Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 20

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

"இணைந்த கைகள் ' படம் எடுக்கிற ஐடியாவை எம்.ஜி.ஆர். ஏனோ ட்ராப் பண்ணிட்டார்!" - எம்.எஸ்.வி

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 20

"இணைந்த கைகள் ' படம் எடுக்கிற ஐடியாவை எம்.ஜி.ஆர். ஏனோ ட்ராப் பண்ணிட்டார்!" - எம்.எஸ்.வி

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ளிவிளக்கு படத்தில் வரும் ஒரு காட்சியை எம் . ஜி . ஆர் , எனக்கும் கவிஞர் வாலிக்கும் விலாவாரி யாக எடுத்துச் சொல்ல... அதற்கேற்ப வாலி ஒரு பாட்டை எழுதி என்னிடம் காட்டாமல் எம் . ஜி . ஆரி டம் ' ஓகே ' வாங்கிக்கொண்டு வந்த தைப் பார்த்து . ட்யூன் போட்டுக் கொடுத்தது நான்... படத்தோட சிச்சுவேஷனை எம் . ஜி . ஆர் . சொன் னாருதான்... இருந்தாலும் என் ட்யூனுக்கேற்ப பல்லவி வருதா இல்லையான்னு நான் முதல்ல பார்க்க வேண்டாமா ? " னு கோபத் தோடு கேட்டேன் .

வாலிக்கும் கோபம் வந்து , ' நான் சந்தத்துக்கு ஏத்தமாதிரி தானே பாட்டு எழுதியிருக்கேன்... என்னை ஏன் கோவிச்சுக்கிறங்க... என்கிட்ட ஏன் சண்டை போடறீங்க . னு பதிலுக்குக் கத்தினார் . இரண்டு பேருமே ஒருத்தருக்கொருத் தர் கோவிச்சுக்கிட்டோம் . வாலி கிட்ட காரணத்தைச் சொல்ல முடி யாத நிலைமை அப்போ அப்புறமா சொல்லக்கலாம்னு வாலியை விட்டு விட்டு நான் ' எம் . ஜி . ஆரை நைஸா தாஜா பண் ணிப் பார்க்கலாம் ' னு அவர் தனி மையில் இருக்கிற நேரமாகப் பார்த்துச் சந்தித்தேன் .

" வாலி எழுதியிருக்கிற அந்தப் பாட்டு வேண்டாமே...' னு நான் சொன்னேன் .

" என்... என் வேண்டாங் கிறே ? னு எம் . ஜி . ஆர் . திருப்பித் திருப்பிக் சேட்டார் .

எம் . ஜி . ஆர் . சொன்ன சிச்சு வேஷனுக்கு தைரியமாகச் சொல் , நீ மனிதன்தானா ? ' னு வாலி பல்லவி எழுதியிருந்தார் . அதே சமயத்துல , சிவாஜி நடித்த ' லட்சுமி கல்யாணம் ' கிற படத்துக்காகக் கவிஞர் கண் தாசன் யாரடா மனிதன் அங்கே... கூட்டி வா அவனை இங்கே...' என்ற பல்லவியோடு ஆரம்பிக்கும் ஒரு பாட்டுக்கு நான் ட்யூன் போட்டுக் கொடுத்து ரிக்கார்டிங் கூட முடிச்சாச்சு . இந்த விஷயத்தை எம் . ஜி . ஆர் . கிட்ட எந்த ஒளிவுமறைவும் இல் லாம , வெளிப்படையாகவே நான் விளக்கிச் சொன்னேன்...

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

'ஒளிவிளக்கு , லட்சுமி கல்யாணம் - இரண்டு படங்களுக்குமே நான் தான் மியூஸிக் டைரக்டர் . நீங்க சொன்ன சிச்சுவேஷ னுக்கு வாலி எழுதிய பாட லின் ஆரம்ப வரிகளும் ' லட்சுமி கல்யாணம் ' படத்துக்குக் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளும் கிட்டத் தட்ட ஒரே மாதிரியாக இருக்கு...நாளைக்கே உங்க படம் ரிலீஸாச்சுன்னா, 'என்ன விசு... நீ அங்கேயும் வேலை செய்யறே.... இங்கேயும் செய் யறே... இதைப் பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக் கலாமே...' னு நீங்க என்னைத் தான் கேட்பீங்க... அதனால தான் நான் இதை மறைமுகமா உங்ககிட்ட சொன்னேன்." என்றேன் .

எம் . ஜி . ஆர் . உடனே வாலியை வரவழைச்சு, "இப்படி ஒரு சிக்கல்ல விசு மாட்டிக்கிட்டுத் தவிக்கிறாரே ? என்ன பண்ணலாம் ? " னு அவர்கிட்ட கேட்டார் .

" வாலி எழுதிய பல்லவி ரொம்ப நல்லாத்தான் இருக்கு... சிக்கல் வந்ததால் தான் நான் வேணாம்னு பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்திடுச்சு... " என்றேன் நான் .

கவிஞர் கண்ண தாசனுக்கும் எம் . ஜி . ஆருக்கும் அப்போ டெர்ம்ஸ் சரியில்லாத நேரம்... அதனால நான் ஒரு பந்து மாதிரி இருவர்கிட்டயும் அகப்பட்டுத் திண்டாடினேன் .

இந்தப் பிரச்னையிலும் எம் . ஜி . ஆர் " விசு.... நீ கவிஞர்கிட்ட ஏதாவது பேசிச் சமாளிக்க முடியுமானு பாரேன் . என்றார் .

வேறுவழியில்லாமல் நான் கவிஞர் கால்ல போய் விழுந்தேன் . அவர்கிட்ட விஷயத்தைச் சொன்னேன் ,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கவிஞருக்குக் கடுங்கோபம் வந்து . " நான் வட்டிக்குப் பணம் வாங்கிப் படமெடுத்துக்கிட்டிருக்கேன்... நான் அந்தப் பாட்டுக்கு உண்டான ஸீனைக் கூடப் படமா எடுத்து முடிச்சாச்சு... இந்த நிலையில் அதை மாத்தறதோ , ரீ - ஷூட் பண்றதோ முடியாத காரியம்... நீ மாத்தணும்னு சொன்னா நான் உடனே மாத்த ணுமா ? மனசுக்குள்ள நீ என்ன நெனைச் சுக்கிட்டிருக்கே ? " னு கன்னாபின்னானு என்னைத் திட்டித் தீர்த்துட்டார் .

எம் . ஜி . ஆர் . என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்..." நீ என்கிட்ட என்ன கெட்ட பெயர் வாங்கினாலும் வாங்கிக்கோ...நான் திட்டுவேன்... கோவிச்சுக்குவேன் . . ஆனா , வெளியே யார்கிட்டயும் கெட்ட பெயர் வாங்கக் கூடாது..."

அந்தத் தைரியத்துல நான் திரும்ப எம் . ஜி . ஆர் . கிட்ட போய் அழாத குறை யாகச் சோகமாக நின்றேன் .

எம் . ஜி . ஆர் . . . ' கண்ண தாசன் எழுதிய அந்தப் பாட்டை ரிக்கார்ட் பண்ணிக் கொண்டு வா... நான் கேட்டுட்டுச் சொல்றேன்... " என்றார் . "கவிஞர் கண்ணதாசனோ மாற்றமாட்டேன்னு சொல்லிட்டாரு . அப்படியே அவர் வேற பாட்டை எழுதி , சிவாஜியைத் திரும்ப நடிக்கச் சொன்னா... அவ ருக்குக் கோபம் வந்து , அதனால் மனஸ்தாபம் வரும் ' னு இருக்கிற சிக்கல்களையெல்லாம் எம் . ஜி . ஆரிடம் சொன்னேன் .

" நீ கவலைப்படாதே... நான் பார்த்துக்கறேன்..." என்றார் எம் . ஜி . ஆர் . !

யாரடா மனிதன் அங்கே... பாட்ட டையும் . தைரியமாகச் சொல் , நீ மனிதன்தானா ? பாட்டையும் ஒரே சமயத்துல கேட்டார் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு பாட்டுகள்லேயும் மனிதன் என்ற ஒரு வார்த்தைதான் ஒத்துமையா வந்திருக்கு... மற்றபடி , வாலி எழுதிய பாட்டுல குடிகாரனைப் பார்த்து மனசாட்சி குத்திக்காட்டுவது போல் காட்சி... தம்பி சிவாஜிக்காகக் கவிஞர் எழுதினதுல , பொதுவா ஒரு நல்ல மனிதனைத் தேடி அலைவது போல இருக்கு... இதனால் எந்தப் பாதிப்பும் உனக்கு வராது... எனக்கும் வராது... நீ கவலைப்படாம போ . " னு எம் . ஜி . ஆர் சொல்லிட்டார் .

அதுவரையில் , ஒரு பக்கம் எம் . ஜி . ஆர் . - வாலி , இன்னொரு பக்கம் சிவாஜி - கண்ணதாசன் . இந்த இரண்டு பக்கத்துக்கும் நடுவில் நான் சிக்கி , சொல்லவும் முடியாம விழுங்கவும் முடி யாம பட்ட அவஸ்தை இருக்கே... பிரசவ வேதனைதான் ! பிரசவ வேதனைப்பட்டாலும் இரண்டு பாட்டுகளுமே ஹிட்டாகி மனசுக்கு மகிழ்ச்சியைத் தந்தன ! இதேமாதிரி , நான் அகப்பட்டுத் தவிச்ச இன்னொரு சம்பவமும் உண்டு .

எம் . ஜி . ஆர் . , இணைந்த கைகள் ' ( அருண்பாண்டியன் , ராம்கி நடித்ததல்ல இது ! ) என்ற பெயரில் ஒரு படம் எடுக்கும் வேலைகளில் இறங்கினார் . முதல் நாள் - பாட்டுகளுக்கு ட்யூன் போட்டு ரிக்கார்டிங் பண்ணலாம் என்று ஏகப் பட்ட ஆர்க்கெஸ்ட்ராவுடன் விஜயா கார் டனில் காத்திருந்தோம் . எம் . ஜி.ஆர். வந்தார் . சில பாட்டுகளைக் கேட்டார் . பிள்ளையார் சுழியைத் தவிர , மற்ற எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் . ஆர்க் கெஸ்ட்ரேஷனையும் மாற்றிவிட்டார் .

வார்த்தைகளை மாற்றிவிட்டார். 'ட்யூன் சரியில்லை , இப்படி மாத்தணும்... அப்படி மாத்தணும் "னார் . அப்போ மணி பன்னிரண்டேகால் இருக்கும் . ' என்ன பண்ணப்போறே விசு ?" "இப்பவே மாத்திப் போட்டுடறேன் அண்ணே ! "

"இப்ப உன்னால் எப்படி மாத்த முடியும் ? எல்லாத்தையும் புதுசா எழுதி , ட்யூன் போடப்போறியா ? "

"இல்லே அண்ணே... எவ்வளவு நேரமானாலும் இருந்து நான் மாத்திட்டுப் போறேன் ! "

"வேண்டாம் விசு... மனுஷன் எதுக்குக் கஷ்டப்படறான்.... ஒருவேளை சாப்பாட்டுக்காகத்தானே ? எல்லாரும் சாப்பிட வேணாமா ? நீ சாப்பிட வேணாமா ? நீயும் கரெக்ட் டயத்துக்குச் சாப்பிட்டு உடம்பைப் பார்த்துக்கணும்... எல்லாரும் சாப்பிடட்டும்... லஞ்ச் பிரேக் விடு... சாப்பிட்ட பிறகு ட்யூன் போட்டு வை... வந்து கேக்கறேன்!" என்று சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிப் போனார் எம்.ஜி. ஆர்!

நான் அப்படியே சோகமா என் கார் மேல சாய்ஞ்சுக்கிட்டேன் . வேறொரு ஸ்டூடியோவில் மத்தியானம் இரண்டு மணியிலேர்ந்து ஒன்பது மணி வரை டைாக்டர் ஸ்ரீதரோட சிவந்த மண் ' பட - ரிக்கார்டிங்... சிவாஜி ஹீரோ .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நிறைய பொருட்செலவில் , வெளி நாடுகளுக்குச் சென்று பிரமாண்டமான முறையில் சிவந்த மண் ' படம் எடுக்க விருக்கிறார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும் . ரீ - ரிக்கார்டிங் நல்ல முறையில் வரணும்னு விசேஷ அக்கறை எடுத்து சிவாஜியும் அங்கே வந்து காத்துக் கொண்டிருப்பார்னும் தெரியும்...

அதே சமயம் , நான் இங்கே வந்து மாட்டிக்கிட்டதால் அங்கே நான் வரலைங்கிற கோபம் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வரும் என்பதும் தெரியும்... இந்த விஷயத்தை எம் . ஜி . ஆர் . கிட்ட சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டிருந் தேன் . இதை யாரோ எம் . ஜி . ஆர் . கிட்ட சொல்லிட்டாங்க போலிருக்கு... காரிலிருந்து கீழே இறங்கி என்னை நோக்கி வேகமாக வந்தார்..." என்ன பண்ணப்போறே விசு ?" "வேறவழியில்லை... ஒண்ணு - லஞ்ச் பிரேக் விட்டுட்டு , நான் கன்டினியூ பண்ணணும்... இல்லேன்னா , நீங்க இருங்க...இப்பவே மாத்திச் சில ட்யூன் கள் போடறேன் . இருந்து கேட்டுட்டுப் போங்க அண்ணே !

"எனக்குப் பசிக்குது... நான் போறேன்...' " இதைச் சொல்றதுக்காகவா திரும்பி வந்தீங்க ? ' னு கொஞ்சம் எரிச்சலோடு கேட்டேன்.

" இங்கே வா... நீ ஒண்ணும் வொர்ரி பண்ணிக்காதே... சிவந்த மண் படத்துக்கு இரண்டு மணி கால்ஷீட் உனக்கு இருக்குல்ல... நீ எல்லா இன்ஸ்ட்ர க்ஷனையும் கோவர்த்தனம் கிட்ட சொல்லிட்டுப் போயிடு . நான் அவரை வெச்சுக்கிட்டுப் பார்த்துக்கறேன்... என்ன பண்றது ? நான் உன்னோட அசிஸ்டெண்ட்டா இங்கே வேலைபார்க்கறேன்... நீ அங்கே போ... அவங்ககிட்ட கெட்ட பெயர் வாங் காதே ... நாம் எப்படி வேணும்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..." னு சொல் லிட்டுப் போயிட்டார் எம் . ஜி . ஆர்.!

நான் உடனே அடிச்சுப்பிடிச்சு ஓடிப் போனா... அங்கே டைரக்டர் ஸ்ரீதரும் சிவாஜியும் . நான் நினைச்ச மாதிரியே எனக்காகக் காத்துக்கிட்டிருக்காங்க . ஸ்ரீதர் பார்த்த பார்வையில் அங்கே போயிட் டுத்தானே இங்கே வரேன்னு கேட்கிற மாதிரியான ஒரு கோபம் . பரபரன்னு இங்கே வேலையை முடித்துவிட்டு மீண்டும் எம் . ஜி . ஆருக்காக அங்கே போய்... இரண்டு வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன் ( ஆனால் , இணைந்த கைகள் ' படம் எடுக்கிற ஐடியாவை எம் . ஜி . ஆர் . ஏனோ ட்ராப் பண்ணிட்டார் ! )

இப்படி விட்டுக்கொடுத்து , ஒருவரையொருவர் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யறதும் ஒரு ஆர்ட்தான் ! இந்தச் சமயத்துல நினைவுக்கு வருது... ஒரு பின்னணிப் பாடகி அழுத சம்பவம்...

(20.03.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)