Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 11

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

‘உலகம் சுற்றம் வாலிபன்’ படத்தோட பாடலுக்கு முதலில் புக்கானது குன்னக்குடிதான்..

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 11

‘உலகம் சுற்றம் வாலிபன்’ படத்தோட பாடலுக்கு முதலில் புக்கானது குன்னக்குடிதான்..

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ம் . ஜி . ஆர் . , என்னைப் பார்த்து முறைச்சாலும் அது நிஜமான கோபம் இல்லை . உரிமையான ஊடல் அது . இந்தி மாதிரியே பாட்டுகள் நல்லா வரணுமேன்னு மனசுக்குள்ளே ஒரு பயம் . ஆனா , ஹிட் ஆகுமாங்கற சந்தேகம் எனக்குக் கிடையாது . தொழில்ல ஒரு பயம் .

' நாளை நமதே படத்தை இரண்டு மாத கால்ஷீட்டில் எம் ஜி . ஆர் . முடிச்சாக வேண்டிய சூழ்நிலை . வாஹினி ஸ்டூடியோ வுல ஒரு பக்கம் ஷூட்டிங் நடக்கும் . நாங்கள் பாட்டு கம்போஸ் பண்ணிக்கிட்டிருப்போம் . ஒரு பாட்டுக்கு இருபது , இருபத்திரண்டு டியூன்கள் கூட மாத்தி மாத்திப் போட்டுப் பார்ப்போம் . கவிஞர் வாலி பாட்டுகள் எழுதினார் . வாலியை நான் இம்சை பண்ண அவரும் என்னோடு நல்லா ஒத்துழைப்பு தந்தார் . அந்தப் படத்துல நாளை நமதே . . . . நீல நயனங்களில் . . . ' பாட் டெல்லாம் ஹிட் ஆச்சு !

ஒரு நாள் எம் . ஜி . ஆர் . திடீர்னு போன்ல கூப்பிட்டாரு , ' விசு . . . . எம் . ஜி . ஆர் . பிக்சர் ஸுக்கு நீ ஒரு படம்கூடப் பண்ணலை . . . ஒரு மியூஸிகல் சப்ஜெக்ட் படம் . . . சிங்கப்பூர் , ஜப்பான் ( எக்ஸ்போ ) ல் பாட்டுகளோட படப்பிடிப்பு நீ தான் செய்தாகணும் . . . ' என்று சொன்னாரு . நானும் ஒப்புக் கொண்டேன் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சில வாரங்கள் கழித்துத் தினத்தந்தி ' பத்திரிகையில் - எம் . ஜி . ஆர் . பிக்சர்ஸ் தயாரிக்கும் உலகம் சுற்றும் வாலிபன் ' படத்துக்காகக் குன்னக்கும் வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டன என்று ஒரு செய்தியைப் படிச்சேன் . என்னோட ஒரு குணம் , என்னை விரும்பிக் கூப்பிட்ட சந்தோஷத்தோட்ட வேலை செய்வேன் . கூப்பிடலையேனு கோபமும் படமாட்டேன் என்னை வெச்சுப் படம் பண்ணின டைரக்டர் . அடுத்த படத்துக்கு இன்னொரு இசையமைப்பாளரைப் போட்டா , அதற்காக மனஸ்தாபமும் கொள்ள மாட்டேன் . எனக்கு என்ன உண்டோ எனக்கு என்ன கிடைக்கணுமோ , அதை ஆண்டவன் ஏற்கெனவே எழுதி வெச்சுட்டான்கிற நம்பிக்கை எனக்கு உண்டு .

நான் எற்கெனவே நம் நாடு ' , ஆயிரத்தில் ஒருவன் போன்ற எம் ஜி ஆர் . நடிச்ச மற்ற கம்பெனி படங்களுக்கு வொர்க் பண்ணியிருக்கேன் . அதனால் , நான் உலகம் சுற்றும் வாலிபன் பத்திக் கவலைப்படலை .

மெஜஸ்டிக் ஸ்டூடியோ வில ரிக்கார்டிங்கில் நான் இருக்கும்போது எம் . ஜி . ஆர் . கிட்டேயிருந்து போன் : ' நீ மனசுல என்ன நினைச்சுக் கிட்டிருக்கே ? இந்தப் பக்கமே வரக் காணோம் . ' உலகம் சுற்றும் வாலிபன் ' படத்துக் தப் பாட்டுகள் எடுக்க வேண்டாமா ? என் கம்பெ னின்னா உனக்கு ரெஸ்பான்ஸிபிலிடி கிடை யாதா ? அப்படி இப்படினு என்னைத் திட்டினாரு .

' நீங்க என்ன வேணும் னாலும் சொல்லுங்க . என்னை மன்னிக்கணும் . இந்தப் படத்துக்கு எம் . ஸ் . விஸ்வநாதன் மியூஸிக் இல்லை என்று அழுத்தமா சொன்னேன் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

' என்ன வார்த்தை பேசறே நீ ? ' - எம் . ஜி . ஆர் ' இந்தப் படத்துக்கு நான் மியூஸிக் இல்லை . . . . என் பாக ஒருத்தர் இருக் காரு . . . நான் விஸ்வநாதன் . . . அவர் தன்னக்குடி வைத்தியநாதன் . . அதனால ' நீங்க அவரை வந்து முடிக் கரதுதான் நல்லது . . . நீங்க வோ படம் கொடுத்தாலும் சரி . கொடுக்காட்டாலும் சரி . . . இந்தப் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் . . . " என்று தைரியமா சொல்ல போனை வெச்சுட்டேன் . கொஞ்ச நேரத்துல அவரோட மானேஜர் குஞ்சப்பன் காரோட வந்து , உங்களை அர்ஜெண்ட்டா அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாரு எம் . ஜி . ஆர் . . . " என்று கூப்பிட்டாரு .

பட்டிக்காட்டுப் பொன்னையா ' பட செட்டில் இருந்த எம் . ஜி . ஆரைப் போய்ப் பார்த்தேன் . அவர் காலைத் தொட்டு வணங்கினேன் . நான் கொஞ்சம் கொஞ்சமா முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கேன் . ஜனங்க மத்தியில் கொஞ்சம் பிரபலமாயிருக்கேன் . குன்னக்குடி வைத்தியநாதன் இனிமேதான் தெரியப் போறார் . அவரு சங்கீத மேதை . . . . ஒரு நல்ல வித்வான் அவர் . . . இசையமைக்கக் கூடிய திறமை அவருக்கு உண்டுன்னு எனக்குத் தெரியும் . . . என்கிட்ட நீங்க எப்படி வேலை வாங்குவீங்களோ , அதைப் போல் அவர்கிட்டேயும் வாங்கி படத்துல பாட்டுகள சேர்க்குமே . . நீங்க எனக்கு வேற படம் கொடுங்க . . . . . அதைச் செய்யறேன் . . . ' என்று சொல்விட்டுத் திரும்பி வந்துவிட்டேன் .

அடுத்த நாள் என் அம்மாவுக்கு போன் பண்ணி , ஏக கம்ப்ளெயிண்ட் அதுக்கு , அம்மா, "விசு வேணாம்னு சொன்னா காரணம் இருக்கும் . அதையும் என்கிட்ட சொன்னான் . அவனை விட்டுடுங்க என்று சொன்னாங்க .

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" சரி . - சா . . . உன்னை எப்படி வரவழைக்கணுமோ , அப்படி வரவழைச்சுக்கிறேன் . . . ' என்று என்கிட்ட சொல்லி போனை வெச்சுட்டார் எம் . ஜி . ஆர் . !

ஒரு வாரம் கழிச்சு . அமாவாசை அன்னிக்குப் பூஜை . . . . உங்களை எம் . ஜி . ஆர் . வரச்சொன்னார் . . . " என்று மறுபடியும் எனக்கு அழைப்பு . இதைத் தொடர்ந்து குன்னக்குடியே , அண்ணா . . . உலகம் சுற்றும் வாலிபன் ' படம் நீங்க செய்யுங்க அண்ணா . . . நீங்க செஞ்சா என்ன , நான் செஞ்சா என்ன . . ? எனக்கு வேற படம் கொடுக்கறேன்னு சொல்லியிகுக்கார எம் . ஜி . ஆர் . . ' என்று குன்னக்குடி பர்மிஷன் கொடுத்த பிறகு தான் நான் அந்தப் படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கிட்டேன் .

அடுத்த நாள் போனேன் . எம் . ஜி . ஆர் . வந்தார் . என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு , ஒரு குழந்தைக்கு ' வெவ் வே‘னு அழகுகாட்டற மாதிரி காட்டிட்டுப் போயிட்டாரு . . . .

' உலகம் சுற்றும் வாலிபன் ' படத்துக்காகக் காலையில் உட்காருவோம் . . . சிச்சுவேஷன் சொல்வாங்க . . . . கவிஞர்கள் பாட்டு எழுதுவாங்க . . . நான் டியூன் போடுவேன் . . . . மத்தியானம் எம் . ஜி . ஆர் . வந்து கேட்பாரு . . . . சாயங்காலம் வரு வாரு . . . ' டியூனா கேட்டபோது நல்லா இருந்தது . . . . ஆனா , இப்போ நான் நினைச்ச மாதிரி பாட்டு வரலையே தம்பி . . . " என்று சொல்லிட்டுப் போயிடு வாரு . என் வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டின மாதிரி இருக்கும் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

வெளிநாட்டுல எடுக்கப்போற படம் என்கிறதால் , கிட்டத்தட்ட நூறு கலைஞர்கள் அடங்கிய ஆர்க்கெஸ்ட்ராவை வெச்சு மியூஸிக் போடுவேன் . ரிக்கார்டிங் தியேட்டர் ஹால் நிரம்பி வழியும் . இவ் வளவு செலவு பண்ணிப் பாட்டு இசைய் மைச்சும் திருப்தி இல்லேங்கறாரே எம் . ஜி . ஆர் . ! என்ன பண்றது னு ரொம்ப அப்செட் ஆயிடுவேன் . சரி , உடனே மாத்தித் தந்துர்றேன் னு சொல்வேன் " வேணாம் . . . வேணாம் . . . என் தலை யெழுத்து ! வந்தது போதும் . . . எடு . . . . என்று சொல்லிவிட்டு எம் . ஜி . ஆர் திருப்தியில்லாமப் போயிடுவாரு .

அடுத்த நாள் வருவார் - " நேத்துக் கேட்ட பாட்டைவிட இன்னிக்கு எடுத்த பாட்டு ரொம்ப மோசமா இருக்கே . . . . என்று காமெண்ட் அடிப்பார் . கேக்கற வங்க எல்லாம் பாட்டுகள் நல்லா இருக்குன்னுதானே சொல்றாங்க . . . எனக்கும் திருப்தியாதானே இருக்கு . . . . எம் . ஜி . ஆர் . என்னதான் நினைக்கிறாருனு என் மனசுக்குள்ளே சங்கடங்கள் . . . . சலிப்பு . . . வேதனை . . . . மனநிம்மதியில்லாமலே இருந்தேன் . வஞ்சனையில்லாமப் பதி னைந்து நாட்கள்ல பத்துப் பாட்டுகள் ரிக்கார்ட் பண்ணிக் கொடுத்தேன் .

இதை முடிச்சுக் கொடுத்துட்டு , நான் பாலாஜி கம்பெனி ஆபீஸ்ல இருக்கும் போது ஒரு போன் . . . )

" என்ன விசு ? நாளைக்கு சிங்கப்பூருக்குக் கிளம்பறோம் - படமெடுக்க . . . உனச் குப் பணம் வேணாமா ? ' - எம் . ஜி . ஆர் . !

" எனக்குப் பணம் எதுவும் வேணாம் . . . மன்னிச்சுக்குங்க . . . " - நான் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

" ஏன் . . . ? ! " " நீங்கதான் ஒரு பாட்டும் நல்லா இல்லேன்னுட்டீங்களே . . . உங்களைப் பார்க்க வெட்கமா இருக்கு . . . நான் ரொம்ப சின்ஸியராத்தான் வொர்க் பண்ணிளேன் . . . . "

" நீ மரியாதையா கிளம்பி வர்றியா . . . . இல்லே , நான் அங்கே வரட்டுமா ? " என்று எம் . ஜி . ஆர் . கடைசியா சொல்லிட்டு வெச்சுட்டாரு . நான் உடனே காரை எடுத்துக்கிட்டுப் போனேன் .

அங்கே போனா , இவரு டேப் ரிக் கார்டர்ல பாட்டுகளைப் போட்டுக் கேட்டுக்கிட்டிருக்காரு . ஷூட்டிங்குக்கான ஏற்பாடுகளை மத்தவங்க செஞ்சுக்கிட்டிருந்தாங்க .

என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து , ஆளுயர மாலை போட்டு , என்னைக் கட்டியணைச்சு , சாக்லெட் எல்லாம் கொடுத்து , " உனக்குப் பணம் . . . இந்தா வெச்சுக்கோ . . . " என்று பெரிய பையில பணம் . . . " எடுத்துக்கிட்டுப் போ . . . " என்று சொன்னாரு . வேணாம்னு நான் மறுபடி மறுத்தேன் .

" ஏன் ? ! அடுத்த படத்துக்கு விசுகிட்ட ஏதாவது ஸ்டாக் இருக்கானு இங்க எல்லோரும் கேட்கறாங்கப்பா . . . அந்த அளவுக்கு நீ என் படத்துக்குப் பாட்டுகள் நல்லா போட்டிருக்கியாமே . . . "

" அவங்க கேக்கறாங்களா ? அப்ப உங்களுக்குப் பிடிக்கலையா ? அப்பக் கண்டிப்பா இந்தப் பணம் வேணாம் . . . நீங்களே வெச்சுக்குங்க . . . '

" இல்லே . . . நீ ரொம்ப நல்லா பண்ணி யிருக்கே . . . . ஒவ்வொரு பாட்டையும் நல்லா இல்லே , நல்லா இல்லேன்னு சொன்னா . . . . அடுத்த பாட்டுல நீ இன்னும் கவனம் செலுத்துவேனு அப்படிச் சொன்னேன் . . . "

" இல்லே . . . நீங்க அங்கேதான் தப்புப் பண்ணிட்டீங்க . . . . . ஒவ்வொரு பாட்டையும் நீங்க ரசிச்சிருந்தீங்கன்னா . நான் அடுத்தடுத்து இன்னும் பெட்டர் பாட்டுகளைக் கொடுத்திருப்பேனே ? "

" அதான் தம்பி கலைஞன் . . . " என்றார் எம் . ஜி . ஆர் . ! இதான் அவர்கிட்டே இருந்த கிரேட்னஸ் !

அவர் கொடுத்த பணத்தைப் பிறகு எண்ணிப் பார்த்தேன் . . . நான் நினைத்தே பார்த்திராத அளவுக்குப் பெரும் தொகை இருந்தது !

எம் . ஜி . ஆர் . இறக்கறதுக்கு நாலு மாசத்துக்கு முன்பாக , ஜேப்பியார் என் கிட்டே வந்தார் . நான் அப்போ வாஹி னியிலே ரீ - ரிக்கார்டிங் பண்ணிக்கிட்டிருந்தேன் .

" எம் . ஜி . ஆர் . என்னை அனுப்பிச் சாரு . . . . . உங்களுக்குப் பெரிய பாராட்டு விழா நடத்தணும்னு விரும்பறார் . . . " என்று ஜேப்பியார் சொன்னார் .

உடனே நான் , ' பாராட்டு விழா நடத்தற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன் ? அதெல்லாம் வேண்டாம்னு எம் . ஜி . ஆர் . கிட்ட தயவு செஞ்சு சொல்லி டுங்க . . . " என்று மறுத்துச் சொல்லி அனுப்பிவிட்டேன் .

கொஞ்ச நேரம் கழிச்சு எம் . ஜி . ஆர் - கிட்டயிருந்து போன் . . . . .

(16.01.1994 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)