அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 23

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

“எனக்கு வித்தியாசமான தயாரிப்பாளர்கள் கிடைத்ததால் தான் எனக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தது.” - எம்.எஸ்.வி

டைரக்டர் ஸ்ரீதர் எங்களுக்கு நெஞ்சில் ஓர் ஆலயம் ' கதையைக் காட்சிவாரி யாகச் சொன்ன அழகிலேயே நாங்களும் ஒன்றிப்போய் அப்போதே ட்யூன்கள் உருவாகத் தொடங்கின . ஸ்ரீதர் , அவரு டைய உதவியாளர் கோபு , கவிஞர் கண்ணதாசன் . நான் , ராமமூர்த்தி அண்ணா எல்லாருமாக ஓஷியானிக் ஓட்டல் ரூமில் உட்கார்ந்து ஒரே நாளில் ஐந்து பாட்டுக்களை கம்போஸ் பண்ணி விட்டோம் . எங்கிருந்தாலும் வாழ்க ' நினைத்ததெல்லாம் ' , சொன்னது நீதானா ' பாட்டுக்கள் அங்கே ஜனித்தவை தான் . எல்லாமே ஹிட் ' என்றால் அதற்கு முக்கிய காரணம் - அழுத்தமான கதை ! கதைக்கேற்ற பாடல்கள் . . ' நினைப்பதெல்லாம் ' பாட்டுக்கு இசையமைத்தபோது எனக்கு அவ்வளவு பெரிசாகத் தெரிய வில்லை . இன்னிக்கு இந்தப் பாட்டைக் கேட்கும் போது எனக்குப் புல்லரிக்கிறது . ஸ்ரீதரைப் பொறுத்தவரையில் . காமிரா மேன்வின்சென்ட் துணையோடு கலை நயம் , கவிதை நயம் கலந்து காட்சிகளா கக் கொடுத்தார் . அவரும் நாங்களும் இணைந்து பணியாற்றிய போலீஸ்கா ரன் மகள் ' , ' காதலிக்க நேரமில்லை ' என வரிசையாகப் பாடல்கள் செம ஹிட்... அடி தூள்தான் !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

இதற்கிடையில் ஸ்ரீதர் , " நெஞ்சம் மறப்பதில்லை ' னு ஒரு படம் எடுக்கப் போறேன்... மகான் தியாகராஜரின் கிருதி களை மக்கள் எப்படி மறக்கவில்லையோ அதைப்போல இப்படத்தின் பாடல்களும் அமையவேண்டும் " என்றார் . இதற்காக ஐந்து மாதங்கள் மண்டையை உடைச்சிக்கிட்டோம் . ஒண்ணும் வரலை . பம்பாய்க்குப் போனோம் . ஒரு ' திகில் ' டைப் படம்கிறதால க்ளைமாக்ஸ் பாட்டுக்கு ' ஜல் ஜல் ' சத்தம் எல்லாம் இணைச்சு எடுத்துக்கொண்டிருந்தோம் . அப்போது ஊரிலிருந்து எனக்கு ஒரு டெலிகிராம் . என் தாய்மாமன் இறந்து விட்டதாகவும் உடனே கிளம்பி வரச் சொல்லியும் தந்தி . பாட்டை முடிச்சுக் கொடுத்துட்டு நான் மெட்ராஸுக்கு வந்துவிட்டேன் . ஹார்ட் அட்டாக்ல என் மாமா உயிர் பிரிஞ்சுடுச்சு . ' நெஞ்சம் மறப்பதில்லை ' படம் சுமாரா போனாலும் , பாட்டுக்கள் என்வரையில் மறக்க முடியாதவையாகிவிட்டன .

ஸ்ரீதரோட சிந்தனையில் கலைக் கோயில் ' , ' வெண்ணிற ஆடை ' என இரண்டு சபஜெக்ட்டுகள் இருந்தன . ஒரு மியூஸிக்கல் படம் பண்ணணும்கிறது என் நீண்டநாள் ஆசை ! இந்த இரண்டு படங் களை யார் யார் எடுக்கிறதுன்னு முடிவு பண்ண சீட்டுக் குலுக்கிப் போட்டோம் . எனக்கு ( பாக்யலட்சுமி புரொடக்ஷன்ஸ் ) ' வெண்ணிற ஆடை 'யும் அவரோட ( சித்ராலயா ) கம்பெனிக்கு ' கலைக் கோயில் ' என்றும் வந்தன . இருந்தாலும் , கலைக்கோயில் ' படத்தை நான்தான் எடுப்பேன்னு சண்டை போட்டேன் . ஏக விவாதத்துக்குப் பிறகு எனக்கு விட்டுக் கொடுத்தார் ஸ்ரீதர் . அன்னிக்கே கலைக் கோயில் ' சப்ஜெக்ட்டைப் பேசி அலசி னோம் . உடனே ஷூட்டிங்கும் ஆரம்பிச்சிட்டோம் .

டைரக்டர் ஸ்ரீதர் இதற்குமுன் தான் எடுத்த படங்களைவிட இந்தப் படத் தோட சப்ஜெக்ட்டை அனுபவிச்சு , கடுமையா உழைச்சு எடுத்தார் . படத் தைப் பார்த்தேன் . ' ஹிட் . சாங்ஸ் , காமெடி , என்டர்டெயின்மெண்டோட ஒரு ( காதலிக்க நேரமில்லை ' ) படத்தைக் கொடுத்துட்டு , கலைக்கோயில்ங்கிற கிளாஸிக்கல் படத்தைக் கொடுக்கி றோயே...' என்ற பயம் எனக்கு வர ஆரம் பிச்சுது . என்னோட அபிப்ராயத்தை அறிய ஸ்ரீதர் , என்னைத் தேடினார் . நான் மூணு நாட்கள் அவர் கண்ணில் படாமல் இருந்தேன் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அவருக்கு நிறைய ஹோப் இருந்தது , படம் நல்லா போகும் என்று . ஆனால் , படம் சரியாகப் போகலைன்னு தெரிஞ்சதும் ஸ்ரீதர் அஞ்சு நாட்கள் சாப்பிடலே... தூங்கலை . அப்படியொரு நல்ல உள்ளம் படைத்த கலைஞர் ஸ்ரீதர் . ஆரம்பத்திலேயே , ' படவுலகில் விசு புகழைச் சம்பா தித்தாலும் இன்னும் பணம் சம்பாதிக்க வில்லை ' என்ற நல்ல எண்ணத்தோடுதான் எனக்கு கமர்ஷியலாக ஒரு படம் எடுத்துத்தர விரும்பினார் ஸ்ரீதர் . ஆனால் , நான்தான் ' கலைக்கோயில் ' படம் எனக்கு என விடாப்பிடியாக இருந்தேன் . அவரோடு பல மியூஸிக் டைரக் டர்கள் பணியாற்றி இருந்தாலும் குறுகிய காலத்தில் நானும் அவரும் குடும்ப நண்பர்களாகும் அளவுக்கு நெருக்கமானோம் .

தமிழ்ப் படவுலகின் நெளிவுசுளிவு களையும் கஷ்ட நஷ்டங்களையும் அறிந்த தோடு , படம் பார்க்க வரும் ரசிகர்களின் டேஸ்ட்டையும் உணர்ந்து பிரமாண்ட மான படங்களைத் திரையுலக ஜாம்ப வான்களான ஜெமினி அதிபர் எஸ் . எஸ் . வாசன் , ஏவி . எம் . செட்டியார் . மாடர்ன் தியேட்டர்ஸ் டி . ஆர் . சுந்தரம் , ஜூபிடர் சோமு போன்றவர்கள் தந்தார் கள் . இவர்கள் காலத்தில் நான் பணியாற் றியது பூர்வஜென்ம புண்ணியம்...

சாந்தி தியேட்டரில் பாலும் பழமும் ' படத்தின் முதல் நாள் மாலைக் காட்சி... படம் பார்க்க ஜெமினி அதிபர் எஸ் . எஸ் . வாசன் , தியேட்டர் அதிபர் ஜி . உமாபதி மற்றும் சில வி . ஐ . பி -க்கள் வந்திருந்தனர் . இன்டர்வெல்லின்போது வாசன் சார் காலில் விழுந்து நான் ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டேன் . இந்தப் படத்துக்கு மியூஸிக் போட்டிருக்கேன் ' என்பதையும் சொன்னேன் . ' அப்படியா !

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

உன்னை எங்கோ பார்த்திருக்கேன் போலிருக்கே ? ' என்று கேட்டார் . நான் முன்பு ஜெயினியில் ' ஹரிச்சந்திரா ' போன்ற சில படங்களுக்கு கோரஸ் ) வாய்ஸ் கொடுத்ததைச் சொன்னேன் . இருதக் கேட்டுச் சிரித்துக்கொண்டே பாலும் பழமும் ' பாட்டுக்கள் நல்லா இருக்கு . என்று பாராட்டினார் .

கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் சாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது . நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம் . வாருங்கள் . . விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களே ! னு வெளியில் வந்து அவரே எங்களை வரவேற்றார் . உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார் . பெரிய வர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்று கொண்டே இருந்தோம் . " நான் உட்காரச் சொல்றேன் . உட்காருங்க . " என்றார் அன்போடு . நாங்கள் உட்கார்ந்தோம் .

" நீங்கள் பல படங்களுக்கு இசை அமைச்சு நல்ல புகழோட இருக்கீங்க . . என்னோட அடுத்த தயாரிப்பு வாழ்க்கைப் படகு ! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூஸிக் டைரக்டரா போடணும்னு எனக்கு வேண்டியவங்க , டிஸ்ட்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் , ஏன் என் வீட்டில் கூடச் சொல்லிட்டாங்க... நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன்... நான் நிறைய ஆட்களை வெச் சிருக்கேன்... இது நொள்ளை அது நொள் ளைனு குற்றம் சொல்லிக்கிட்டிருப் பாங்க..." என்று வாசன் சார் சொன்னார் . எனக்கு ஒன்றுமே புரியலை . ராமமூர்த்தி அண்ணனோ என் தொடையைக் கிள்ளி " என்ன விசு . . . போயிடலாமா ? " னு கிசுகிசுத்தார் . முழுசாதான் கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்னு " ஏன் சார் அப்ப டிச் சொல்றீங்க ? " னு நான் கேட்டேன் .

' இங்கே நிறைய ஆட்களுக்குச் சம்ப ளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்ரா யம் சொல்றதுக்கு... இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமேன்னாவது சொல் வாங்க... உங்களை ரொம்ப ' பன்ச் ' பண்ணுவாங்க . பின்ச் பண்ணுவாங்க... இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ' னு வாசன் சார் கேட்டார்

யோசிக்கறதுக்கு இரண்டு நிமிஷம் டயம் கேட்டேன் . ' நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ? " ன்னார் அவர் ரொம்பப் பெருந்தன்மையோட நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம் .

வாசன் சாரோட செக்ரெட்டரி பி . பி . நம்பியார் . அவர் என் நண்பரும் கூட அவரிடம் சென்று " என்ன முதலாளி இப்படிச் சொல்றாரே... பயமா இருக்கே ? னு கேட்டேன் . அதற்கு நம்பியார் , ' ஒண்ணும் பயப்படாதீங்க... தைரியமா ஒப்புத்துக்கோங்க...அவர் நல்ல மியூஸிக் டேஸ்ட் . உள்ளவர் . அவர் சும்மா டெஸ்ட் பண்றார் உங்களை . . துணிச்சலா செய்யுங்க..." என்றார் .

மறுபடி உள்ளே போனோம் . " என்ன முடிவு பண்ணீங்க . . ' னு வாசன் சார் கேட்டார் .

" ஐயா... நீங்க எங்களைச் சோதிக்கப் படாதுய்யா... நாங்க இன்னும் நிறையக் கத்துக்கணும்... நிறையப் பண்ணணும்னு ஆசைப்படறோம்...நாங்க சின்ஸியரா பண்ணித்தருவோம் ' னு சொன்னேன்.

' அதெல்லாம் தெரிஞ்சுதான் கூப்பிட் டிருக்கோம்... சரி...' னு ஒரு பெல் அடிச்சாரு . இரண்டு செக் வந்தது . செக் இருந்த கவரைப் பிரிச்சுக்கூடப் பார்க் காம அப்படியே வாங்கி பைக்குள்ள வெச்சிக்கிட்டோம் .

" என்ன சம்பளம் வேணுமோ சொல் லிடுங்க நம்பியார்கிட்டே . நீங்க என்ன கேட்டாலும் தருகிறேன்..." என்று சொல்லி வாசன் சார் எழுந்தார் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நம்பியார் அறைக்குச் சென்று , என்ன சம்பளம்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னார்... எங்களுக்குக் கேட்டுப் பழக்கமில்லை... மனத்திருப்தியோட அவர் என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிறோம்" என்று சொல்லிவிட்டு நானும் ராமமூர்த்தியும் அவங்கவங்க வீட்டுக்குப் போயிட்டோம் . வீட்டுக்குப் போய் செக் கைப் பார்த்தா ரூ . 10 . 001 / - என்று இருந்தது . இதுவரையில் அட்வான்ஸ் தொகையா ஆயிரத்தொண்ணுக்குமேல் நான் வாங்கினதே கிடையாது . பத்தா யிரத்து ஒண்ணைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ! ஒருவேளை தவறாக எழுதி விட்டார்களே என்ற சந்தேகத்தோடு உடனே ராமமூர்த்தி அண்ணாவுக்கு போன் போட்டுக் கேட்டேன் . அவருக்குத் தந்த செக் ' கிலும் 10 . 001 - பாய்தான் என்றார் . பிரமித்துப் போனேன் . இதற்கு முன்பு பல கம்பெனிகளில் நூற்றுக்கணச் - படங்களுக்கு வேலை செய்திருக்கிறோம் . ஆனால் , வாழ்க்கைப் பாது படத்துக்கு வாசன் சார் அளித்த சம்பளத்தைப் போல வேறு யாரும் அதுவரை மில் எங்களுக்குத் தந்ததில்லை!

பாட்டு கம்போஸிங்கின் போது . ஜெமினி கதை இலாகாவைச் சேர்ந்த வேப்பத்தூர் கிட்டு , சீனிவாசன் ஆகியோர் எங்களைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள் . கோர்ட் கூண்டுக்குள் நிக்க வெச்ச மாதிரி ஒரு உணர்வு எங்களுக்கு .

ஒரு பாட்டுக்குப் பத்துப் பன்னிரண்டு பல்லவி , ட்யூன்லாம் போடுவோம் . வாசன் சார் உன்னிப்பா கேட்டு சிலதை செலக்ட் பண்ணுவார் . அப்போது எற்பட்ட ஒரு அனுபவம்...' நான் கலைஞன் அல்ல உன்னைச் சிலை வடிக்க... நான் கவிஞன் அல்ல உன்னைக் கவிபாட...' - இப்படி ஒரு பல்லவியை கவிஞர் எழுதிட்டாரு . . நாங்களும் ட்யூன் போட் இக்கொடுத்துட்டோம்

" அருமையான கவிதை வரிகள்... அழகான ட்யூன்... ஆகா... பிரமாதம்...' னு பாராட்டினார் வாசன் சார்...

அவருடைய பாராட்டைக் கேட்டு எனக்கு உச்சிக் குளிர்ந்தது . இந்தச் சமயத் துலதான் . " அற்புதமான ட்யூன் போட் டிருக்கீங்க விஸ்வநாதன் - ஆனால் இந்தப் பாட்டு என் படத்துக்கு ஒத்துக் காது..." என்றார் அவர் . எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . அவர் விளக்கமாகவே சொன்னார்...

" நான் பெரிய கவிஞன் இல்லீங்க. "நான் பெரிய இசையமைப்பாளன் இல்லீங்க ' னு அந்தத் திறமை நிறைய இருக்கிற ஒருத்தன் தன்னடக்கத்தோட சொல்லிப்பான்... ஆனால் , ' வாழ்க்கைப் படகு ' ஹீரோ அப்படி இல்லியே... ஜெமினி கணேசன்... காதல் மன்னன்... நீங்க இந்தப் பாட்டை சிவாஜி கணேச னுக்குப் போட்டீங்கன்னா பிரமாதமா இருக்கும் . அவர் சிறந்த நடிகர்... அவருக்கு இது சரியா இருக்கும்... அதனால் இந்தப் பல்லவியை மாத்தி டுங்க... வேற ஒண்ணு கொடுங்க... என்றார் வாசன் சார் , மிகவும் பொறுமையோடு . சினிமாவின் அனைத்துத் துறை களையும் கரைச்சுக் குடித்த அவரிடம் இருந்து யாருக்கு எப்படிப் பாட்டு அமைய வேண்டும் என்கிற பாடம் கற்றுக்கொண்டோம் அன்று . பிறகு நேற்றுவரை நீ யாரோ... நான் யாரோ' என்ற பாட்டைப் போட்டுக்கொடுத் தோம்.' ஓகேன்னுட்டார் . அவரோடு நான் பணியாற்றிய அனுபவம் பின்னா ளில் , எம் . ஜி . ஆர் . நடித்த ஒளிவிளக்கு படம் எடுக்கும் போது நிறைய உதவியது .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அடுத்து , ஏவி. எம். செட்டியாரைப் பொறுத்தவரையில், 'வரிகள் எல்லாம் ஸ்பஷ்டமாக இருக்க வேண்டும் என்பார். பாட்டு ரிக்கார்டிங் ஆனவுடனே கேட்க வருவார். கூட மகன் குமரனும் வருவார் . இவர் நல்ல கிரிட்டிக் மியூஸிக் டேஸ்ட் உள்ளவர் . நிறைய ஐடியா தருவார் . செட்டியார் சில சமயம் பாட்டைக் கேட்டுட்டு ' எனக்குப் பிடிக்கலை ' னு எழுந்து போயிடுவார். "சார், உங்களுக்குப் பிடிக்கலைன்னா மாத்திடுவோம்"னு சொல்வேன் இல்லே... முழுப் பொறுப்பையும் உங்ககிட்ட விட்டுடறேன்... நீங்க பார்த்துக்குங்க. உங்களுக்கு நம்பிக்கை இருந்தா அதையே வச்சுக்குங்க"னு சொல்லிட்டுப் பாயிடுவார். இப்படித்தான் அன்பே வாட்டத்துக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி - ஆர் . சுந்தரம் . இவரிடம் எனக்கேற்ப்பட்ட விசித்திரமான ஒரு அனுபவம். 'பாசவலை‘ என்ற படத்துக்குப் பட்டுக் கேட்டை கல்யாணசுந்தரம் பாட்டு படத்துல ராஜாமணி 'ங்கற ஒரு காரெக்டர். இந்த காரெக்டர் பாடற மாதிரி. என் கண்ணைக் கேள் சொல்லும்... அதில் காதல் மீன்கள் துள்ளும்...' னு பட்டுக் கோட்டை கவிதை நயத்தோட. ஒரு பாட்டு எழுதினாரு. நாங்க ஜிக்கியைப் பாட வெச்சு ரிக்கார்டிங் முடிச்சுட்டு மெட்ராஸீக்குக் கிளம்பிக்கிட்டிருந்தோம். அந்தச் சமயத்துல டி.ஆர்.சுந்தரம் எங்களைக் கூப்பிடறதா! சொன்னாங்க நாங்களும் போனோம்.

நீங்கதான் விஸ்வநாதனா? பாட்டு நல்லாத்தான் இருக்கு ஆனா, என்னோட ஹீரோயினுக்குப் பொருத்தமா இல்லே. ஒரு அஞ்சலியையோ, பப்பியையோ, சாவித்திரியையோ ஹீரோயினா நான் போடலை. ஒரு புதுமுகத்தைப் போட்டிருக்கேன். உங்க பாட்டால் அதுக்குப் பேரு வரணும். நீங்க இப்படி பாட்டுப் போட்டா எப்படி‘னு கேட்டார்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்ட நான் பட்டுக்கோட்டை கிட்ட வந்தேன்..."

“யோவ்... நீ கொஞ்சம் இறங்கி வரணும்...”னேன்.

" நான் ஏன் இறங்கணும் ? இந்தப் பல்லவியை ரசிக்கத் தெரியாதவர் ஒரு ரசிகரா ? என்னால் முடியாது.... நான் போறேன்‘னு எழுந்தார் பட்டுக் கோட்டை .

“யோவ் . டி . ஆர் . எஸ் சொல்றதுல நியாயம் இருக்கு . புதுசா ஒரு பொண்ணு நடிக்க வருது... அதுக்கேத்தபடி பாட்டு பாடச் சொல்றாரு...”

அப்ப நான் பிள்ளையார்சுழி போட றேன . நீங்க பாட்டு எழுதிக்குங்க... ' என்றார் பட்டுக்கோட்டை , கிண்டலாக .

“மச்சான் உன்னைப் பார்த்து மயங்கிப் போனேன் நேத்து'னு எதையாவது எழுத வேண்டியதுதானே" என்று நான் அதோ உளறினேன் இதையே பல்லவியா வெச்சுக்கிட்டு லொள் லொள்...'ங்கிற பாடடை பட்டுக்கோட்டை எழுதிக் கொடுத்தாரு . அது 'ஹிட்' ஆகி அந்த நடிகைக்கு ‘லொள் லொள்' ராஜாமணின்னே பேர் வந்துட்டது!

இப்படி எனக்கு வித்தியாசமான தயாரிப்பாளர்கள் கிடைத்தார்கள். வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தது.

நான் இசையமைத்த பாடல்கள்! ஹீட் ஆனதில் என் குழுவில் வாசித்த கலைதர்களுக்கு கணிசமான பங்குண்டு என் குழுவில் தத்தா -மகன் பேரன் என முன் தலைமுறையினர் பணியாற்றுவது ஒரு சிறப்பம்சம்... அவர்களைப் பற்றி...

(10.04.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)