என்னுடைய இசைக் குழுவில் உள்ள அனைத்துக் கலைஞர்களும் என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள். என் குணத்தை அறிந்தவர்கள். அவர்களிடம் நான் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிந்தவகள்; எனக்காகவே உழைப்பவர்கள். என் இசைக்குழு என்று சொல்வதை விட நாங்கள் அனைவரும் அடங்கிய ஒரு கூட்டுக் குடும்பம் என்று சொல்வதுதான் பொருத்தம்.
ஷெனாய் சத்தியம், மாண்டலின் சுப்ரமணிய ராஜு, பியானிஸ்ட் ஜோசப் கிருஷ்ணா டி.என்.மணி; ஹென்றி டேனியல், ஜி.கே. வெங்கடேஷ் , கோவர்த்தனம் , மங்களமூர்த்தி; தபேலா , பாங்கூஸ் சி.ஆர். கோபாலகிருஷ்ணன்; - தபேலா அனுமந்தப்பா; புல்லாங்குழல் நஞ்சுண்டையா; வயலின் பி.ஆர். கோபாலகிருஷ்ணன்; சிதார் ஜூனஸ் சேட் - இவர்கள் எல்லாம் என் தோளோடு தோள் நின்று வெற்றிப் பாடல்களைத் தருவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள்.
ஆரம்பக் காலத்தில் நான் சென்ட்ரல் ஸ்டூடியோவில் இருபத்தஞ்சு ரூபா சம்ப வத்தில் வேலை செய்த போது . ஜுனஸ் சேட் - நஞ்சுண்டையா - கோபால சி நஷ்ணன் ஆகியோர் 300. 400 ரூபா மாச சம்பளத்தில் வேலை செய்தவர்கள் . நான் மியூஸிக் டைரக்டராக அங்கீகரிக் கப்பட்ட பிறகும் எனக்காகவே வாசித்தவர்கள். ஷெனாய் சத்தியம் ஜெமினி நிறுவ னத்தில் பாச சம்பளத்துக்கு வேலை செய்தவர், அவ்வப்போது எனக்கும் வந்து வாசிப்பார். பின்னணிப் பாடகரை யே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அற்புத பாக ஷெனாய் வாசிப்பார். அவர் வாசிக் தம்போது என் முகத்தைப் பார்ப்பார். நான் எதிர்பார்க்கிறபடி வாசிச்சுட்டா அவரை தலையில் தூக்கி வெச்சுக் கொண் டற அளவுக்கு பூரிச்சுப் போவேன். அதனால், என் முகத்தில் சிரிப்பைப் பார்த்த பிறகுதான் அவர் வீட்டுக்குத் திருப்பதியாகப் போவார்.
சி.ஆர். கோபாலகிருஷ்ணன், இவரோட ஒன்பதாவது வயசிலிருந்தே டோலக், தபேலா, பாங்கூஸ் வாசித்தவர். பாங்கூஸ் வாத்யத்தை வாசிப்பதில் தென் னிந்தியாவிலேயே நம்பர் ஒன் என்ற சிறப்புப் பெற்றவர்.
சிதார் ஜுனஸ் சேட் - வயது 76 , நான் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக ஆதியிலிருந்தே ஊக்கமும் ஆக்கமும் அளித்தவர். அவரோட 70 - வது வயசு வரைக்கும் என்கிட்ட வாசிச்சுக்கிட்டிருந்தார்; கடந்த நாலைந்து வருடங்களாகத்தான் ஓய்வில் இருக்கிறார்!
என்னுடைய இசைக் குடும்பத்தில், தாத்தா - மகன் - பேரன் என மூன்று தலைமுறைக் கலைஞர்கள் வாசிப்பது அரியதொரு அம்சம்.
பி . ஆர் . கோபாலகிருஷ்ணன். இவரது மகன் வெங்கடேஷ் , பேரன் முரளிகிருஷ் ணன் மூவருமே வயலினிஸ்ட் லூயி - மகன் யூஜின் - பேரன் ராய் - மூவருமே ட்ரம்பெட் வாசிப்பவர்கள். கிளாரினெட் டி . ஜே . பரமசிவம் இவருடைய மகன்கள் வெங்கட் , நாகரா ஜன் - இருவருமே வயலினிஸ்ட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புல்லாங்குழல் கலைஞர் வி . நஞ்சுண் டையா , இங்கே படவுலகில் மட்டுமின்றி அமெரிக்கா , ரஷ்யா , சிங்கப்பூர் , மலே சிய நாடுகளுக்கும் பயணம் செய்து தன் முத்திரையைப் பதித்தவர் . 1971 - ம் ஆண்டு ' ஐ . நா . சபை அமைதி விருது பெற்றவர் . நஞ்சுண்டையாவின் மகன் சாரங்கபாணி எங்களது குழுவில் தற்போது வயலினிஸ்ட்டாக இருக்கிறார்.
டபுள் பேஸ் ' வாசிப்பதில் வல்லவ ரான மாலி - இவருடைய மகன் ராய்ஸ்ட்ட ன் தற்போது டபுள் பேஸ் ' வாசிக்கிறார் .
தாஸ் - மகன் தாமஸ் , இருவருமே ட்ரம்பெட் கலைஞர்கள்.
என் இசைக் குடும்பத்தில் வாசித்த - தற்போதும் வாசித்துக் கொண்டிருக்கின்ற கலைஞர்கள் ஒரு பரஸ்பர உணர்வோ டும் , உரிமையோடும் என்னோடு இணைந்து உழைத்து ' ஹிட் ஸாங்ஸ் ' தந்திருக்கிறார்கள் . இவர்களோடு , இரவு பகல் பாராமல் , அமுதசுரபி போல ' இந்தா பாடல் ' என கொடுத்துக் கொண்டே இருந்த கவிஞர் கண்ணதாசன் , கவிஞர் வாலி ( ' உயர்ந்த மனிதன் 'படத்தில் வரும் அந்த நாள் ஞாபகம் பாட்டை எழுதியவர் கவிஞர் வாலிதான் . ஆரம்பத்தில் கண்ணதாசன் என்று தவறாக குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டிய வாசகர்களுக்கு நன்றி ! ) போன்ற பாடலாசிரியர்கள் ; எதற்கும் வளைந்து கொடுக்கிற குரல் வளம் பெற் றிருந்த டி . எம் . எஸ் . - பி . சுசீலா போன்ற பாடகர்கள் ; மியூஸிக் டேஸ்ட் உள்ள இயக்குநர்கள் , தயாரிப்பாளர்கள் ; நாங் கள் இசையமைத்த பாடல்களுக்குத் தங்கள் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த சிவாஜி , எம் . ஜி . ஆர் . , எம் . ஆர் . ராதா டி . எஸ் . பாலையா , எஸ் . வி . ரங்காராவ் , சந்திரபாபு . சாவித்திரி ஆகியோர் - இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்படி எல்லாமே இணைந்த ஒரு அற்புதமான காம்பினேஷன் எங்களுக்கு அமைந்தது . இந்தக் காலகட்டத்தை எங்க ளது பொற்காலம் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தம்பி இளையராஜாவோட முதல் பட மான அன்னக்கிளி ' வந்தபோது பாடல்க ளையெல்லாம் கேட்டு நான் அவரை வரவழைத்துப் பாராட்டினேன் . இந்தப் படத்துக்கு பிறகு அவர் கடுமையா உழைச்சு , அவருக்குனு ஒரு பாணி வெச் சுக்கிட்டு , எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரு மெண்ட்ஸ்ல மாஸ்டர் ஆகி , ஆர்க்கெஸ்ட் ரேஷன்லாம் வித்தியாசமா பண்ண ஆரம் பிச்சார் . இளையராஜாவோட குரு ஜி . கே . வெங்கடேஷ் . வெங்கடேஷ் என் னோட அஸிஸ்டெண்ட் . இளையராஜா வை வெளியுலகுக்கு அடையாளம் காட் டியவர் ஜி . கே . வெங்கடேஷ் . இதனாலே யே எங்க மூணு பேருக்குமிடையில் ஒரு மரியாதை , பாசம் , பக்தி , அன்பு உண்டு தம்பி ராஜா என்னைப் பார்க்கும் போதெல்லாம் , " நாம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணணும் . . . நீங்க மெலோடி போட்டுக் கொடுங்க . . . அதுக்கு நான் ஆர்க்கெஸ்ட்ரேஷன் பண்றேன் ' னு சொல்வார் . ' நேரம் வரும் போது பண்ணலாம் ' என்பேன் நான் . அப்படி ஒரு சந்தர்ப்பமும் வந்தது . பல படங்கள் எடுத்து . நஷ்டம் அடைந்த எனக்காக ஏவி . எம் . நிறுவனத்தினர் " மெல்ல திறந்தது கதவு ' என்ற பட்மெ டுத்து உதவ முன்வந்தனர் . இந்தப் படத் தின் மூலமாக நானும் இளையராஜாவும் முதன் தலா இணைஞ்சு இசையமைச் சோம் . எல்லாப் பாடல்களுமே ஹிட் ! கமர்ஷியல் நோக்கத்தையும் தாண்டி எங்க ரெண்டு பேருக்கும் ஓர் ஆத்ம திருப்தி கிடைச்சுது .
அடுத்து என் மூத்த மகன் கோபி ' செந்தமிழ் பாட்டு ' னு ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டான் . நானும் சரின்னுட்டேன் . படத்துக்கு ஹீரோ பிரபு . டைரக் ஷன் பி . வாசு . 'இதற்கு மியூஸிக் போட றது யார் ? ' என்ற கேள்வி எழுந்தபோது, "வாசு , இளையராஜால்லாம் ஒரு யூனிட்டா ஒர்க் பண்றாங்க.... அதனால நீ இளையராஜாகிட்ட இசையமைக்கணும்னு போய்க் கேளு " என்று நான் சொன்னேன். அதேபோல கோபி , இளையராஜாகிட்ட போய்க் கேட்டான் . கோபியைப் பார்த்து ராஜா கேட்ட முதல் கேள்வி : " நீங்க உங்க அப்பா வோடதானே இருக்கீங்க...? " உடனே கோபி, "டைரக்டர் வாசு. நீங்கள்லாம் ஒரு யூனிட்டா வேலை செய்யறீங்க... அதனால அப்பாதான் 'உங்ககிட்ட கேட் கச் சொன்னார்..." என்று சொல்ல இளையராஜா, 'எனக்கு யாருமே பூனிட்னு இல்லை... உங்கப்பாதான் எனக்கு யூனிட்... உங்கப்பாவும் நானும் சேர்ந்து வேலை செய்யறோம். உங்கப்பா வோட பெயரை மேலே போடு... என் பெயரைக் கீழே போடு...“ என்று பெருந் நன்மையோடு கூறி அனுப்பிவிட்டார். இந்த வகையில் ' செந்தமிழ்ப் பாட்டு படப் பாடல்களும் சக்ஸஸ்தான்! இதைத் தொடர்ந்து , என் மகன் முரளி தயாரிச்சுக் கிட்டிருக்கிற ' செந்தமிழ் செல்வன் ' படத்துக்கும் நாங்கதான் மியூஸிக்!
என்னுடைய இசையமைப்பில் பாடிய பி . சுசீலாவுக்கு , வாணி ஜெயரா முக்கு . கவிஞர் கண்ணதாசனுக்கெல்லாம் மத்திய அரசின் விருதுகள் கிடைத்த போது என்னைவிட பூரிப்படைந்தவர்கள் வேறு யாரும் இருந்திருக்க முடியாது . இந்த நிலையில் நிறைய பேர் என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி : " உங்களுக்கு ஏன் ஜனாதிபதி விருதோ பட்டமோ இன்னமும் கிடைக்கவில்லை ? " என்பது .
இதற்கும் ஒரு படி மேலே போய், "நீங்கள் சரியென்று சொல்லுங்கள்.... உங்களுக்கு ஒரு பத்மஸ்ரீ பட்டமோ , ஜனாதிபதி விருதோ டெல்லியில் வாங்கிக் கொடுக்கிறேன்... என்று வி.வி.க... ஒருவர் என்னிடம் வந்து கேட்டார் .
அதற்கு நான், "பத்மஸ்ரீ பட்டம் என்ன விலைக்கா கிடைக்கிறது வாங்கிக் கொடுக்க?" என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன் . பேசாமல் போய்விட்டார்.
இப்படிக் கேட்பவர்களுக்கு நான் தரும் ஆணித்தரமான பதில்....
(17.04.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)