Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 22

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

“எனக்குக் கிடைத்த டைரக்டர்கள் என் பாக்கியம். அது எனது பொற்காலம் என்றே சொல்லலாம்...”

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 22

“எனக்குக் கிடைத்த டைரக்டர்கள் என் பாக்கியம். அது எனது பொற்காலம் என்றே சொல்லலாம்...”

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

பாவ மன்னிப்பு பாத காணிக்கை போன்ற படங்களில் பாட்டுக்கு நடுவில் நான் ' ஹம்மிங் ' கொடுப்பேன்... விசில் சத்தம் கொடுத்திருக்கேன் . ' விசுவோட குரல் ஒரு பெக்கூலியர் டைப் னு எல்லாருக்குமே ஒரு எண்ணம் . இதனால் , " பாசமலர் ' படத்துக்கு நான் சொல்லிக் கொடுக்கிறதை நீங்க டைட்டில் சாங் பாடணும் " னு டைரக்டர் பீம்சிங் அன்புக்கட் டளை போட்டார் .

நானும் முழுப்பாடல் ஒண்ணு பாடினேன் . இப்படியே சில படங்களில் பாடினேன் .

என் இனிய நண்பர் - சோவின் முகமது பின்துக்ளக் ' படத்துக்கான பாடல்களை கம்போஸ் செய்து கொண்டிருந்தோம் . அப்போது அல்லா அல்லா... நீ இல்லாத இடமே இல்லை ' என்கிற டைட்டில் சாங் . ' இந்தப் பாட்டைப் பிரபல இந்திப் பாடகர் முகமது ரபி பாடினால் நன்றாக இருக்கும் . அவர் ஏற்கெனவே என் இசை அமைப்பில் பாடியிருக்கிறார்... என் நண்பரும் கூட . அவரைப் பாடச் சொல்லிக் கேட்கலாம்..." என்று சோவிடம் என் எண்ணத்தைச் சொன் னேன் . சோவும் " ஓகே ' என்றார் . நான் முகமது ரபியுடன் தொடர்பு கொண்டேன் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நான் நிச்சயமாகப் பாடுகிறேன். ஹஜ் யாத்திரை செல்கிறேன்.. இருபது நாட்களாகும்... பயணம் முடித்துத் திரும்பிய பிறகு பாடிக் கொடுக்கிறேன் என்று கூறினார். ஆனால் , அப்போது நாம் டில் எமர்ஜென்ஸி அமலில் இருந்த நேரம்... அதனால் படத்தைச் சீக்கிரமே முடித்து ரிலீஸ் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி படத் தயாரிப்பாளர் நாராயணன் , ' அவ்வளவு நாட்கள் தாங்காது... வேற யாரையா வது பாடச் சொல்வோமே..." என்றார் . சீர்காழி கோவிந்தராஜன் , பித்துக்குளி முருகதாஸ் என்று பல பாடகர்களைச் சொன் னேன் . எல்லாவற்றையும் கேட்ட சோ , " ஏன் நீங்க பாடினா என்ன? " என்று கூறி என்னைப் பார்த்தார்." என்னோட வாய்ஸ் யூஷுவலா இருக்கும்... அதனால்தான் வேற யாராவது புதுசா பாடலாமேனு நினைத் தேன் ' என்றேன் நான் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடகர்கள் பலருடைய பெயர்களைச் சீட்டு எழுதிக் குலுக்கிப் போட்டு எடுத்தார்கள் . என் பெயர் தான் வந்தது . நான்தான் பாடினேன் . பாட்டும் பிரபலமானது .

பீம்சிங் , ஸ்ரீதர் , கே . பாலசந்தர் . கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் , டி . ஆர் . ராமண்ணா , கே . சங்கர் ஏ . சி . திருலோகசந்தர் போன்ற டைரக் டர்கள் எனக்குக் கிடைத்தது நான் செய்த பாக்கியம் . எனது பொற்காலம் என்றே சொல்வேன் .

இவர்களிடம் உள்ள சிறப்பம்சம் - முதலில் கதையைச் சொல்லி , அதற்குத் தகுந்தாற்போல பாட்டுகள் போடும்போது யாருடைய தலையீடோ , தொல்லைகளோ இல்லாமல் , எங்களைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டனர் . ஒரு மியூஸிக் டைரக்டர் - பாடலாசிரியர் - இயக்குநர் என்கிற மூவருக்குமிடையே உள்ள மியூஸிக் டேஸ் ' , இந்த மூவருக் கடே ஒரே மாதிரி ரசனை என்கிற காம்பி னேஷன் தளத்தில் பிறக்கிற எல்லாப் பாட்டுக்களுமே ஹிட் சாங்ஸ் ஆக விடுகின்றன . ஒரு படத்தில் எட்டும்! பாட்டுக்கள் என்றால் நிச்சயம் ஏழு பாட்டுக்கள் ஹிட்டாகும் .

டைரக்டர் பாலசந்தரோடு நான் ஒர்க் பண்ணய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாட்டு வேண்டும் என்பதற்காகவே சம்பவத்தை வைத்து எக்ஸ்பரிமெண்டல் சாங்ஸாகக் கேட்பார் . ' கற்பைக் கொடுக்கும்போது ஒரு பாட்டு வேனும் பார் . தொலைஞ்சேன் நான் அப்படி ஒரு பாட்டை புன்னகை ' படத்துக்காகப் போட்டுக் கொடுத்தேன் அவள் ஒரு தொடர்கதையில் விகடகவி பாடற் மாதிரி ஒரு பாட்டு - யார் யாருக் கெல்லாம் மிமிக்ரி வருமோ அவங்களையெல்லாம் கூட்டி வெச்சு நாலஞ்சு நாட் கள் டெஸ்ட் பண்ணி . . சாயிபாபா கிளி மாதிரி பேசுவார்... சதன் தவளை மாதிரி கத்துவார்னு செலக்ட் பண்ணி , கடவுள் அமைத்து வைத்த மேடை ' என்ற அந்தப் பாட்டுல மிமிக்ரியைக் கலந்து கொடுத்தேன் . இதுக்கு 26 நாட்கள் ஆச்சு . . இதே போல அவர்கள் ' படத்தில் ஜூனியர் ' பாட்டு .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா . சென்டினரிஹால் ஹவுஸ்ஃபுல் . நாங்கள்லாம் மற்ற கலை நிகழ்ச்சிகளைப் பார்க்க உடகார்ந்துக்கிட் டிருக்கோம் . அப்போது பாலசந்தர் திடீரென்று ஒரு அறிவிப்பு செய்தார் . இந்த மேடையிலேயே இப்போது நான் ஒரு காட்சியை விவரிப்பேன் . காட்சிக் கேற்ப கவிஞர் பல்லவி எழுதுவார் இந்தப் பாட்டுக்கு விஸ்வநாதன் யூன் போட்டுக் கொடுப்பார் . ஒரு பாட்டு எப்படி உருவாகிறது என்பதை உங்களுக்கு நாங்கள் ' லைவ் ' ஆக இங்கே நிகழ்த்திக் காட்டுகிறோம்...அப்படி நடத்தும்போது நாங்க எதாவது கோபமா பேசிக்கிட்டாலோ , இல்லே சண்டை போட்டாலோ நீங்க அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்.... " என்று சொல்லி விட்டார் . எங்களுக்கெல்லாம் கொஞ்சம் திகைப்புத்தான் . இருந்தாலும் அந்தச் சவாலை ஏத்துக்கிட்டு அப்பவே ட்யூன் போட்டோம் . பாடல் வரிகள் எழுதினோம் . . பாலுவைக் கூப்பிட்டுப் பாடச் சொல்லி , ரிகர்சல் பார்த்தோம் . இந்தப் பாட்டு கம்போஸ் பண்ற நிகழ்ச்சி மட்டும் ஒண்ணே முக்கால் மணி நேரம் நடந்தது . அடுத்த நாளே வங்கம்

பாட்டோட ரிக்கார்டிங்கையும் முடிச்சுட் டோம் . அங்கும் இங்கும் ' என்ற அந்தப் பாட்டு அவர்கள் ' படத்தில் இடம் பெற் றது . இப்படி பாலசந்தர் நாவல்ட்டியா - ஒவ்வொரு படத்திலும் பண்ணுவார் . இந்த இன்ஸ்பிரேஷனில்தான் ' சிப்பி இருக்குது முத்து இருக்குது ' பாட்டை ' வறுமையின் நிறம் சிவப்பு ' ல நுழைச் சாரு .

பாலசந்தர் யூனிட்டில் வேறொரு படம் . இதற்கு மியூஸிக் டைரக்டர் வி . குமார் . கவிஞர் வாலி எழுதிய பாடல் ஒன்று . இந்தப் பாட்டை விசு பாடினால் நன்றாக இருக்கும் ' என பாலசந்தர் விரும்பியிருக்கிறார் . என் மீது ரொம்ப மரியாதை உள்ளவர் குமார் . அதனால் நேராக என் வீட்டுக்கு வந்து விட்டார் . நான் பாட வேண்டும் என்பது எல்லா ருடைய விருப்பம் எனத் தெரிவித்தார் . ஒப்புக்கொண்டேன் .

குமார் விரும்பியபடியே பாடினேன் . இருந்தாலும் , இன்னும் கூட நல்லா பாடி இருக்கலாமோ ' என்ற அதிருப்தி என் மனசுக்குள் . இதை குமாரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன் . " நான் நினைச்சதுக்கு மேலேயே பாடிட் டீங்க... ரொம்ப நல்லா வந்திருக்கு..." என்றார் மகிழ்ச்சியோடு . அந்தப் பாட்டு தான் ' உனக்கென்ன குறைச்சல்... நீ ஒரு ராஜா... அனைவருக்கும் திருப்தி - என்னைத் தவிர !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

டைரக்டர் திருலோகசந்தரோடு நான் பணியாற்றிய முதல் படமே - 'வீரத் திருமகன் ! எல்லா பாட்டுக்களும் ஹிட் ! தங்கை ' படப் பாடல்களும் ஹிட் அதே போல அன்பே வா ' ஒரு மியூஸிகல் மூவி மாதிரி... ' ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ' பாட்டு உள்பட ! பாரதவிலாஸ் ' படத்தில் , தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்த சஞ்சீவ்குமார் , மது போன்ற மற்ற மொழிகளின் சூப்பர் ஸ்டார்களை நடிக்க வைத்து வித்தியாசமான ஒரு பாடல் காட்சியைத் தந்தார் .

கே . எஸ் . கோபாலகிருஷ்ணன் நல்ல மியூஸிக் டேஸ்ட் உள்ளவர்... அவர் பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். 'சிந்துநதியின் மிசை...' பாட்டுக்கு - பாரதி எழுதற மாதிரியே அந்த எஃபெக் டைப் பாட்டுல கொண்டு வரணும் என்று என்னோடு உழைத்தார் . டயலாக் குகளைச் சொல்வதிலும் சரி , எழுதுவதும் சரி , டைரக்ட் பண்ணும் போதும் சரி... ஒரு சின்னப் பையன் மாதிரி படு சுறுசுறுப்பாக , உற்சாகமாக இருப்பார் . எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார் . பாசமுள்ள குடும்பங்கள் இன்றும் இருக்கின்றன என்றால் அதற்கு கே . எஸ் . ஜி -யின் ( படங்கள் ) பங்கும் கணிசமாக உண்டு .

டைரக்டர் ராமண்ணாவை எடுத்துக் கொண்டால்... பந்தோட ' டொக் ' சத்தத்துடன் பறக்கும்... பந்து பறக்கும் ' என்ற பாட்டு... இன்னொரு படத்துல சடுகுடு பாட்டு... இப்படி வெரைட்டியா கொடுப்பார்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஆலயமணி ' , ஆண்டவன் கட்டளை ' , ' பணத்தோட்டம்... கே.சங்கர் இயக்கிய படங்களில் பாடல் காட்சிகள் எல்லாமே அற்புதமாக இருக்கும் !

எஸ் . ஏ . சந்திரசேகரன் , ஆர் . சி . சக்தி ஆகியோர் படங்களிலும் பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்வார்கள் .

" டைரக்டர் ஸ்ரீதர் படங்களில் மட்டும் எல்லாப் பாட்டுக்களும் ஹிட் ஆகிறதே...அது எப்படி...?" என சிலர் என்னிடம் கேட்பதுண்டு . ' நான் இசை அமைப்பதற்கு முன்பே அவர் ஏ . எம் . ராஜாவை வைத்துக்கொண்டு கல்யாண பரிசு ' , ' தேன்நிலவு ' படங்களில் தேனிசைப் பாடல்களைத் தந்தவராயிற்றே " என்று சொல்வேன் .

'ப' வரிசைப் படங்கள் மூலம் நானும் ராமமூர்த்தியும் பிரபலமாக இருந்த நேரம்... மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியின் போதுதான் முதன் முதலாக நான் ஸ்ரீதரைச் சந்தித்தேன் .

அடுத்த நாள் எங்களை வரச் சொன்னார் ஸ்ரீதர் . சென்றோம். ஒரு கதையைக் கச்சிதமாகக் கூறினார் . அப்போதே ட்யூன் போடுமளவுக்கு எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் ' கொடுத்த அந்தக் கதை...

(03.04.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)