Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 4

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

“முதன் முதலா ஒரு நூறு ரூபாய் நோட்டை நான் பார்த்ததே அப்பதான்!“

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 4

“முதன் முதலா ஒரு நூறு ரூபாய் நோட்டை நான் பார்த்ததே அப்பதான்!“

Published:Updated:
Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
Naan Oru Rasigan - M.S.Viswanathan

ஷ் பார்த்துவிட்டு வந்தவங்க, "இவன் வேஷப் பொருத்தம் நல்லாயில்லே... பாலகண்ணகியாக நடிச்ச அந்தப் பொண்ணுக்கு இவன் தம்பி மாதிரி இருக்கான்"னு சொல்லிட்டாங்க. இதுல விநோதம் என்னன்னா, அக்கா மாதிரி வயசு அதிகமா தெரிஞ்ச அந்தப் பொண்ணை கான்சல் பண்ணலை. தம்பி மாதிரி இருக்கான்னு என்னை மறுத்துட்டாங்க.

முழுநேரக் கச்சேரி செய்யும் வித்வானாகவும் போகாமல், நடிக்க வாய்ப்புத் தேடி வந்த இடத்தில் நடிப்பு சான்ஸும் நழுவிப் போய்... ஆற்றில் ஒரு கால்... சேற்றில் ஒரு கால்... என்ற நிலைமையில தத்தளிச்சேன். என்ன ஆனாலும் ஜூபிடர் பிக்சர்ஸைவிட்டுப் போறதில்லை என்ற ஒரு முடிவெடுத்தேன். என்னுடைய பிடிவாதத்தைப் பார்த்து, அங்கேயே எனக்கு ஆபீஸ்பாய் வேலை கொடுத்தாங்க.... மாதச் சம்பளம் ஐந்து ரூபாய்! (இதுல நாலு ரூபாயை எங்கம்மாவுக்கு அனுப்பிச்சிட்டு, மீதி ஒரு ரூபாயை என் செலவுக்குக் கொடுப்பாங்க!) -- ஆபீஸ் பாயாக இருந்தா ஒரு சலுகை... எங்கே வேணும்னாலும், எப்போவேணும்னாலும் போகலாம். இருந்தாலும், அப்போ புரொடக்ஷன் மானேஜரா இருந்த சுந்தரம்கிறவரைக்காக்கா பிடிச்சு மியூஸிக் ஹால்ல என்னைப் போடச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன். அதன் படியே. மியூஸிக் ஹால் இன்சார்ஜா என்னைப் போட்டாரு.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எந்தக் காரணம் கொண்டும் கையில் கணிசமா பணம் எதுவும் இல்லாம. வெறுங்கையோட ஊருக்குத் திரும்பிப் போகக்கூடாதுங்கிற வைராக்கியம் வெச்சிருந்தேன். அதனால் கண்ணகி '(இதுல முருகன் வேஷம். ஆஹான்னு ஒரே ஒரு டயலாக்!) குபேர குசேலா, 'மஹாமாயா'ங்கிற மூன்று படங்கள் ரிலீ ஸாகிற வரைக்கும் பல்லைக் கடிச்சிட்டுக் காத்திருந்தேன். கையில் ஐந்நூறு. அறு நூறு ரூபா வரைக்கும் சேமிச்சிருந்தேன். அம்மாவைப் பிரிஞ்சு வந்து ஒண்ணரை வருஷத்துக்குமேல் ஆயிடுச்சேன்ற ஹோம் சிக்!

எங்கே வேலையில் இருந்தாலும் நான் நல்ல பேர் எடுத்தேன் என்றால், அதற்கு என் அம்மாதான் காரணம். மகனைப் போஷாக்கா வளர்க்கப் பணம் இல்லையே என்ற ஆற்றாமை நிறைய உண்டு! என்ன தலைபோற வேலை இருந்தாலும், தினமும் காலையில் எழுந்தவுடனே குளிக்கணும். சாமி (நான் முருகபக்தன்) கும்பிடணும். நெற்றியில் விபூதி, குங்குமம் இடாமச் சாப்பிட உட்காரக்கூடாது... இப்படியெல்லாம் ஒழுக்கமா வளர்த்த என் அம்மா, தெய்வம் மாதிரி!

'வேள வேளைக்குச்' சாப்பாடு, நல்ல துணினி... இதெல்லாம் இல்லாததால உடம்புல' சொறிசிரங்காட வீட்டுக்கு வந்தேன்... உன் நிலைமையைப் பார்த்த அம்மா, 'இன்னும் ஏண்டா நீ உயிரோட இருக்கே'ன்னு நேந்துக்கிட்டாங்க..."

எல்லோருக்கும் புதுத் துணிமணிகள் ஸ்வீட் பலகாரமெல்லாம் வாங்கிக்கிட்டு அம்மாவைப் பார்க்க ஊருக்குப் போனேன். என்னைப் பார்த்த சந்தோஷத்துல அம்மா என்னைக் கட்டிக் கிட்டு அழுதுட்டாங்க. அது ஆனந்தக் கண்ணீர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

எனக்கு இலவசமா சங்கீதம் கத்துக் கொடுத்து. நான் முன்னேற ஒரு பாதையை அமைச்சுக் கொடுத்த குருநாதர் நீலகண்ட பாகவதர் வீட்டுக்குக் கிளம்பினேன். குருதட்சணையாவோ அல்லது நன்றிக்கடனாகவோ அவருக்கு ஒரு காலணாகூட அப்போது தரவில்லை என்ற ஆதங்கம் இருந்து வந்தது. இந்த முறை குருநாதருக்கும் அவர் குடும்பத்துக்கும் புதிய டிரஸ்கள் வாங்கி பூ, பழம், வெற்றிலைப் பாக்குத் தட்டுடன் தேடிச் சென்றேன். ஆனால், அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்துவிட்டார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு அப்செட் ஆகிவிட்டேன். வீட்டினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இயந்திரம் போலத் திரும்பினேன். இந்த மனவேதனையால் பல நாட்கள் எதுவுமே பிடிக்காமல், மீண்டும் ஜூபிடர் பிக்சர்ஸ் ஆபீஸுக்கே வந்து சேர்ந்தேன்.

இங்கேயும் கோரஸ் பாடறது, எக்ஸ்ட்ரா வேஷம் போடறதுன்னு காலம் கடந்ததே தவிர, மனசுக்கு நிறைவா இல்லே.... இந்தச் சமயத்துல, "என் ட்ரூப்பில் வேஷம் தரேன்... வா" ன்னு மெட்ராஸிலிருந்து டி.எஸ். பாலையா அண்ணன் என்னை ஆத்தூருக்கு ( சேலம் ) கூப்பிட்டுக்கிட்டுப் போயிட்டாரு. அவரோட நாடகத்துல சின்னச் சின்ன வேஷம்... மெயினா நாடகத்துக்கு ஸ்பெஷலா நானே பாட்டுகள் கம்போஸ் பண்ணி வாசிச்சேன். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டும் டிராமா சரியா போகலை. ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறதே அபூர்வம்..... வெளியில் யாரோடயும் தொடர்பு வெச்சுக்காதபடி கம்பெனியில் படு ஸ்ட்ரிக்ட். அந்த நேரத்துல எங்க தாத்தா, அம்மா, சித்தப்பா, சித்தில்லாம் கண்ணனூர்லேருந்து சேலத்துக்கு மாற்றலாகி வந்தாங்க. என் நிலைமையைக் கேள்விப்பட்ட சித்தப்பா பாலையா அண்ணனுக்குத் தெரியாம என்னைக் கடத்திக்கிட்டு வந்துட்டார் சேலத்துக்கு. அப்புறம் சேலத்துலேர்ந்து திருச்சி, திருவாரூர்னு பல இடங்கள்ல சுத்தி, பழையபடி சேலத்துக்கே திரும்பினேன். வேளாவேளைக்குச் சாப்பாடு, நல்ல துணிமணி... இதெல்லாம் இல்லாததால உடம்புல சொறிசிரங்கோட வீட்டுக்கு வந்தேன். என் நிலைமையைப் பார்த்த அம்மா, "இன்னும் ஏண்டா நீ உயிரோட இருக்கே" ன்னு நொந்துக் கிட்டாங்க. இது ஒரு பக்கம் இருந்தாலும், என்னை இழுத்துக்கிட்டுப் போய் உடம்புல இருக்கிற அழுக்குப் போறதுக்காகத் தேய்ச்சிக் குளிப்பாட்டி, வயிறு நிறைய சாப்பாடு போட்டாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சேலத்துல இருந்த மாடர்ன் தியேட் டாஸ்ல டி.ஆர்.சுந்தரம், பர்மா ராணி'ங் கற்படம் எடுத்துக்கிட்டிருந்தாங்க (அதே சமயத்துல, ஜூபிடர் பிக்சர்ஸ் மெட்ராஸ் ஆபிஸைக் கலைச்சிட்டு கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் செயல்படுதுங்கற விவரமும் தெரியவந்தது.).... இந்தப் படத்துல கோரஸ் பாடவாவது ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு கேட்கப் போனேன். அங்கே பர்மா ராணி' படத்துக்கு இசையமைப்பாளராக இருந்தவர் கே.வி. மகாதேவன். அவரிடம் கோரஸ் பாட சான்ஸ் கேட்டேன்.

அப்போ மகாதேவன் சொன்னார்:" இதோ பாரு விஸ்வநாதா.. நீ இப்படியே கோரஸ் பாடிக்கிட்டிருந்தா, உன் வாழ்க்கையே ஸ்பாயில் ஆயிடும். கோயம்புத்தூர்ல ஜூபிடர் பிக்சர்ஸார் பல படங்கள் எடுக்கப் போறாங்கன்னு கேள்விப்பட்டேன். நீ அங்கே போ... நடுவில் கம்பெனியை விட்டுப் போனதெல்லாம் தப்புன்னு அவங்க காலைக் கெட்டியா பிடிச்சுக்கிட்டுக் கேளு..... அவங்களை விடாதே.... கோரஸை மறந்துடு... அப்பத்தான் நீ உருப்படியா வருவே.... உடனே கோயம்புத்தூருக்குக் கிளம்பு...'னு சொன்னார். நான் தலையைச் சொறிஞ்சுக்கிட்டு நின்னேன்.

உடனே புதுசா சட்டை, வேட்டி எடுத்துக் கொடுத்து, கைச்செலவுக்கு மூணு ரூபாயும் தந்தார். கே.வி.எம்.! அவரோட கை, ராசியான கை. அதனால் தான் நான் தலையைச் சொறிஞ்சு நின்னேன் . அவரும் புரிஞ்சுக்கிட்டுக் கொடுத்தாரு... அதை வாங்கிக்கிட்டு நேரா அம்மாகிட்டே போனேன். கால்லே விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு கோயம்புத்தூர் ரயில்ல ஏறிட்டேன்.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சென்ட்ரல் ஸ்டூடியோல, ஜூபிடர் சோமு. எஸ்.கே. மொகிதீன் இரண்டு பேரையும் சந்திச்சேன். செம்மையா டோஸ் விட்டாங்க. பொறுமையா இருந்து மன்னிப்பு கேட்டேன். ரொம்பப் பெருந்தன்மையோட மன்னிச்சாங்க....' நடிக்கறதுக்கெல்லாம் சான்ஸ் இல்லே... புரொடஷன் வேலையைப் பாரு'ன்னு சொல்லிட்டாங்க. அப்போ எஸ். எம். சுப்பையா நாயுடு மியூஸிக் டைரக்டர்... அந்த பீரியடுல' வால்மீகி', 'ராஜகுமாரி', 'வேலைக் காரி', 'முருகன்' போன்ற படங்கள் எடுக்கப்பட்டன. . .

அங்கே ஆர்க்கெஸ்ட்ரா இன்சார்ஜ் வேலை எனக்கு. மாசம் இருபது ரூபா சம்பளம். காபி கொடுக்கறது..... வாத்தியங்களை க்ளீன் பண்ணி எடுத்துக் கொடுக்கறது.... மியூஸிக் டைரக்டர் சுப்பையா நாயுடுவோட சைக்கிளைத் துடைக்கிறது... இப்படியெல்லாம் வேலை செஞ்சு அங்கே வர்ற இசையமைப்பாளர்கள்கிட்டல்லாம் நான் நல்ல பெயர் வாங்கினேன்.

சுப்பையா நாயுடுவுக்குக் கீழே இருந்து நோட்ஸ் எடுப்பேன்.

ஆர்க்கெஸ்ட்ராவுக்கு அதைக் கொடுப்பேன். பதினெட்டு மணி நேரம் கடுமையா உழைப்பேன். இந்த நேரத்துல ஜூபிடர் பிக்சர்ஸ்ல மாதச் சம்பளம் வாங்கி நடித்துக் கொண்டிருந்தவர்கள் -எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, எம்.என்.நம்பியார், மனோகர் எம்.ஜி.சக்ரபாணி. நரசிம்மபாரதி போன்றவர்கள் எல்லாம் லாட்ஜ்ல ஒண்ணா இருந்தாங்க. இப்படித் தமிழ்த் திரையுலகில் பாப்புலரா ஒளி வீசிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் நானும் கலந்தேன்.

வீர அபிமன்யு' படம் எடுக்கத் துவங்கினர். இசை:சுப்பையா நாயுடு. 'புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே'என்ற பாட்டை எழுதிக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். இதற்கு டியூன் போடுவதில் மும்முரமாக இருந்தார் நாயுடு. இரண்டு நாள் என்னென்னமோ போட்டு ட்ரை செய்தார். திருப்தியா வரவில்லை.

கோவை ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆர்க்கெஸ்ட்ராவா வேலை செய்யற போதே இந்தி இசையமைப்பாளர் நௌஷத் அலியின் மியூஸிக்னா உயிர். அவர் படங்கள் வரும்போதெல்லாம் நான், ஜி.கே. வெங்கடேஷ், கோபால கிருஷ்ணன் ஆகிய மூணு பேரும் நைட்ஷோ போவோம். படம் பார்த்தவுடனே நெளஷத்துக்கு லெட்டர் போடுவேன். அந்த அளவுக்குப் பைத்தியம். நௌஷத் பாட்டுக்களைத் திரும்பத் திரும்பக் கேட்கணும்னு ஆசை. ஆனா, கிராமபோன் பொட்டிவாங்கவோ, ரிக்கார்டு வாங்கவோ இயலாத வறுமை நிலை. ஒரு நாள் நைட் இரண்டு மணிக்கு ஒரு ஓட்டல்ல நெளஷத் ரிக்கார்டுகளைப் போட்டாங்க. அங்க இருந்த பாலத்தில நாங்க மூவரும் அந்தப் பாட்டுக்களைக் கேட்டுக்கிட்டு இருக்கும்போது ஒரு கார் வந்து நின்னுது. கார்லருந்து இறங்கினது நடிகை டி.ஆர்.ராஜகுமாரி. "இந்தப் பனியில் உட்கார்ந்துக்கிட்டு அடுத்த நாள் ராத்திரி எல்லோரும் போன பிறகு நான், ஜி.கே.வெங்கடேஷ். கோபாலகிருஷ்ணன் ஆகிய மூணு பேரும் வாத்தியங்களை எடுத்து வெச்சுக்கிட்டோம். புது வசந்தமாமே... என்ற அந்த வரிகளுக்கு நான் டியூன் போட்டேன். என் வாழ்க்கையில் நான் போட்ட முதல் டியூன் இதுதான்! ரெண்டு மணிநேரம் கஷ்டப்பட்டு பிறகு டியூன் போட்டுப் பாடிப் பார்த்தோம். எங்களுக்குப் பரமதிருப்தி. வாசல்லே ஏதோ நிழலாடிச்சு. சுப்பையா நாயுடு முகம் நிறைய கோவத்தோட வேகமா வந்தாரு. "லைட்டெல்லாம் எரியவிட்டு என்னடா செஞ்சுக் கிட்டிருக்கீங்க..." என்று கேட்டாரு. நாங்க டியூன் போட்ட சங்கதியை அவர் கிட்ட சொன்னேன். "அப்படியா... எங்கே பாடிக்காட்டுப் பார்க்கலாம்..." என்றார். நான் வாசிச்சுக் காண்பிச்சேன். என்னைக் கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டாரு.

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ். விஸ்வநாதன் - 4

"டேய்... ரொம்பப் பிரமாதமா டியூன் போட்டிருக்கே..... நான் ஒப்புக் கறேன்... ஆனா, இதை நீ போட்டதா என்ன பண்றீங்க...?"னு கேட்டாங்க. நௌவுத்தோட லேட்டஸ்ட் பாட்டுக்களைக் கேக்கறதைச் சொன்னேன். "ஏன்.... உங்ககிட்ட கிராமபோன் இல்லியா?"ன்னாங்க. இல்லேன்னேன். அடுத்த நாள் அவங்களை வந்து பார்க்கச் சொன்னாங்க.... போனேன். ஒரு நூறு ரூபா நோட்டை என்கிட்டே கொடுத்து கிராமபோன் வாங்கிக்கச் சொன்னாங்க. முதன் முதலா ஒரு நூறு ரூபாய் நோட்டை நான் பார்த்ததே அப்பதான்!

சொன்னா யாரும் ஒப்புக்கமாட்டாங்க... ஏளனம் செய்வாங்க.... அதனால நீ போட்டதா யார்கிட்டயும் சொல்லாதே... நான் போட்டதா சொல்லு... நாளைக்குச் சொல்லி நோட்ஸ் எல்லாம் எழுதி ஆர்க் கெஸ்ட்ராவுக்குக் கொடுத்துடு..... திருச்சி லோகநாதனுக்கும் யு.ஆர். ஜீவரத்தினத்துக்கும் பாடக் கத்துக்கொடுத்துடு....'னு சொன்னார் சுப்பையா அண்ணன்.

அந்தச் சமயத்துல, படத்தோட டைரக்டர் காசிலிங்கம் அங்கே வந்தாரு. உடனே சுப்பையா அண்ணன், “டேய்... அந்தப் பாட்டுக்குப் போட்ட டியூனை வாசிச்சுக் காமிடா..." என்று சொல்ல... நான் வாசிச்சபடி பாடிக்காண்பித்தேன்.

டைரக்டர் காசிலிங்கம், "ரொம்ப அருமையா போட்டிருக்கீங்க அண்ணே!" என்று சுப்பையா அண்ணனைப் பாராட்ட... அண்ணன் என்னைப் பார்க்க.....

மறுநாள் அந்தப் பாட்டு ரிக்கார்டிங்... அப்போ இருந்த என்னோட நிலைமை...

(28.11.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)