Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 18

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

என்னோட இந்த இரண்டு ஆசைகளும் நிறை வேறணும்...

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 18

என்னோட இந்த இரண்டு ஆசைகளும் நிறை வேறணும்...

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நானும் அண்ணன் டி . கே . ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த பாடல்கள் எல்லாமே ஹிட் பல வெற்றிப் படங்களுக்கு உறுதுணையாக இருந் தோம் . ஒரு பக்கம் எம் . ஜி . ஆர் . இன்னொரு பக்கம் சிவாஜி... தமிழ்ப் படவுலகை ஆண்டு கொண்டிருந்த இந்த இரண்டு வேந்தர்களின் காரெக்டர்களைப் புரிந்து கொண்டு , அவர்களுக்கேற்றாற் போல் இசையமைத்து இருவரிடமும் நல்ல பெயர் வாங்கினோம் .

தொடர்ந்து ஹிட் சாங்ஸ் அளித்து... நாங்கள் பீக் பீரியடில் இருந்த நேரம் - எங்களுக்குள் ஒரு சின்ன ஈகோ ப்ராப்ளம் . அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி , விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடியைப் பிரிச்சுட்டாங்க... பிரிஞ்சு போச்சு... பிரியவேண்டியதாகிவிட்டது . பிரிவதென்று முடிவாகி . ஒரு வக்கீலை வைத்து அண்ணன் ராமமூர்த்திக்கு காம்பன்சேஷன் தொகை ' தர ஏற்பாடு செய்துவிட்டு வந்த பிறகும்துக்கம் தொண்டையடைக்க அழுதேன் . எனக்குப் பணம் பெரிதாகத் தெரியவில்லை . ஒரு நல்ல கலைஞரைவிட்டுப் பிரிகிறோமே...என்ற கவலை இருந்தது .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

இந்தப் பிரிவுச் சம்பவத்தினால் மூன்று நாட்கள் எங்கேயும் வேலைக்குப் போகாமல் மனசு மிகவும் நொந்து போய்க் கவிஞர் கண்ணதாசனிடம் சென்றேன் . அவர் அப்போது என் ஆறுதலுக்காகச் சொன்ன கவிதைதான்...

' நினைக்கத் தெரிந்த மனமே , உனக்கு மறக்கத் தெரியாதா...? பழகத் தெரிந்த உயிரே , உனக்கு விலகத் தெரியாதா...? '

எனக்காகச் சொன்ன இந்த ஆறுதல் பாட்டை , ஆனந்தஜோதி ' படத்தில் - தலைவன் பிரிவை நினைத்துத் தலைவி சோகமாகப் பாடும் காட்சிக்குப் பொருத்தமாக இருக்கவே , இந்தப் பாட்டைச் சேர்த்துவிட்டேன் . இப்படி நல்லது , கெட்டது எல்லாத்துக்கும் என் கூட இருந்த கவிஞர் என்னை மட்டும் தனியா விட்டுட்டு அமெரிக்காவில் இறந்து போவார்னு நான் நினைக்கலை.

கவிஞருக்கு உடல்நிலை சரியில்லா மல் , அமெரிக்காவில் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளப் புறப்பட்டுச் சென் றார் . அமெரிக்காவுக்கு என்னையும் கூப் பிட்டார் கவிஞர் . ஆனால் , என்னால் போக முடியலை . என்னுடைய மகன்கள் எல்லாம் நல்லா வரணும்கிறதுக்காக நான் சில படங்கள் எடுத்து நஷ்டமடைந்து மனநிம்மதி இல்லாத ஒரு சூழ்நிலை அப்போது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கவிஞர் அமெரிக்காவுக்குப் போய் இறங்கியதுமே . " என்னங்க நீங்க கட்மோப்பம் பேர் கேட்டாங்களாம் . இப்படிச்சொன்ன கவிஞர் . உனக்கு விகால்லாம் போட்டு வெச்சிருக்கேன் . உடனே இன்ப வா " ன்னாக வரமுடியாத கத்திலையைத் தயக்கத்தோட சொன்னான்.

அங்கே ஆப்பத்திரியில் அவரோடபார்த்துக்கிட்ட போதிலும் , - என்னைப் பத்தியே இருபத்துநாலு மணி நேரமும் நனைக்கக்கிட்டிருந்திருக்கிறார் . இக்கே விருந்து விரோடு போன டாக்டர்

அப்போ முதல்வராயிருந்த எம் . ஜி . ஆரோடு உடனே தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லக்குக்கிறார் . எம் . ஜி . ஆர் . என்னோடு போரீங்களா போகமுடியுமா எம் . ஆர் . கேட்டார் . இதனை இப்பய போகமுடியாத ஒரு சூத்த வில இருக்கேன்னு நான் சொன்னேன்.

உடனே எம் . சி . ஆர் ." அப்ப ஆ காரியம் பண்ணுங்க வி... நீங்க பாட் முக்கு ட்யூன் போடற மாதிரம் , கம் போன் பண்ற மாதிரியும் கவிகு ரோட தமாஷா பேசி விளையாட மாதிரியும் ஒரு கானெட் பண்ணி அப் புங்க . கனு சொன்னார் . அதேபோல் ஒருகாகெட் பண்ணி அமெரிக்காவுக்கு அனுப்பிச்சோம் . எங்களோட துரதிர்ஷ்டம் , அந்த காவெட் போய்ச் சேர்றதுக்குள்ள கவிஞர் இறந்துட்டார் கவிஞர் - நான் - ராமமூர்த்தி.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அண்ணா - டைரக்டர் பீம்சிங் காம்பி னேஷனல் ப ' வரிசைப் படங்களின் பாடல்கள் அனைத்துமே ஹிட்டானவை தான் எதுவும் சோடை போனதில்லை .

பீமசிங் டைரக்ட் பண்ற படமென் றால் , படத்தை ஓரளவுக்கு எனக்கும் கவிஞருக்கும் போட்டுக் காண்பிச்சிடு வாங்க . படத்தைப் பார்த்து முடித்த பிறகு நிறைய ஐடியா தோணும்... இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாட்டு சேர்த்தால் நன்றாயிருக்குமே... என்று தோணிடுச்சுன்னா , அதுக்காக ஒரு புதிய பாடல் பிறக்கும் .

இப்படிப் படங்களைப் பார்த்த பிறகு உருவான பாட்டுகள் நிறைய உண்டு . அதேபோல , இன்டர்வெல்லுக்கு முந்தியோ அல்லது பிறகோ ஒரு பாட்டு வேணுமா , வேண்டாமாங்கற விவாத மெல்லாம் எழும் . இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் , அந்தக் காலகட்டத்தில் கவிஞர் , இசையமைப் பாளர் , டைரக்டர் எல்லாரும் சுதந்திரமா செயல்பட்டாங்க . எந்தவிதக் கட்டுப்பா டும் எங்களைக் கட்டிப்போடாத காலம்... இதனாலேயே எனக்கும் கவிஞருக்கு மிடையே இருந்த அண்டர்ஸ்டாண்டிங் , அனுபவத்தின் காரணமாக நான் கவிஞ ராகி . கவிஞர் விஸ்வநாதனாகி... இரண் டறக் கலந்து ஒன்றிப்போய்ப் பணியாற்றினோம்

ஒரு கணவன் - மனைவி பரஸ்பரம் நல்லா புரிஞ்சுக்கிட்டு அனுசரிச்சுப் போனால் தான் வாழ்க்கை நல்லா அமையும் . இதேபோல்தான் நானும் கவிஞரும்

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஒற்றுமையா இருந்து , பல நல்ல குழந்தை களை ( பாடல்கள் ) பெற்றுக் கொடுத் திருக்கிறோம் . மெட்டுக்குப் பாட்டா பாட்டுக்கு மெட்டா என்ற சர்ச்சை அப் போது எழும்பியது கிடையாது . என் னோட ட்யூன்களுக்குக் கவிஞர் பாட்டு கள் எழுதியிருக்கிறார் . சில நேரங்களில் , அவர் கொடுத்த கவிதைகளுக்கு நான் ட்யூன் போட்டிருக்கிறேன் . ஒரு இசை யமைப்பாளருக்கும் கவிஞருக்கும் இடையே உள்ள அந்தப் பிணைப்பு அப்படி... ஒன்றையொன்றைச் சார்ந் துள்ள பிணைப்பு . இதையேதான் பார்த்தால் பசி தீரும் ' படத்தில்...

' கொடி அசைந்ததும் காற்று வந்ததா...

காற்று வந்ததும் கொடி அசைந்ததா...

என்று ஒரு பாட்டின் மூலமே காட்டிவிட்டார் கவிஞர் !

இறுதி மூச்சைவிடற வரைக்கும் என்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டி ருந்த அந்த அவதாரப் புருஷரான கவிஞரோட நட்பை - அவரோடு நான் பழகிய அந்த நாட்களையெல்லாம் இப்போதும் நான் நினைத்து நினைத்து அழுவதுண்டு .

அடுத்த ஜென்மத்திலயும் நான் விஸ்வ நாதனா பிறக்க வேண்டி வந்தா , நான் என் அம்மா வயிற்றிலேயே மீண்டும் பிறக்கணும் ... கவிஞர் கண்ண தாசனே என் நண்பராக மீண்டும் வரணும்... என்னோட இந்த இரண்டு ஆசைகளும் நிறை வேறணும்...

(06.03.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)