அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 19

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர் கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்நேரத்தில் இன்னொரு கவிஞன் படவுலகில் கவனத்தை ஈர்த்தவர் வாலி...

நான் ஜூபிடர் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த போது கன்னியின் சாதல்ங்கா படம் . இந்த படத்துக்கு டைரக்டர் - ராம்நாத்... ஹீரோயின் பகரிதவி . ஆண் டிாஸ் போட்டு வேடம்... கன்னியாக இன்னொரு வேடம் பட புள் போல் பாதுரிதேவிக்கு . ஆண் டிரஸ்ல வந்த மாதுரி காரெக்டருக்கு படவாய் ' தந்தவர் இசைர் . பைடாக்டர் ராம்நாத்துக்கு அசிஸ்டெண்டபாப்போடும் சுறுசுறுப்போடுடபணி செய்த அந்த இளைஞர்தான் நடிகர் - கோக்ருஷ்ணன் . டப்பிங் வாய்ஸ் கொடுப்பதிலிருந்து பல படங்களில் பலகாரக்டர்களை ஏற்று நடிப்பது வரையில் ஒரு ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கோபாலகிருஷ்ணன் , அந்தக் காலகட்டத்திலேயே எனக்கு அறிமுகமாகி இன்றும் . நெருங்கிய குடும்ப நண்பராக விளங்குபவர் . நான் முன்னுக்கு வந்து இசையும் தியறம் சான வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு என் வளர்ச்சியில் ஆர்வம் காண்பித்தவர்.

முக்தா பிலிம்ஸ் வி.சீனிவாசன் இதயத்தில் நீ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் . இதற்கு இசையமைத்தவன் நான்தான் . இந்த நேரத்தில்தான் வி . கோபாலகிருஷ்ணன ஓர் இளைரை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார் . இவர் ஒரு நல்ல கவிஞர் பாடல்கள் எழுதும் ஆற்றல் உண்டு ஏற்கெனவே சில படங்களுக்கு ஒன்றிரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார் . இருந்தாலும் நீங்கள் இவரைப் பயன்படுத்த முடியுமானால் நான் மகிழ்ச்சியடைவேன்..." என்றார் வி . கோபாலகிருஷ்ணன் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நானும் சில ட்யூன்களை வாசித்துக்காட்டி அவற்றுக்குப் பல்லவி எழுதிக்காட்டச் சொன்னேன் . அன்றாட வாழ்க்கையில் நாம் பேசும் யதார்த்தமான வார்த்தைப் பிரயோகங்களை வைத்து அற்புதமான பாடல்களை அடுத்தடுத்துக் கொட்டி என் நெஞ்சத்தைத் தொட்ட அந்த இளைஞர்தான் - கவிஞர் வாலி . இவருக்காக வி . கோபாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்ட முயற்சி வீணாகவில்லை . நான் இசை யமைத்த முக்தா ஃபிலிம்ஸ் படத்திலேயே பெரும்பான்மையான பாட்டுக்களை எழுதச் சொன்னேன் . இதையடுத்து , டைரக்டர் கே . எஸ் . கோபாலகிருஷ்ணனிடம் வாலியின் திறமை பற்றிக் குறிப்பிட்டுச் சில வாய்ப்புகள் தரும்படிக் கேட்டேன் . கற்பகம் ' படத்துக்கு எழுதும்படி சொன்னார் கே . எஸ் . ஜி . ! வாலி எழுதிய அத்தைமடி மெத்தையடி ' மன்னவனே அழலாமா பாடல்கள் ஹிட் ஆச்சு . கற்பகம் ' படமும் படு சக்ஸஸ் ! இதைத் தொடர்ந்து , கவிஞர் கண்ணதாசனோடு எப்படி ஒரு அண்டர்ஸ்டாண்டிங்கோட நான் பணியாற்றி னேனோ , அதே போல கவிஞர் வாலியும் நானும் பரஸ்பரம் அனுசரிச்சுப்போய் பல வெற்றிப் படங்களுக்குக் கடுமையா உழைச்சு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தோம் .

தமிழ்ப்பட உலகில் கவிஞர் கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்துல , " இதோ இன்னொரு கவிஞன் புறப்பட்டுவிட்டான் " என்று பேசு கிற வகையில் படவுலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார் வாலி . என்னைப் பொறுத்தவரையில் கண்ணதாசன் , வாலி இருவரையுமே என் இரண்டு கண்களாக நான் பாவித்தேன் . இந்தச் சமயத்தில் கண்ணதாசனின் காரெக்டர் பற்றியும் சொல்ல வேண்டும் .

கண்ணதாசன் எல்லா பட கம்பெனிகளுக்கும் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் பாட்டு எழுதுவார்... ஆனால் அவரைத் தவிர , வேற பாடலாசிரியர்களை எழுதச் சொல்லி நான் அணுகினா , அது அவருக்குக் கட்டோடு பிடிக்கவில்லை . அந்த அளவு என்மீது ' பொஸஸிவ் ' தனம் கொண்டிருந்தார் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர் வாலியின் வருகை அவருக்குப் பொறாமையைக் கொடுத்தது என்னவோ நிஜம் ! இது கொஞ்ச நாட்களுக்குத்தான் . அனுபவங்களும் படிப்பினைகளும் பெருகப் பெருகத் தான் ஒரு பக்குவப்பட்ட மனிதராக மாறியவுடன் , வாலியையும் அங்கீகரித்தார் கண்ணதாசன் . ஓர் உதாரணம் சொல்லணும்னா , படத் தயாரிப்பாளர் ஒருவர் கண்ணதாசனிடம் சென்று , " ' இருமலர் கள் ' படத்துல ' மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள் னு ஒரு பாட்டு எழுதி னீங்களே... அதைப்போல ஒரு பாட்டு என் படத்துக்கு வேணும்...' என்று கேட்க... அதற்கு கண்ணதாசன் . அதை நான் எழுதலீங்க... கவிஞர் வாலி எழுதின அற்புதமான பாட்டாச்சே..." என்று போற்றிச் சொல்லும் அளவுக்குக் கவிஞர் மாறியது அதிசயம்தான் !

படவுலகிலும் சரி , அதற்கு அப்பாற் பட்ட வெளியுலகிலும் சரி , எனக்கு எதிரி கள் என்று யாரும் கிடையாது . எனக்குத் தெரிஞ்ச உண்மைகளைத் தைரியமா சொல்வேன் . சிலருக்கு நான் எதிரின்னு கூடச் சிலர் எழுதியிருக்காங்க . அது அவங்களோட அபிப்பிராயம்னு நெனைச்சேனே தவிர , நான் வருத்தப் படலை . என்னோட எதிரிகிட்ட நல்ல விஷயங்கள் இருந்தா அதைப் பாராட்டக் கூடிய தாராள மனசைக் கடவுள் எனக்குத் தந்திருக்கிறார் . என்னுடைய இந்தக் குணத்தைப் புரிஞ்சுக்கிட்ட கவிஞர் கண்ணதாசன் , ' நல்ல பாடல்களை எந்தக் கவிஞர்களிடமும் நீ கேட்டு வாங்கிக் கலாம் ' என்ற அதிகாரபூர்வமான ஓர் உரிமையை எனக்குக் கொடுத்தார் . ஸோ , கண்ணதாசன் , வாலி என்று மட்டுமில் லாம வைரமுத்து , புலமைப்பித்தன் நா . காமராசன் , முத்துலிங்கம் போன்ற கவிஞர்களும் பாடல்கள் எழுதிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க . பாடல் நல்லா அமையணும்கிறதுக்காக நான் படுகிற சிரமங் களையும் உழைப்பையும் பார்த்து இவங் கள்லாம் நல்ல நல்ல பாடல்களா எழுதித் தந்து என்னைத் திருப்திப்படுத்தறாங்க... அவங்களுக்கும் மனசுக்குள் ஓர் ஆதம திருப்தி . இந்தக் கவிஞர்கள் எல்லாம் இன்னிக்கும் நான் கேட்கற பல்லவியைக் கொடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க . தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற பிறைசூடன் , காமகோடியான் போன்ற புதிய கவிஞர்களுக்கும் என்னால் இயன்ற வரை ஊக்கமும் உற்சாகமும் ஒத்துழைப்பும் தருகிறேன் . அன்று தொடங்கி இன்று வரையில் நான் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை இதுதான் .

சும்மா சொல்லக்கூடாது... கவிஞர் வாலியும் அற்புதமான பாடல்கள் நிறைய எழுதியிருக்கிறார். கஷ்டமான சிச்சுவேஷன்களுக்கெல்லாம் என்னோட உட்கார்ந்து ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார் . உயர்ந்த மனிதன் ' படத்துக்காக அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...' பாட்டை வாலி எழுத , அவ ரோட வரிகளை அனுபவிச்சு நான் இசை யமைக்க... இந்தப் பாடல் காட்சியில் சிவாஜியும் மேஜரும் ஆழ்ந்து ரசிச்சு நடிக்க... இது ஓர் அழகான காம்பினே ஷன் . இதேபோல இன்னொரு காம்பினே ஷன் - நேற்று இன்று நாளை ' படத்துக்காக தம்பி... நான் படித்தேன் காஞ்சி யிலே நேற்று...ங்கற பாட்டைக் கருத் தாழத்தோட எழுதி எம் . ஜி . ஆர் . கிட்ட சபாஷ் வாங்கினார் வாலி எம் . ஜி . ஆரோட காரெக்டரையும் , கொள்கைகளையும் புரிஞ்சுக்கிட்டு எங்க வீட்டு பிள்ளை', ஆயிரத்தில் ஒருவன் படகோட்டி அன்பே வா', 'ரிக்ஷாக் காரன் படங்களுக்காக எழுதிய எல்லாப் பாட்டுக்களும் இன்னிக்கும் ரசிகர்கள் மனதைவிட்டு அகலாத மணி மணியான பாட்டுக்கள் ஆச்சே !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞர் வாலியோட பல தடவை சண்டையும் போட்டிருக்கேன் . அதுல குறிப்பா ஒரு சண்டை - என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்லப் போறது ஒரு முக்கியமான சம்பவமும் கூட .

புகழ்பெற்ற ஜெமினி நிறுவனம் முதன் முறையாக எம் . ஜி . ஆரை ஹீரோ வாகப் போட்டு எடுத்த படம் - ' ஒளிவிளக்கு . இதுமட்டுமல்லாமல் , எம் . ஜி . ஆரின் நூறாவது படம் என்ற சிறப்பும் சேர்ந்து கொண்டது. ஆகவே , பாடல்களில் எல்லோருமே ஸ்பெஷல் கவனம் செலுத்தினோம் .

படத்தில் , எம் . ஜி . ஆர் . குடித்துவிட்டு வரும்போது அவருடைய மனசாட்சி அதைச் சுத்திக்காட்டி அறிவுரை சொல்பது போல் , அதேசமயம் எம் . ஜி . ஆரின் இமேஜ் கெடாமல் , தத்துவப் பாடம் blair வேணதர் என்பதற்காக எங்க பாடம் எம் . ஜி ஆர் . அந்தக் காட்சியை எரித்து சொல்லிவிட்டுப் போய் இந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றபடி பாடலை எழுதி , நேராக எம் . ஜி . ஆரிடம் கொண்டுபோய்க் காட்டிவிட்டு ஓகே வாங்கி வந்துவிட்டார் வாலி . நியாயமாக , அவர் எழுதிய பாடலை முதலில் என்னிடம் காட்டிவிட்டு அதன் பிறகு தான் எம் . ஜி . ஆரிடம் காட்டியிருக்க வேண்டும் . எனக்குக் கோபம் வந்து " இந்தப் பாட்டுக்கு எம் . ஜி . ஆர் . கிட்ட பே போய் ட்யூன் போட்டுக்குங்க...போங்க...' என்று வாலியிடம் கத்தினேன் . ' நான் என்ன பண்றது... அவர் கேட்டார்... கொடுத்துட்டேன்...' என்றார் வாலி . ' என்னைக் கேட்காம நீ ஏன்யா கொடுத்தே...? " னு பெரிய சண்டை போட்டேன் .

வாலி எழுதியிருந்த கவிதை நல்லாத் தான் இருந்தது . அதை எம் . ஜி . ஆர் . ஓகே பண்ணதும் சரிதான் . ஆனாலும் , நான் சண்டை போட்டற அளவுக்கு எனக்குத் தர்மசங்கடமான பரு நிலையை உருவாக்கிய அந்த நிகழ்ச்சி

(13.03.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)