..."

படத்தோட தயாரிப்பாளர் வேலுமணி , டைரக்டர் பீம்சிங் எல்லாருமே " பரவாயில்லை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

இதுக்கு ட்யூன் போட்டு டுங்க...' னு சொல்லிட்டாங்க.

என்னைப் பொறுத்தவரைக்கும் ஜனநாயக முறையைக் கையாள்றவன் நான். அதனால அந்தப் பாட்டுக்கு மெஜாரிட்டி ஆதரவு இருந்ததால், அந்த எண்ணத்தை மதிச்சு ட்யூன் போட்டேன். பாலும் பழமும் ' படம் ரிலீஸாகி , அந்தப் பாட்டு பயங்கர பாப்புலர் ஆயிடுச்சு. எங்கே திரும்பினாலும் இந்தப் பாட்டுதான்...' நல்லவேளையா இந்தப் பாட்டை நாம் மிஸ் பண் ணாம இருந்தோமே ' னு மனசுக்குள்ள ஒரு ஆத்ம திருப்தி சந்தோஷம்.

இந்தச் சமயத்துல எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தையும் நான் சொல்லியாகணும்.

ஒரு நாள் காலை ஆறரை மணி இருக்கும் . முதல் நாள் ராத்திரி ரிக்கார்டிங் முடிச்சுட்டு. நான் லேட்டா வந்து வீட்டு மாடியில படுத்திருந்தேன். திடீர்னு கீழே ஏதோ சத்தம்... ஒரு லாரிக் காரன், என் வீட்டு காம்பௌண்ட் சுவர் மேலே மோதி இடிச்சுட்டு நிக்கறான்.

சுவர் இடிஞ்சு நிறைய சேதமாயிருந்தது. கூட்டம் கூடிடுச்சு. எல்லாரும் லாரி டிரைவரைப் பிடிச்சு, "தாம்பௌண்ட் சுவரைக் கட்டிக் காடு... இல்லேன்னா , அதுக்குப் பணமாவது கொடு...னு கேட்டுக்கிட்டிருந்தாங்க அப்பதான் நான் கீழே இறங்கி வந்தேன். டிரைவரைப் பார்த்து," என்னப்பா... இப்படிப் பண்ணிட்டியே... ? னு நான் கேட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ கோவணம் கட்டிக்கிட்டு ஒரு சின்னப் பையன் , ஏழெட்டு வயசிருக்கும்... என்கிட்ட வந்தான். போனால் போகட் டும் போடா ' னு என் முகத்துக்கு நேரா பாடிட்டு ஓடியே போயிட்டான் . நான் அசந்து போயிட்டேன் . அவனைப் பிடிங் கடான்னு சொல்றதுக்குள்ள பையன் பறந்தே போயிட்டான்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நாம போட்ட பாட்டு நம்மையே திரும்பி அடிக்குதேனு மனசுக்குள்ள ஒரு நெனைப்பு, இதை ஞாபகம் வெச்சுக்கிட்டிருந் தேன் . கவிஞர் மறுபடியும் வந்து மாட்டி னாரு - எங்க ஊர் ராஜா ' படத்துக்கு . ' யாரை நம்பி நான் பொறந்தேன்.

போங்கடா போங்க...'னு பல்லவி எழுதினாரு.

நான் கப்புனு பிடிச்சுக்கிட்டேன்." ஏற்கெனவே ' போனால் போகட்டும் போடா', 'சட்டி சுட்டதடா ' னு ரெண்டு தரம் திட்டினீங்க ... இப்பப் 'போங்கடா வாங்கடா'னு எல்லாரையும் திட்டறீங்களே?"

கவிஞர் : "சரி... அதுக்கு இப்ப என்னை என்ன பண்ணச் சொல்றே....?"

நான் : "இல்லே...' யாரை நம்பி நான் பொறந்தேன்... போங்கய்யா போங்க... என் காலம் வெல்லும் , வென்ற பின்னே வாங்கய்யா வாங்க ' னு எழுதினா என்ன தப்பு...? நீங்க அப்படி மாத்தக் கூடாதா...? "

கவிஞர் : " நீ ரொம்ப அடக்கமான வன்னு எனக்குத் தெரியும் . விஜயவாடா 'ங்கற ஊர் பேரைக்கூட விஜயவாங்க ' னுதான் நீ சொல்லுவே... அதுக்காக நான் என் பல்லவியை மாத்தணும்னு அவசியமில்லே... என் பல்லவியை அப்படியே வெச்சு ட்யூன் போடு..."

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர் விரும்பியபடியே ' யாரை நம்பி நான் பொறந்தேன் , போங்கடா போங்க னு இசையமைச்சுக் கொடுத்து , அதுவும் ' ஹிட்டாச்சு!

இப்படிப் பல பாடல்கள் கவிஞர் எழுதும்போது அவரோடு சண்டை போட்டு , தகராறு பண்ணி...' இந்தப் பல்லவி நல்லா இல்லேனு சில சமயம் நான் கோபமா எழுந்து கூடப் போயிருக் கேன். அதனால் என்னைத் திருப்திப் படுத்தணும்னே பல்லவியை விசு ' ஓகே '

பண்ணா சரியா இருக்கும் 'ங்கற நம்பிக்கை கவிஞருக்கு வந்து , அவர் நிறைய ' ஹிட் ' பாடல்கள் தந்தார் என்றால், எங்களுக்குள்ளே இருந்த அந்த அண்டர்ஸ்டாண்டிங்தான் காரணம்.

இதைப் பார்த்துதான் டைரக்டர் பாலசந்தர் சாருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனே வந்தது. 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்துல காதலியை மியூஸிக் டைரக்டர் போலவும் காதலனைக் கவிஞர் போலவும் நடிக்க வெச்சாரு. இந்த சிச்சுவே ஷன்ல காதலி ஸ்ரீதேவி ட்யூன் சொல்ல , காதலன் கமல் பாட்டு எழுதுவாரு.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா...

- இந்த ட்யூனுக்கு , சிப்பி இருக்குது... முத்தும் இருக்குது... திறந்து பார்க்க நேரமில்லைடி ராஜாத்தி'னு உடனேயே கவிஞர் பாட்டெழுதிக் கொடுத்து எல்லாரையும் அசத்திட்டாரு.

கவிஞர் பாட்டெழுத உட்கார்ந்தால், அவருக்குக் கடன் தொல்லை இருக்கணும்... ரெகமண்டேஷன் இருக்கணும்... இன்னும் சொல்லப்போனா, வீடு ஜப்தி இருக்கணும்... அவருடைய வாழ்க்கையே ரொம்ப பரிதாபம். நிறைய சம்பாதிச்சாரு... நிறைய செலவழிச்சாரு... செலவாளி. பல விதமான இம்சைகள், அனுபவங்கள் இருக்கும்போதெல்லாம் பாடல்கள் அவரிடமிருந்து அருவியாகக் கொட்டும்.

மைண்ட் அமைதியா இருந்தாத்தான் பாட்டு எழுத முடியும்னு சொல்வாங்க. ஆனா, என்னோட அனுபவத்திலேருந்து சொல்றேன் - கவிஞரைப் பொறுத்த வரைக்கும் தொல்லைகள், இம்சைகள் இருந்தாத்தான் பாடல்கள் எழுத வரும் . அந்தப் பாடல்களும் ஹிட் ஆகும்!

அப்படி ஒரு இம்சையோடு அவர் ஒரு பாட்டு எழுதின சம்பவமும் இருக்கு. அது...

(06.02.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)