Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 16

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

"நான் கவிஞர் வீட்டு வேலைக்காரன் பேசறேன் கண்ணதாசன் இறந்துட்டாரு... கண்ணதாசன் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்மில்ல...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 16

"நான் கவிஞர் வீட்டு வேலைக்காரன் பேசறேன் கண்ணதாசன் இறந்துட்டாரு... கண்ணதாசன் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்மில்ல...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ரு தடவை சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்திலே ஒரு விழா... நான் , கவிஞர் கண்ணதாசன் கலந்துக்கிட்ட விழா அது . நான் , இன்னும் சிலரெல்லாம் முன்னாடியே போய்ச் சேர்ந்துவிட்டோம் . விழாவும் ஆரம்பமாயிடுச்சு . கவிஞர் தாமதமாக விழா ஹால்ல நுழஞ்சாரு . அப்போ மாணவர்கள் எல்லாம் " லேட் கண்ண தாசன்... லேட் கண்ண தாசன்...' னு கைதட்டிக்கிட்டே தமாஷா ஆரவா ரம் பண்ணாங்க . இதைக் கேட்டுச் சிரிச்சுக்கிட்டே வந்து மேடையில் உட்கார்ந்தார் .

கவிஞர் பேச ஆரம்பித்தார் : " நான் எவ்வளவு பெரிய லக்கிமேன் தெரியுமா ? நான் ரொம்பப் புண்ணி யம் பண்ணவன்..." - சஸ்பென்ஸ் மாதிரி புதிர் ஒண்ணைப் போட்டாரு... ஆடியன்ஸுக்கு ஒண்ணும் புரியலை . அவரே அந்தப் புதிரை விடுவிச்சார் . " என்னன்னு தெரியலையா...? நான் விழாவுக்குத் தாமதமா வந்தேன்... எல்லாரும் லேட் கண்ணதாசன் னு கத்தினீங்க... நான் உயிரோட இருக்கிறபோதே லேட் கண்ணதாசன் ' னு சொல்றதைக் கேட்டுட்டேன்... நான் செத்த பிறகு இதைக் கேட்க முடியுமா...? அந்த விஷயத்துல நான் ரொம்பக் கொடுத்து வெச்சவன் இல்லையா...? " னு சொல்லி , எல்லாரையும் சிரிக்க வெச்சுட்டாரு . தமாஷ்லயும் ஒரு தத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்திட்டாரு பாருங்க , அதான் கவிஞருடைய கிரேட்னஸ்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர், நான், தமிழறிஞர் தெ .பொ.மீனாட்சிசுந்தரனார், மன்னார்குடி அம்பிகாபதி எல்லாரும் சோவியத் ரஷ்ய அரசின் அழைப்பை ஏத்துக்கிட்டு அங்கே போயிருந்தோம் . எங்களுக்குப் பிரமாதமா வரவேற்பு விழா நடந்தது . அதுல அந்த ஊர் ஆர்க்கெஸ்ட்ராக் காரங்க இசை நிகழ்ச்சி கொடுத்தாங்க . அது முடிஞ்சவுடனே ரஷ்யக்காரங்க வாசிச்ச ட்யூனை அப்படியே கவிஞர் கிட்டே சொல்லி , ஒரு பல்லவி எழுதிக் கொடுங்க ' ன்னு கேட்டேன் . அந்த ரஷ்ய மெட்டைக் கேட்ட பத்தாவது நிமிஷம் கவிஞர் துள்ளிக் குதித்து , வெள்ளி மாடத்துப் புள்ளி மானிடம் உள்ளம் வைத்தவன் யாரடி ? னு ஒரு பல்லவியை உடனே எடுத்துவிட்டார் . நான் அந்த ரஷ்ய ஆர்க்கெஸ்ட்ராவை வெச்சுக் கிட்டே , அவங்க ட்யூனுக்காகக் கவிஞர் எழுதிக் கொடுத்த தமிழ்ப் பாட்டைப் பாடிக் காண்பிச்சேன் . ஆடியன்ஸ் அத்தனை பேரும் எழுந்து நின்னு இருபத்தஞ்சு நிமிஷம் கைதட்டிக்கிட்டே இருந்தாங்க . ' இப்பத்தானே இவங்க வந்தாங்க... அதுக்குள்ளே நம்ம ட்யூனை வெச்சு ஒரு பாட்டையும் எழுதி உடனே பாடிட்டாங்களே....' னு அவங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்து ஆச்சரியம் . வார்த்தைகளால என்னைப் புகழ்ந்து தள்ளினாங்க . என்னால தாங்கமுடியலை . மண்டையே வெடிச்சுடும் போலிருந்தது.

யாசிடேனே நான்," ட்யூனை விட்டுடுங்க... அதை நான் ஏன்னா0, கேரளத்துல மாப்ளரிக ஆச்சரியமும் இல்லே... ரான பாட்டோட ட்யூனைத்தான் நீங்க வாசிச்சீங்க... இது ஒரு மலையாளப் படத்துலயும் வந்திருக்கு . அதனால நான் செய்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லே... இந்த ட்யூனைப் பொறுத்தவரைக்கும் கவிஞருக்குப் புதுசு... பத்து நிமிஷத்துல அவர் பாட்டு எழுதிக் கொடுத்தார் பாருங்க... அதுதான் கவிஞரோட அற்புதம்... அந்தச் சாதனையைச் செய்த கவிஞரைப் பாராட்டுங்க...'னு அந்த கிரெடிட் ' டை அவருக்குப் போக வெச்சேன் . என்னோட குடும்பம் , எங்க வீட்டுல நடக்கிற நல்லது - கெட்டது எல்லாம் கவிஞருக்குத் தெரியும் . அதே போல எனக்கும் அவரோட உடல் நலத்துல அக்கறை உண்டு . அவரோட குடும்பம் , சொந்த - பந்தங்கள் , கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் எனக்குத் தெரியும் . எங்க ரெண்டு பேர் வீட்டுலயும் ஏதாவது ஃபங்ஷன்னா , ரெண்டு குடும்பங்களும் தவறாம ஆஜராயிடுவோம் . ஒரு நாளாவது நான் அவரைப் பார்க்காட்டா கோபம் கூட வரும் . ரெண்டு நாள் அவரை நான் பார்க்காட்டா ராத்திரி அவர்கிட்டேயிருந்து போன் வரும் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

'என்னடா உன்னைக் காணோம்... உனக்கு ரொம்ப திமிர் வந்திடுச்சா ' ன்னு தாறுமாறா திட்டுவார் . அந்த அளவுக்கு என்மேல் உரிமை , பாசம் , அன்பு எல்லாம் காட்டினவர் கவிஞர்.

ஒரு சமயம் எனக்கு காஸ் ட்ரபிள் ' மாதிரி வந்து . குனிஞ்சா வலிக்கும்... நிமிர்ந்தா வலிக்கும்... இதை ஸ்பைனல் கார்ட்ல ஏதோ கோளாறுனு சொல்லி டாக்டர் ரங்கபாஷ்யம் நர்ஸிங்ஹோம்ல கவிஞர் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தாரு... என்னைக் கட்டிப்பிடிச்சுக் கிட்டு அழ ஆரம்பிச்சுட்டாரு . எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா , அவர் தாங்கவே மாட்டார் . நான் ஆபரேஷன்லாம் வேண்டாம் னு நர்ஸிங்ஹோம்லருந்து டபாய்ச்சுட்டு வீட்டுக்கு வந்துட்டேன் . ஆனா , கவிஞர் விடலை . டாக்டர் சௌரிராஜன்கிட்டே அழைச்சுக்கிட்டுப் போனாரு . அங்கதான் டாக்டர் ' இது வெறும் காஸ் ட்ரபிள்தான் ' னு சொல்லி மாத்திரை மருந்தெல்லாம் கொடுத்தாரு . அப்புறம்தான் கவிஞர் நிம்மதிப் பெருமூச்சே விட்டார் .

இன்னொரு தடவை எனக்கு உடல்நிலை சரியில் ஆ - பத்தாயா படுத்துக்கிட்டிருந்தேன் , ஒவ்வொரு நாளும் தவறாம ஆஸ்பத்திரிக்கு வந்தார் . பக்கத்திலே கவலையோட உட்கார்ந்து பணிவிடைகள் செய்தாரு . " அண்ணே... எனக்கு ஒண்ணுமில்லே... வீட்டுக்குப் போங்க..." னு சொன்னாக் கூட நகரம பட்டாரு . அன்பைக் காட்டியே என்னை அழ வெச்சாரு . என்கிட்டே இன்னொரு பரபாப்பான விளையாட்டும் ஆடி , வேடிக்கை பார்த்தவர் அவர் .

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 16

மெஜஸ்டிக் ஸ்டூடியோவில் நானும் ராமமூர்த்தி அண்ணாவும் மும்முரமா கவிஞரோட பாடல்களை ரிக்கார்டிங் செஞ்சுக்கிட்டிருந்தோம் . அவர் வரலை . மத்தியானம் மூணு மணி இருக்கும்... மெஜஸ்டிக் ஸ்டூடியோ வேலையை முடிச்சுட்டு கோல்டன் ஸ்டூடியோவுக்கு வேற படத்துக்கான பாட்டுகளை ரிக்கார்ட் பண்றதுக்குப் போயிட்டேன் . அந்த நேரத்துல மெஜஸ்டிக் ரங்கசாமிக்கு ஒரு போன்கால்...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 16

"ஹலோ... நான் கவிஞர் கண்ணதாசன் வீட்டுலேர்ந்து பேசறேன்... அங்கே விஸ்வநாதன் இருக்காரா...? அர்ஜெண்ட்டா ஒரு விஷயத்தை அவர் கிட்டே சொல்லணும்..." னு கேட்க , உடனே ரங்கசாமி " நீங்க யாரு பேச றது...? என்ன மெஸேஜ்...? ' னு கேட்டார் . " நான் கவிஞர் வீட்டு வேலைக்காரன் பேசறேன் உங்களுக்கு விஷயம் தெரியுமா...? கண்ணதாசன் இறந்துட் டாரு... இந்த விஷயத்தை விஸ்வநாதன் எங்கேயிருந்தாலும் அவர்கிட்டே உடனே சொல்லிடுங்க..." னு பதில் சொல்லிட்டு போனை வெச்சுட்டாங்க .

இந்தச் செய்தியைக் கேட்ட ரங்கசாமி ஆடிப்போயிட்டார் . எனக்கும் கவிஞருக்கும் இடையே உள்ள அட்டாச்மெண்ட் அவருக்கு நல்லா தெரியும் . போன் மூலமா விஷயம் சொன்னா . நான் எங்கே மயக்கம் போட்டு விழுந்துடுவேனோன்னு பயம் அவருக்கு . அதனால் உடனே ஒரு கார் எடுத்துக்கிட்டு கோல்டன் ஸ்டூடியோ வில இருந்த என்னைத் தேடி வந்துட் டாரு . ' எங்கே வந்தீங்க...? கடன் . விஷயம் தெரியுமா...? " னு தயங்கிக்கிட்டே கேட்டார் . ' என்னய்யா... இங்க வந்து விஷயம் தெரியுமா , அது இதுன்னு கட்டுக்கிட்டு... அங்கே போய் வேலையைப் பாரு... ரிக்கார்ட் பண்ணு... ஏதாவது டிரான்ஸ்ஃபர் பண்ணணும்னா பண்ணு...' னு சொன்னவுடனே , ரங்கசாமி அழ ஆரம்பிச்சார் . " உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன்... கவிஞர் கண்ணதாசன் இறந்துட்டாரு..." னு சொல்லிக் கேவிக் கேவி அழுதார் .

விஷயத்தைக் கேள்விப்பட்ட எனக்கு அடிவயித்துல பகீர்னு ஒரு கலக்கம்... நான் , ராமமூர்த்தி , டைரக்டர்கள் கிருஷ்ணன் - பஞ்சு , கம்போஸிங் க்ரூப் எல்லாருமா வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக் கிட்டு பனகல் பார்க்கு கிட்ட இருக்கிற கவிஞரோட வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்... அங்கே போய்ப் பார்த்தா - சும்மா திண்ணுனு குத்துக்கல்லாட்டமா கவிஞர் சிரிச்சபடி உட்கார்ந்திருந்தார் . அவர் இறந்து போயிட்டார்னு நியூஸ் ( இந்த நியூஸை போன் மூலமா சொன்னதே கவிஞர்தான் ! ) பரவி , வீட்டு வாசல்ல கூட்டம் வேறே சேர்ந்துடுச்சு .

கவிஞரைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நான் ' ஓ ' னு கதறி அழுதேன் . அப்ப கவிஞர் சொன்னாரு : " நான் செத்துப் போயிட்டா , நீ எப்படி அழுவேங்கிறதைப் பார்க்கறதுக்குத்தாண்டா இப்படிப் பண்ணேன்..."

" இந்த மாதிரி காட்சியை நான் பார்க் கக்கூடாது அண்ணே...' னு சொல்லி , புரண்டு புரண்டு நான் அழுததைப் பார்த்து அவர் ஒரு கட்டுரையில் , " நான் செத்துப் போயிட்டா தம்பி விஸ்வநாதன் எப்படி அழுவான் கிறதை நான் பார்த் துட்டேன்...அதனால் என்னை முதல்ல கொண்டு போயிடு இறைவா..." னு குறிப் பிட்டு எழுதியிருந்தார் .

அந்தக் கவிஞரின் வாக்கு பலிக்கக் கூடாது... நாங்கள் இருவரும் இணைபிரியாமல் ரொம்ப நாட்கள் வாழ்ந்து ரசிகர்களுக்கு நிறைய பாடல்களைத் தரவேண்டும் ' என்று ஆசைப்பட்டேன்... ஆனால் , கடவுள் போட்ட கணக்கு வேறு...

காதலிக்க நேரமில்லை ' படத்துல பாலையா அண்ணனைக் கிண்டலோட கலாட்டா பண்ற மாதிரி ஒரு பாட்டு வேணும்னு டைரக்டர் ஸ்ரீதர் விரும்பினாரு . அப்போ ராக் அண்ட் ரோல் டான்ஸ் பாப்புலராகிக்கிப்டிருந்த சமயம்... நான் அர்த்தமேயில்லாம ' ஐஸனோவர் ஆவ்லாவோ ' னு எதையோ இஷ்டத்துக்குக் கத்திப் பாடிக்கிட்டிருந்தேன் . அந்த நேரத்துல உள்ளே நுழஞ்ச கவிஞர் , ' விஸ்வநாதன்... வேலை வேணும்...' கிற பாட்டைக் கடகடவெனக் கொட்டிட்டாரு . மருதகாசி , தஞ்சை ராமையாதாஸ் போன்ற கவிஞர்களோட சில படங்களுக்கு ஒர்க் பண்ணிக்கிட்டிருந்ததால , நான் கண்ணதாசனோட ஒர்க் பண்ணிப் பத்துப் பதினஞ்சு நாட்களுக்குமேலேயே இருக்கும் . இடையில் ஒரு சின்ன இன்டர்வெல் மாதிரி ஆயிடுச்சு . இதை மனசுக்குள்ள வெச்சுக்கிட்டுத்தான் விஸ்வநாதன்... வேலை வேணும் ' னு பாட்டு மூலமாவே எனக்கு அதைக் கவிஞர்

(20.02.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)