அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 21

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

மதிப்புக்குரிய நம் முதல்வர் ஜெயலலிதாம்மாவையும் நான் படத்துல பாட வெச்சியிருக்கேன்...

யாரிப்பாளர் வேலுமணி எடுத்த படத்தின் ஒரு பாட்டுக்கான ரிக்கார்டிங்... மெஜஸ்டிக் ஸ்டூடியோ வில் அந்தப் பாட்டைப் பாடவேண்டிய பாடகி , டெலிபோன் இருந்த அறையில் அழுது கொண்டிருந் தார் . இதைப் பார்த்த ரிக்கார்டிஸ்ட் ரங்கசாமி " ஏன் அழுகிறீர்கள் ? " என்று பலமுறை கேட்டும் அந்தப் - பாடகி பதிலே சொல்லாமல் அழுதபடி இருந்தார் .

என்னைவிட வயதில் பெரியவரான ரங்கசாமி , " என்னடா சொன்னே அவங்களை நீ ஏதாவது திட்டி னியா? அவங்க அப்படி அழுதுகிட்டிருக்காங்களே...? " என்று கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை . அந்தப் பாடகி அழுத்து எனக்கே திகைப்பைத் தந்தது . இதற்குள் , விஷயம் டெலிபோன் மூலமாக அவர் கணவர் வரை போய் , அவரும் வந்துவிட்டார் . நானும் என்னோட ஆர்க்கெஸ்ட்ராக்காரர்களும் திகைத்துப் போய் நிற்க... இதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது . எல்லாரும் சமாதானப்படுத்திய பிறகு ,

"மியூஸிக் டைரக்டர் பாடின மாதிரி என்னால பாட முடியலை... அதனாலதான் அழுதேன்...னு காரணம் சொன்ன அந்தப் பின்னணிப் பாடகி - வேற யாருமில்லை , பி . சுசீலாதான் .

பாடல் ரிக்கார்டிங்கிள் போது - பின்னணிப் பாடகர் கள் என் முகத்தைத்தான் பார்ப்பார்கள் . என்னைத் திருப்திப்படுத்தினால் அந்தப் பாடல் நிச்சயம் ஹிட்டாகும் . அதே சமயம் தாங்களும் முன் னுக்கு வரமுடியும் என்பதை அறிந்திருந்தார்கள் .

அதனால் தான் பி . சுசீலா மிகவும் பிரபலமான பாடகி யாக இருந்தும் கூட , ' தான் இன்னும் நன்றாகப் பாடி யிருக்கலாமோ ' என்கிற ஒரு ' இன்வால்வ்மெண்ட் ' தான் அன்று அவரைக் கண்ணீர் விடவைத்திருக்கிறது . இந்த அக்கறையும் ஆர்வமும் இருந்ததால்தான் அந்தக் காலகட்டத்தில் டி . எம் . எஸ் . - சுசீலா பாடாத படங்களே இல்லை என்கிற அளவுக்குப் புகழின் உச்சியில் இருந்தார்கள் . இவர் களுடைய இன்வால்வ் மெண்ட்டை நான் கண்கூடா கப் பார்த்ததனால்தான் - - உயர்ந்த மனிதன் படத்துக்காகப் பி . சுசீலா பாடிது நாளை இந்த நேரம் பாட்டை ரிக்கார்டிங் செய்த போது ,

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

''இதற்கு நிச்சயம் உங்களுக்கு அவார்டு கிடைக்கும் என முன்கூட்டியே சொன்னேன் , - மத்திய அரசு விருது அவருக்குக் கிடைத்தது... அதைப்போல , அபூர்வ ராகங்கள் படத்துக்காக ஸ்வரங்களில் பாட்டை வாணி ஜெயராம் . பாடிய பிறகு , இதற்கு விருது கிடைக்கும் என்று . சொன்னேன் . அவருக்கும் கிடைத்தது . -

தான் ஐபிடரில் இருந்த காலகட்டத்தில் பாப்புலரா இருந்த பாடகர்கள் - எம் . எம் . மாரி பப்பா , திருச்சி லோகநாதன் , யூ . ஆர். ஜீவரத்தினம் , என் . சி . வசந்தகோகிலம் , எம் . எஸ் . சுப்புலட்சுமி, எம் .கே . தியாகராஜ பாகவதர் என ஒரு பெரிய பட்டியலே போடலாம் . இவங்கள்லாம் தளுக்கா பாடிட்டுப் போறவங்க இல்லை . பாட்டுக்களின் ரசளையை அனுபவிச்சுப் பாவத்தோடு பாடின . வங்க . என் குருநாதர் சுப்பையா நாயுடு ஒரு - பாட்டை ரிக்கார்ட் பண்ணுவதற்குள் ஆயிரம் தடவையாவது பாடிப் பார்ப்பார் . கிருஷ்ண விஜயம் ' என்ற படத்துக்கு என்.சி.வசந்தகோகிலம் - பாடணும் . இருபத்துநாலு ராகத்துல பாட்டு , - அப்போ எடிட்டிங் ரூம்ல ' ப்ளேபேக் ' வசதியெல் - யாம் கிடையாது . நாயுடுவின் அசிஸ்டெண்ட்டான . நான் அந்த இருபத்து நாலு ராகத்தையும் நெட்டுரு உபகணி வசந்தகோகிலத்திடம் ஒப்பிப்பேன் .

அந்தக் காலத்தில் , எம் . கே . தியாகராஜ பாகவத ரின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் , இவருடைய வாய்ஸ்க்கு நான் ட்யூன் போட்டால் அப்படியிருக்கும் ? ' என்று நினைக்குமளவுக்கு பாகவ தான் கால் மேல் எனக்கொரு மோகம் ஏற்பட்ட துண்டு . ஆனால் , அவர் பாட நான் இசையமைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை . ஆனால் , எனக்கொரு டி . எம் . சௌந்தரராஜன் கிடைத்தார் .

பாகவதர் குரலைப் போலவே டி . எம் . எஸ் - ஸோட குரல் அமைஞ் சிருந்தது . இந்த வளமான குரலை வைத்துப் புகுந்து விளையாடும் விதத்தில் , டி . எம் . எஸ் க்கு எல்லா டைப் பாட்டுக்களும் கொடுத்தேன் . உதாரணமாக... மாதவி பொன் மயிலாள் போன்ற கிளாவிகல் , அடி , என்னடி ராக்கம்மாங்கிற நாட்டுப்புறப் பாடல் எங்கே : - திம்மதி னு எமோஷனல் பாட்டு ; மேல்நாட்டு களிப் பிச்சாடு ஸ்டைலில் யார் அந்த நிலவு ன்ற - பாட்டு - இப்படி டி.எம்.எஸ்., வாய்ஸ்ல என்னென்ன பாட்டுகளைக் கொடுக்கலாம்னு நான் சுற்பனை செய்து வைத்திருந்த - தேனோ , அத்தனை ட்யூன்களையும் அவருக்குக் கொடுத்து எக்ஸ்பரி மெண்ட் செய்தேன். டி.எம்.எஸ்-ஸுக்கு இணை டி.எம்.எஸ். தான் அவர் இடத்தை வேறொருவர் ரீப்ளேஸ்' பண்ணமுடியாது .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சிவாஜி நடிச்ச சாந்தி' படத்துக்காக யார் அந்த நிலவுன்ற பாட்டை ஸ்லோ பிடச்சில டி .எம்.எஸ்-ஸைப் பாட வெச்சு ரிக்கார்ட்பண்ணினேன். இந்தப் பாட்டை சிவாஜி போட்டுக் கேட்டார். கேட்ட பிறகு "ரொம்ப நாவல்ட்டியா போட்டிருக்காங்க.... விசு ரொம்ப அழகா ட்யூன் போட்டிருக்காரு... கவிஞரும் அற்புதமான வரிகள் எழுதியிருக்காரு... டி.எம்.எஸ்-ஸும் அற்புதமா பாடியிருக்காரு..." என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிய சிவாஜி . இந்தப் பாட்டை ஷட் பண்றதுக்கு இதோ அதோன்னு சில நாட்களைக் கடத்தினார்‘.' இந்தப் பாட்டைப் பொறுத்தவரைக்கும் கவிஞர், விசு டி.எம்.எஸ். மூணு பேரும் அற்புதமா பண்ணிட்டாங்க... எடுக்கப்போற இந்தப் பாடல் காட்சியில் நான் ஏதாவது புதுமையா நடிச்சு இந்த மூணு பேரையும் பீட் பண்ணிக் காட்டணுமே... னு மூளையைக் கசக்கிக்கிட்டிருந்தார் சிவாஜி என்ற தகவல் எங்களுக்குப் பிறகு தெரிய வந்தது . எங்களுக்குள்ளே அப்படியொரு ஹெல்த்தியான போட்டி . சும்மா சொல்லக்கூடாது , உதடுகளுக்கு இடையே வைத்த சிகரெட்டை எடுக்கா மலே அந்தப் பாடல் முழுவதற்கும் வெவ்வேறு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து சிவாஜி நடிச்சது இருக்கே , இன்னிக்கும் என் கண் முன்னால நிக்குது . தியேட்டர்ல அந்தக் காட்சியின் போது ரசிகர்களிட மிருந்து பலத்த கைதட்டல் ! இந்தக் கைதட்டல் - பாடலை எழுதிய கவிஞ ருக்கா அல்லது இசையமைத்த எனக்கா அல்லது நடித்த சிவாஜிக்கா என்று பிரித் துப் பார்க்க முடியாத அளவுக்கு அமைந்த ஒரு டீம் ஒர்க் அது .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

' பாசமலர் ' படத்தில் ' வாராய் என் தோழி... வாராயோ ' பாட்டு துவங்குவதற்கு முன்னால் ' ஆனந்தா... என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்... அதுல ஆனந்தக் கண்ணீரைத்தான் நான் பார்க்கணும்"னு ஜெமினிகிட்ட சிவாஜி சொல்ற டயலாக்கோட ஆரம்பிச்சோம் .

அதே மாதிரி , ' நெஞ்சிருக்கும் வரை ' படத்துக்காகத் திருமண விழாவையும் அழைப்பிதழையும் ஒன்று சேர்த்துக் கவிஞர் ' பூ முடித்தாள் இந்தப் பூங்குழலி ' என்ற பாட்டை எழுதித் தந்தார் . மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களுமே வித்தியாசமாக அமைந்தவை என்பது மட்டுமல்ல , எங்கே திருமணம் நடந்தாலும் இந்தப் பாடல்கள் போடாமல் கல்யாணங்கள் நடந்ததில்லை என்னுமளவுக்கு மங்கலமாக மக்கள் மனதில் இடம் பெற்றன .

'குலேபகாவலி ' படத்தில் டான்ஸ் மூவ்மெண்ட்டுடன் ஒரு பாட்டை சந்திர பாபுவுக்குக் கொடுத்தேன் . அவரால் பாடி நடிக்க முடியும் என்பது என் நம்பிக்கை . ஆனால் சந்திரபாபுவோ , " இந்தப் பாட்டுக்கெல்லாம் எப்படி ஆடிப் பாடறது ? அதெல்லாம் வராது... சரி . உன்னால இதுக்கு ஆடிக்காட்ட முடியுமா ? " என்று சவால் விட்டார் . அப்போதே நானும் அந்தப் பாட்டுக் கான டான்ஸ் மூவ்மெண்ட்டை ஆடிக் காண்பித்தேன் . ஆடியதைப் பார்த்து வியந்து போன சந்திரபாபு ( நான் சின்ன வயசில் முறையாக நடனமும் கற்றுக் கொண்டவன் என்கிற ரகசியம் சந்திர பாபுவுக்குத் தெரியாது ! ) பாடி ஆட ஒப்புக்கொண்ட அந்தப் பாட்டுதான்' குல்லா போட்ட நவாப்பு ' !

ஒரு காலகட்டத்தில் , எம்.ஜி.ஆருக்கும் சரி... சிவாஜிக்கும் சரி... டி.எம்.எஸ். வாய்ஸ்தான் என்கிற வழக்கத்தையும் ' ப்ரேக் பண்ணி மாற்றினேன்.' மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் " இன்று போல் என்றும் வாழ்க ' படங்களில் டி.எம்.எஸ்-ஸும் பாடியிருப்பார் ஜேசுதாஸும் பாடியிருப்பார். அன்புக்கு நான் அடிமை' என்ற பாட்டை எம்.ஜி. ஆருக்காகப் பாடிய ஜேசுதாஸ் தன் இனிய குரலினால் 'விழியே கதை எழுது' ,ஒன்றே குலமென்று பாடுவோம்', அதிசய ராகம்... ஆனந்த ராகம் ' போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார் .

இதைப்போலவே , ' பாட்டும் பரதமும் ' என்ற படத்துக்காக - அப்பா வேடம் ஏற்ற சிவாஜிக்கு டி.எம். எஸ்ஸும் . மகன் சிவாஜிக்கு எஸ்.பி.பால சுப்பிரமணியமும் குரல் கொடுத்தார்கள் . ஆனால் , படத்தில் பார்க்கும் போது சிவாஜியே சொந்தக் குரலில் பாடியது போல அவ்வளவு தத்ரூபமாக வாய் அசைப்பை நடிப்பில் காட்டியிருந்தார் .

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 21

எஸ் . பி . பாலசுப்பிரமணியம் எவ்வளவோ அற்புதமான பாடல்கள் பாடியிருக்கிறார் . கடவுள் அமைத்து வைத்த மேடை , வான்நிலா ' போன்ற பாடல் களை எவ்வளவு அனுபவிச்சுப் பாடியிருக்கிறார் .

இந்தச் சமயத்தில் ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது . என் பேரன் விக்கியுடன் ( அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறான்) ஒரு நாள் டி . வி . பார்த்துக் கொண்டிருந்தேன். டி.எம்.சௌந்தர ராஜன் ஹீரோவாக நடித்த ' அருணகிரி நாதர் ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது . 'முத்தைத் தரு...' என்ற பாடல் காட்சியில் டி . எம்.எஸ். பாடியபடி நடித்தார். அதைப் பார்த்து விக்கி , " என்ன தாத்தா இது . . டி . எம் . எஸ் - ஸுக்கு சிவாஜி பின்னணிக் குரல்ல பாடியிருக்காரு ? " னு ஒரு கேள்வியைக் கேட்டான் . அவன் கேட்டதில் ஆச்சரியமே இல்லை . ஏனென்றால் டி . எம் எஸ் . பாடியதற்கேற்ப சிவாஜி , எம் . ஜி . ஆர் . போன்றவர்கள் லிப் மூவ்மெண்ட்டையும் எக்ஸ்பிரஷ னையும் சரியாகக் கொடுத்து நடித்தது தான் முக்கிய காரணம் .

' சிவந்த மண் ' படத்தில் வரும் ' பட்டத்து ராணி ' சவுக்கடிப் பாட்டு , வேறு படங்களில் பைத்திய காரெக்டர் பாட்டு . விரகதாபம் கொண்ட பாடல் என எல் . ஆர் . ஈஸ்வரியும் வெரைட்டியா பாடல்களைப் பாடியிருக்காங்க...

ஜெமினி கணேசனுக்கு ரொம்பப் படங்களில் ஏ . எம் . ராஜா குரல் கொடுத் தார் . இதில் ஒரு மாற்றம் தரவேண்டும் என நாங்கள் நினைத்தோம் . பி . பி . ஸ்ரீனி வாஸ் கிடைத்தார் . காலங்களில் அவள் வசந்தம் ' என பாட ஆரம்பித்தவர் .

ஜெமினிக்கு இவர்தான் பாடவேண்டும் ' என்று படவுலகில் தனக்கொரு இடத் தைத் தன் திறமையின் மூலம் தக்கவைத்துக் கொண்டார் .

கலைஞர் கருணாநிதி தன் மகன் மு . க . முத்துவை வைத்துப் படம் எடுத்த போது . ' மு . க . முத்து நன்றாகப் பாடு வார். அவர் குரல் உங்களுக்குப் பிடித்தால் மட்டுமே பாட வாய்ப்பு கொடுங்கள்... பிடிக்காவிட்டால் உங்கள் சௌகரியப்படியாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள்..." என்றுதான் சொன்னார்கள் . புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமுடைய நான் மு . க . முத்துவையும் பாடவைத்தேன் .

கலைக்கோயில் ' படத்துக்காக , என் இசையமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா ' தங்கரதம் வந்தது வீதியிலே...' ன்ற பாட்டை இன்னிக்கும் கேட்டுக்கிட்டே இருக்கிற அளவுக்கு இனிமையா பாடி யிருக்காரே !

மதிப்புக்குரிய நம் முதல்வர் ஜெயலலிதாம்மாவையும் சூரியகாந்தி ' படத்துல பாட வெச்சேன் . ' ஓ... மேரிதில் ரூபான்ற அந்தப் பாட்டை ரொம்ப நல்லா பாடினாங்க... அந்தப் பாட்டு ரிக்கார்டிங் முடிஞ்ச உடனே அவங்க " ஒரு பாட்டை உருவாக்குறதுல இவ் வளவு கஷ்டம் இருக்கா...? " னு என்கிட்ட ஆச்சரியத்தோடு கேட்டாங்க... இப்படி எனக்குக் கிடைச்ச பாடகர்கள் - எஸ் . பி . சைலஜா , சித்ரா உட்பட எல்லாருமே எனக்குக் கிடைச்ச பொக்கிஷம் என்றே சொல்லலாம் . அதேசமயம் வித்தியாசமான குரல் வளங்களைக் கொண்டவர்களும் கூட!

மற்ற பாடகர்களைப் பாட வெச்ச என்னை இன்னொரு மியூஸிக் டைரக்டர் அவர் இசையமைக்கிற படத்துல நான் பாடணும்னு கூப்பிட்டார் .

(27.03.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)