Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 25

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

“எங்கள் இசை காலத்தாலும் அழியாதது... எனக்கு தர பெரிய அவார்டே 'ஜனங்க அவார்டேதான்...’

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 25

“எங்கள் இசை காலத்தாலும் அழியாதது... எனக்கு தர பெரிய அவார்டே 'ஜனங்க அவார்டேதான்...’

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

பாபநாசம் சிவன் , எம் . கே . தியாகராஜ பாகவதர் , பி . யு . சின்னப்பா போன்ற இசைமேதைகள் நம்மை விட்டு மறைந்துவிட்டாலும் , இவர்கள் பாடிய பாடல்களுக்கு இறப்பே கிடையாது . எந்தக் காலத்திலும் ரசிக்கக் கூடிய சிரஞ்சீவித்தன்மை கொண்டவை . இதை ' Mortal Man... Immortal Melodies " என்று குறிப்பிடுவார்கள் . இதைப்போல....

இன்றைக்கும் வெளியூர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ நான் மெல்லிசைக் கச்சேரி நடத்தும்போது ' மலர்ந்தும் மலராத ' , " எங்கே நிம்மதி " போன்ற பாட்டுக்களைப் பாடச்சொல்லி ரசிகர்கள் ' ஒன்ஸ்மோர் ' கேட்கிறார்களே , இதைத்தான் மிகப் பெரிய அவார்டாக நான் கருதுகிறேன் .

அன்று நாங்கள் போட்ட பாட்டுக்களை இன்றைய தலைமுறையினர் விரும்பிக் கேட்பதுடன், 'அந்தக் காலத்துல ' எவ்வளவு இனிமையா ட்யூன் போட்டிருக்காங்க...' என்று வியந்து பாராட்டுகிறார்களே - இந்த ' ஜனங்க அவார்டு ' எங்களுக்குப் போதும் . இதுக்கப்புறம்தான் ஜனாதிபதி அவார்டு , மத்த விருதுகள் எல்லாம் ! அந்தப் புகழ் , பெருமையெல்லாம் எனக்கு மட்டுமல்ல , ராமமூர்த்தி அண்ணாவுக்கும் போய்ச் சேர வேண்டும்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எனது வாழ்வில் மனதை நெகிழ வைத்து மறக்க முடியாதபடி பதிந்த ஒரு சம்பவம்... இந்திய - பாகிஸ்தான் போரில் விழுப்புண்களுடன் ஜலந்தர் ஆஸ்பத்திரியில் வீர மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருந்த வீரர்கள் மத்தியில்... படத்தயாரிப்பாளர் ஏ . எல் . சீனிவாசன் தலைமையில் , கவிஞர் கண்ணதாசன் உடன்வர... கழுத்தில் ஆர்மோனியப் பெட்டியைத் தொங்கவிட்ட படி ' உலகே மாயம் ' , ' எங்கே நிம்மதி போன்ற பாட்டுக்களை நான் அழுதபடி வாசிக்க... சிவாஜி ' கட்டபொம்மன் ' டயலாக்குகளை ஆவேசத்துடன் பேசி நடிக்க , சந்திரபாபு ' பிறக்கும் போதும் அழுகின்றாய்...' பாட்டைக் கண்ணீருடன் பாட... பத்மினி , சாவித்திரி , தேவிகா போன்ற நடிகைகள் அவர்கள் நடித்த படங்களிலிருந்து சில காட்சிகளை நடித்துக் காட்ட... இதற்கெல்லாம் நடிகர் வி . கோபாலகிருஷ்ணன் மிகவும் பாடுபட... அன்று அனைவரும் இணைந்து அளித்த அந்த கலைநிகழ்ச்சி உருக்கமானதாக அமைந்தது !

காஷ்மீர் நிலை குறித்து - இந்திய பாகிஸ்தான் உறவு பற்றிய செய்திகளை இப்போது தினமும் படித்துக் கொண்டிருப்பதால் , நாங்கள் ஜலந்தர் சென்று வந்தது ஒரு ஃப்ளாஷ்பேக் போல இன்றும் என் நினை வில் வந்து போகிறது .

அடுத்து , சென்டி மெண்டலாக ஒரு பாடல் என் இதயத்தைப் பாதித்த சம்பவம்...

"தீர்ப்பு' என்ற படத்தில் - 'தீயே உனக்கென்ன தீராத பசியோ' என்ற பல்லவியுடன். ஆளுக்கொரு தேதி வெச்சு ஆண்டவன் அழைப்பான் ' என்ற வரிகளுடன் நான் பாடிய பாடல் ஒன்று ஆரம்பிக்கும் . கனடா நாட்டில் நான் கச்சேரி செய்தபோது , அங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் மேற்படி பாட்டைப் பாடச் சொல்லி என்னைக் கேட்டார்கள். எனக்கோ இந்தப் பாட்டு உடனே ஞாபகத்துக்கு வரவில்லை. வரிகள் நினைவில் இல்லை.... மெட்டும் மறந்து போச்சு... எனவே பாட முடியாமைக்கு வருந்துகிறேன் ' என்று கூறிவிட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

இடைவேளை வந்தது. புயல்போல ரசிகர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, 'இதோ அந்தப் பாட்டு இடம்பெற்ற ஆடியோ காஸெட்' என்று என் கையில் ஒரு ஆடியோ காஸெட்டையும், முத்து முத்தாகப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்த ஒரு பேப்பரையும் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ரசிகர்களின் வேகத்தையும் ஆர்வத்தையும் கண்டு உணர்ச்சிவசப்பட்ட நான் அந்தப் பாடலை உருக்கமாகப் பாடினேன். சில ரசிகர்களின் கண்களில் நீர்.

நிகழ்ச்சி முடிந்து இரவு நான் தங்கியிருக்கும் விடுதிக்குத் திரும்பினேன். சென்னையிலிருந்து ஒரு ட்ரங்கால் 'மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் இறந்துவிட்டார். 'இந்தச் செய்தி என் தலையில் இடிமாதிரி இறங்கிற்று; என் நினைவு பின்னோக்கி ஓடிற்று...

நான் கனடா பயணம் மேற்கொள்வதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் , சென்னை நாரதகான சபாவில் , தியாகய் யரின் கீர்த்தனைகளை மகாராஜபுரம் சந்தானம் பாட , நான் அவருடன் இணைந்து 15 வயலின் - 2 கீ போர்டு - விணை - சிதார் - - ட்ரம்பெட் - புல்லாங்குழல் என முப்பது இசைக்கருவி களுடன் ' லைவ் புரோக்ராம் ' ஒன்றை நடத்தினோம் . ரசிகர்களிடையே பாராட்டு பெற்றது அந்த நிகழ்ச்சி கனடாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த என்னிடம் , " நீங்க வெளிநாடு போயிட்டு திரும்பிய பிறகு நாம ரெண்டு பேரும் சேர்ந்து இப்படிப் புதுமையான சில நிகழ்ச்சிகள் செய்யலாம் ' என்று கூறினார் சந்தானம் . ஒரு சாமானியனான என்னை அந்த இசைமேதை தன்னுடன் இணைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தி யது நான் செய்த பாக்கியம் . நான் திரும்பி வருவதற்குள் அவர் இறந்தது என் துரதிர்ஷ்டம் .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கனடா நிகழ்ச்சிக்குப் பிறகு , பாரீஸில் நடந்த கச்சேரியிலும் அதே தீர்ப்பு ' படப் பாடலை நான் பாட வேண்டும் என பாரீஸ் தமிழர்கள் கேட்டார்கள் . நான் தயங்கினேன் . ரசிகர்கள் வற்புறுத் தியதன் பேரில் பாடினேன் . இரவு ஒரு டெலிபோன் கால் ; பயத்துடன் Kஸீவரை எடுத்தேன் . ' பிரபல சவுண்ட் ரிக்கார்டிஸ்ட் எஸ் . பி . ராமநாதன் இறந்து விட்டார் ' என்ற தகவல் கேட்டு நான் அழுதேன் . இதற்குப் பிறகு , லண்டன் நிகழ்ச்சியில் இதே பாடலைப் பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்டனர் . ஆனால் , என்னோடு வந்த மற்ற இசைக் கலைஞர் கள் " இந்தப் பாட்டுக்கு நாங்கள் வாசிக்க மாட்டோம்..." என்று மறுத்துவிட , ரசிகர்களை நான் சமாதானப்படுத்தினேன்...

போன வருஷம் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து படுத்தபோது , சேலம் . மதுரை , கோவை ரசிகர்கள் நான் உடல் நலம் பெற வழிபாடுகள் , வேண்டுதல்கள் , பூஜைகள் நடத்தியதை என்றும் மறக்க மாட்டேன் .

இந்தச் சமயத்தில் , ஒரு நாள் நான் பீச் பக்கம் வாக்கிங் போனபோது ஒரு ரோவர் கார் என் அருகில் வந்து நின்றது . அந்த காரிலிருந்து கணவன் - மனைவி , இரண்டு மகன்கள் அடங்கிய சிறிய குடும்பம் இறங்கியது . " நாங்கள் உங்கள் ரசிகர்கள்... இப்போது உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது...?" என்று கவலையோடு கேட்டார்கள் . நான் தேறி வருவதைச் சொல்லிவிட்டு," அது சரி.... நீங்கள மூன்று பேர் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறீர்களே... என்ன விசேஷம்? " என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , " உங்க உடல்நிலை சரியாகி நீங்க நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணி மொட்டை அடிச்சுக்கிட்டோம்..." என்றார்கள். இதைக் கேட்டு நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வீடு திரும்பினேன் .

இந்தக் கட்டுரைத் தொடர் எழுத ஆரம்பித்த பிறகு , எல்லோருமே என்னை இப்போது ஒரு புதிய கோணத்தில் பார்க்கிறார்கள் . என் கடந்த கால வாழ்க்கையில் நான் எவ்வளவு சிரமப்பட்டு , கஷ்டப்பட்டு , அடிபட்டு மேலே வந்திருக்கிறேன் என்பதை இந்தத் தொடர்மூலமா கப் படித்து அறிந்து கொண்டதால் , என் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசமும் அன்பும் இப்போது இன்னமும் அதிகமாகிவிட்டன . காய்கறி விற்கும் ஒரு சாதாரண பெண்மணி முன்பெல்லாம் என்னைப் பார்த்தால் புன்னகைப்பார் - என் அனுபவங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டறிந்ததால் இப்போது என்னைப் பார்த்தால் அழுகிறார் .

முன்பெல்லாம் விழா மேடைகளில் என்னை அதிகம் பார்த்திருக்க முடியாது . ஆனால் , என் கட்டுரைத் தொடரில் நான் பட்ட அனுபவங்களைப் படித்ததன் எதி ரொலியோ என்னவோ , இப்போதெல்லாம் நிறைய விழாக்களுக்கு எனக்கு அழைப்பு : என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமாகவும் இருக்கலாம் .

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பிரபாகர் என்ற ரசிகர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் கட்டுரையைப் படித்துவிட்டு , எனக்கு ஒரு கடிதம் எழுதித் தபாலில் அனுப்ப... அது சனிக்கிழமைத் தவறாமல் எனக்கு வந்து சேர்ந்துவிடும் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

அதேபோல் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர் . ரவீந்திரன் ஃபிரெட் ரிக் என்ற ரசிகர் . என்னுடைய பாடல்களின் வெற்றிக்கு டீம் ஒர்க்தான் காரணம் என்று நான் குறிப்பிட்டதை ஓர் உரிமையோடு கண்டித்ததோடு நிற்க வில்லை... இந்தப் பாடகரை இந்தப் பாடல் மூலம் இந்தப் படத்தில் நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் ' என நீண்டதொரு பட்டியல் போட்டு , தாங் கள் படைத்திட்ட சாதனைகளுக்கு தாங்களே திரையிட்டுக் கொண்டீர்களோ ? ' என்றும் எழுதி வருத்தப்பட்டிருக்கிறார் .

இவர்களைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் . இவர்களை நேரிலோ அல்லது கடிதங்கள் வாயிலா கவோ சந்திக்கும்போதெல்லாம் டானிக் சாப்பிட்டது போல புத்துணர்ச்சி பெறுகிறேன் , என்னுள் புதிய ட்யூன்கள் பீரிட் டுக் கிளம்புகின்றன .

என்னுடைய இந்த அனுபவத் தொடரின் நிறைவில் மறுபடியும் ஒரு Begining ' ஏற்பட்டது போல எனக்குள் ஒரு புதிய எழுச்சி....

என்னுடைய இசைப் பயணத்தில் , என்னுடன் இணைந்து பணியாற்றியவர்க ளைப் பற்றிக் கூடுமானவரையில் நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறேன் . இதில் , என்னுடைய வெற்றிக்காகப் பாடுபட்ட நண்பர்கள், சக கலைஞர்கள் யாரையாவது குறிப்பிடத் தவறியிருந்தால் பொருத்தருள வேண்டுகிறேன்.

நான் ரசிகர்களை நம்பியிருக்கிறேன்.

ரசிகர்கள் என்னை நம்பியிருக்கிறார்கள் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை கொஞ்சம்கூட குறைய விட மாட்டேன். எனது கடைசி மூச்சு உள்ளவரை ரசிகர்கள் விரும்புகிற வகையில் இனிமையான பாட்டுக்களை நான் தந்துகொண்டே இருக்க வேண்டும் .

அதேபோல , எல்லோர் மத்தியிலும் ' விஸ்வநாதன் நன்றியுள்ள ஒரு நல்ல மனிதன் ' என்கிற நல்ல பெயரைக் கடை சிவரை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் .

இதுதான் என் பிரார்த்தனை... வேண்டுகோள்...

(24.04.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

‘மெல்லிசை மன்னர்’ விஸ்வநாதன் பற்றி ரசிகர் ஆர்.ரவீந்திரன் ஃபிரெட்ரிக் தெரிவித்துள்ள சில தகவல்கள்...

*‘மெல்லிசைக் கச்சேரி என்ற பாணியை முதன்முதலாகத் தோற்றுவித்த பெருமை விஸவநாதனைச் சேரும். 1952-ம் வருடம் சேலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அப்போது வசூலான தொகை 35,000 ரூபாய். இதன் இன்றைய மதிப்பு என்ன என்பதை நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் அதுவும் ஒரு சாதனை தான்.

* அன்றைய முதல்வரும் (எம்.ஜி.ஆர்) இன்றைய முதல்வரும் (ஜெயலலிதா) இணைந்து நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ரோஷனாரா பேசும் என்ற பெண் கவிஞரைப் பாடல் (‘குங்குமப் பொட்டின் மங்கலம்...’) எழுத வைத்து பெண்குலத்துக்குப் பெருமை சேர்த்தும் எம்.எஸ்.விஸ்வநாதன்தார்.

* தமிழ்த்தாய் வாழ்த்தான ‘நீராருங் கடலுடுத்த’ பாடலுக்கு இசையமைத்தது மெல்லினச மன்னர்தான்