பீம்சிங் டைரக்ட் செய்த ' பழநி ' படத்துக்கான வேலைகள் ஆரம்பமாச்சு. பாட் டுக்கள் கவிஞர் கண்ணதாசன்தான். ஒரு நாள் சாயங்காலம் கம்போஸ் பண்ண உட்கார்ந்தோம் . அப்போல்லாம் ' ப ' வரிசைப் படங்கள்ல டி. எம். எஸ் . ஸோலோவா ஒரு தத்துவப் பாட்டு பாட றது வழக்கமாப் போச்சு . ரசிகர்கள் கிட்டயும் அந்த எதிர்பார்ப்பு இருந்தது. படத் துல சிவாஜி நடிக்கிற சிச்சுவேஷனையும் டைரக்டர் பீம்சிங் சொல்லிட்டாரு. ஆனா, கவிஞருக்கு ஒரு பல்லவிகூட வரவில்லை.
அந்த நேரத்தில் , ஒரு பையன் ரொம்ப காஸ்ட்லியான - ' சம்திங் ஸ்பெஷல் 'ங்கிற. பிரெஞ்சு நாட்டு விஸ்கி பாட்டிலைக் கொண்டு வந்துவிட்டான். அது கவிஞர் கண்ல பட்டுடுச்சு. அவர்கிட்டதான் ஒளிவு மறைவே கிடையாதே ! அதனால அந்த க்ஷணம் அதை வாங்கிடணும்னு குறி வெச்சுட்டாரு. அது இல்லாம பல்லவி வராதுன்னு எங்களுக்கும் தெரியும். விஸ்கி யோட விலை ஆயிரத்தைந்நூறு ரூபாய் , என்கிட்ட எவ்வளவு பணம் இருக்குனு கேட்டாரு . என்கிட்ட மட்டுமல்ல. அங்கே கூடியிருந்த யார்கிட்டயுமே அவ்வளவு பெரிய தொகை இல்லே. உடனே நாங்க எங்க எல்லார்கிட்டயும் வெச்சிருந்ததை மொத்தமா கலெக்ட் பண்ணினா அறுநூறு ரூபாதான் தேறிச்சு . மிச்ச ரூபாய்க்கு என்ன பண்றதுனு யோசிச்ச கவிஞர், யார் யாருக்கோ டெலிபோன் பண்ணிப் பார்த்தாரு. எங்கேயும் கிடைக்கலை. தன்னோட கவிதா ஓட்டலுக்குப் போனாரு.
ராத்திரி ஏழெட்டு மணியாயி டுச்சு . கடைசியா , தன்னோட அண்ணன் ஏ.எல்.சீனிவாசனுக்கு போன் போட்டுக் கேட்டார். அவரு கவிஞரை போன்லயே கன்னாபின் னானு திட்டிட்டார். அவ்வளவு தான்... அந்தக் கோபத்தோடயும் ஆதங்கத்தோடயும் வேகமாகத் திரும்பி வந்த கவிஞர்கிட்டயிருந்து... 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' - இப்படி ஒரு ஜோரான பாட்டு ஜனித்தது.
'கர்ணன்' படத்துக்காக டைரக் டர் பந்துலு மாமா எங்களையெல்லாம் பெங்களூர் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. தலையில் துண்டு கட்டிக்கிட்டு பனியனோடு நானும் கவிஞரும் ராத்திரியில் பெங்களூர்ல சுதந்திரமா சுத்தி வந்தோம். படத் துல வர்ற எல்லா சிச்சுவேஷனையும் என்கிட்டயும் கவிஞர்கிட்டயும் சொல்லிட்டதோட , ஒரு வாரத்துக்குள்ள எல்லாப் பாட்டையும் எழுதிட்டுத்தான் ஊரைவிட்டே நகரணும் னு அன்புக கட்டளை போட்டுட்டாரு. ஆனா , கவிஞர் இரண்டே நாட்கள்ல பன்னிரண்டு பாட்டுக்களை எழுதிக் குவிச்சுட்டாரு.
இதுக்காகக் கவிஞர் முதன்முதலா எழுதிய பாட்டு, படத்துல கர்ணன் ( சிவாஜி ) பண்ற சூரிய நமஸ்காரம்... ' ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி...' - இந்தப் பாட்டுக்காகக் கவிஞர் என்ன பண்ணினார் தெரியுமா ? பெங்களூர்ல இருக்கற வேத பண்டிதர் களை வரவழைச்சார். சூரிய பகவான் பற்றிய மந்திரங்களையும், அவற்றின் அர்த்தங்களையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். இதற்குப் பிறகுதான் 'ஆயிரம் கரங்கள் ' பாட்டையே எழுதினாரு.
தலைவர் காமராஜர் மேல கவிஞர் அளவு கடந்த , உணர்ச்சிபூர்வமான பக்தி வெச்சிருந்தாரு . அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்த கவிஞர். இந்தப் படத்துல... ' உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...
என்று கர்ணனைப் பார்த்துக் கண்ண ன் ( என் . டி . ஆர் . ) பாடற மாதிரி ஒரு பாட்டை அமைச்சாரு . சிச்சுவேஷனுக்கும் அது பொருந்திச்சு.
சிவாஜி கணேசன்.
தி.மு.க-வை விட்டு விலகினபோது , அவரை' எங்கி ருந்தாலும் வாழ்க ' னு அண்ணா வாழ்த்தினாரு. இதை வெச்சுத்தான் ' நெஞ்சில் ஓர் ஆலயம் ' படத்துக்காக , ஏ. எல். ராகவன் பாடற ' எங்கிருந்தாலும் வாழ்க ' பாட்டை எழுதினார் . இதே படத்துக்காகத்தான்.
" டேய் விசு... ஏதாவது ஒரு படத்துலயாவது நான் பாடறதுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டியா...? " ன்னு கவிஞர் என்கிட்ட ஆசையா கேட்பார் !
கடைசி நேரத்துல ஒரு பாட்டைச் சேர்க்கணும்கிற நிலைமை வந்தது... அடுத்த நாளே படம் சென்ஸாருக்குப் போக வேண்டிய சூழ்நிலை வேற இருந்தது. இதுக்காக ' முத்தான முத்தல்லவோ...' பாட்டைப் பத்தே நிமிஷத்துல கவிஞர் எழுதிக் கொடுத்துட்டாரு. அப்பவே ரிக்கார்டிங் தியேட்டருக்குப் போய் பி. சுசீலாவைப் பாட வெச்சு , அசுர வேகத்துல ரிக்கார்ட் பண்ணோம். அந்தப் பாட்டும் செம ஹிட் ஆச்சு!
ஒரு சமயம் பாண்டிச்சேரி தேர்தல் பிரசாரத்துக்காகக் கவிஞரும் அண்ணாவும் காரில் பயணம் செய்தனர் . வழியில் பசியெடுக்க , ஒரு மிக்ஸர் பொட்டலத்தை வாங்கி இருவரும் கொறித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பொட்டலக்காகிதத்தில் காணப்பட்ட கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்...' என்கிற தத்துவப் பாடலில் இருந்துதான் அத்தான்... என்னத்தான்...' பாட்டு ( பாவ மன்னிப்பு ) உருவாச்சு. பகவத் கீதையிலிருந்து பிறந்ததுதான் ' காலங்களில் அவள் வசந்தம்..."
ஆலயமணி ' யில வர்ற ' சட்டி சுட்டதடா...' தத்துவப் பாட்டு - ஏதோ ஒரு கேஸுக்காக எழும்பூர் கோர்ட்டுக் குப் போன போது பட்ட அனுபவத்தின் எதிரொலிதான்! மதுரைக்கு ரயிலில் போய்க் கொண்டிருந்த போது. விடியற் காலைப் பொழுதில் உற்சாகமாகப் பொங்கி வந்த பாட்டுதான் - ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்...

- இப்படித்தான் கவிஞர் தனது அனுபவங்களை வெச்சே பாட்டுக்கள் எழுதுவாரு.
இன்னொரு அனுபவம் - ' புதிய பறவை ' படத்தில் நாயகன் சிவாஜி, மனவேதனையால் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டிய காட்சிக்கு ஒரு பாட்டு தேவை என டைரக்டர் சொல்ல... நானும் கவிஞரும் கிட்டத்தட்ட இருபத்தோரு நாட்கள் பல்லவி எழுதி , ட்யூன் போட்டு எதுவும் சரியாக வரவில்லை. சற்று சலிப்போடு நாங்களே நிம்மதி இழந்து தவித்தபோது , எங்கே நிம்மதி ? ' பாட்டு கிடைச்சுது.
வேறொரு படத்துக்காகக் கவிஞர் எழுதின தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... தாய் தூங்கத் தாலாட்டு நீ பாடவேண்டும் ! என்ற பாட்டு பாலும் பழமும் ' படத்துக்காக' நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...' என்று மாறியது.
' ப ' வரிசையில் வந்த படங்களில் இடம்பெற்ற பாட்டுக்கள் எல்லாம் ' ஹிட் ' ஆனதுக்கு முக்கிய காரணம் , நான் - ராமமூர்த்தி அண்ணா - கவிஞர் கண்ணதாசன் - கதாசிரியர் சோலை மலை - டைரக்டர் பீம்சிங் - நடிகர் திலகம் - இப்படிப் படம் சம்பந்தப் பட்ட எல்லாரும் கூட்டணியா உட்கார்ந்து , ஒரு ' டீம் ஒர்க் ' மாதிரி கடுமையா உழைச்சோம்.
நானும் கவிஞரும் பாட்டுக்காக கம்போஸ் ' பண்ண உட்காரும்போதெல்லாம் ஒரு ஆசையைச் சொல்வார். அந்த ஆசை : " டேய் விசு... ஏதாவது ஒரு படத்துலயாவது நான் பாடறதுக்கு சான்ஸ் கொடுக்க மாட்டியா... ? "
கித்னா பதல் கயா இன்ஸான்னு ஒரு இந்திப் பாட்டை மனசுல வெச்சுத்தான் பாவ மன்னிப்பு ' படத்துக்காக வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' னு கண்ணதாசன் பாட்டு எழுதினார். கித்னா பதல்... ' இந்திப் பாட்டை எழுதின கவிஞரே ( பெயர் ஞாபகம்)
(13.02.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)