அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

நான் ஒரு ரசிகன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 5

Naan Oru Rasigan - M.S.Viswanathan
பிரீமியம் ஸ்டோரி
News
Naan Oru Rasigan - M.S.Viswanathan

“அவனுக்கு மியூஸிக்கைப் பத்தி என்ன தெரியும் ?"

ன்னிக்கு என்னோட பாட்டு ரிக்கார்டிங். என் வாழ்க்கையில் இதுபோல ஒரு ஆனந்தமான நாளை நான் இனி பார்க்கப்போறதே இல்லைன்ற இனிய நினைவு!

நான் போட்ட டியூன். ஆனா, நான் போட்டேன்னு சொல்ல முடியாம முழுங்க வேண்டிய நிலைமை. பாட்டு ரிக்கார்டிங் ஆச்சு. படமும் ரிலீஸாச்சு. டைட்டில்ல சுப்பையா அண்ணன் பேரு. இந்தப் பாட்டும் பாப்புலர் ஆச்சு.

இதற்குப் பிறகு, சுப்பையா அண்ணன் ஒர்க் பண்ற படங்களுக்கெல்லாம் ரெண்டு மூணு பாட்டு இசையமைக்க எனக்கும் சான்ஸ் கொடுத்தார். டைட்டில்ல அண்ணன் பேருதான்!

இப்படியே பல படங்களுக்கு நான் டியூன் அமைக்க, வரிசையா எல்லாமே சக்ஸஸ் தான். ஆனா, நான்தான் போட்டேன்னு சொல்ல முடியாத நிலை.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

சுப்பையா அண்ணன் என்னை ஒரு குழந்தை மாதிரி போற்றிப் பாதுகாத்தாரு. வீட்டுலயும் சரி, ஆர்க்கெஸ்ட்ரா மத்தியிலும் சரி, எனக்கு ஒரு கண்ணியமான இடம் தந்தார். அப்போ எனக்கு மாச சம்பளம் எழுபத்தஞ்சு ரூபாய் ( அப்போ நானுறு , ஐந்நூறு ரூபாய்னு சம்பளம் வாங்கினவங்கள்லாம் இன்னிக்கும் இருக்காங்க.. இப்ப எனக்காக வாசிக்கிறாங்க).

எதிர்பாராம திடீர்னு ஒரு திருப்பம். ஜூபிடர் பிக்சர்ஸ் லீஸ் முடிஞ்சு போய் கம்பெனியை க்ளோஸ் பண்றதுனு முடிவெடுத்து, சுப்பையா அண்ணன், நான் உட்பட அத்தனை பேருக்கும் மூணு மாச சம்பளத்தோட வேலை நீக்க நோட்டீஸும் கொடுத்துட்டாங்க. அடுத்து. கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் போர்ட்டராகத்தான் வேலை செய்யப் போகணும்னு நான் நெனைச்சிக்கிட்டேன். என்ன பண்றதுனு தெரியாம நடுக்கடல்ல சிக்கித் தவிக்கிற சங்கடம். மத்த எல்லாரும் ஊரைப் பார்க்கப் போயிட்டாங்க. ஆனா, நான் மட்டும் போகாம அங்கேயே நின்னுக்கிட்டிருந்தேன் .

ராத்திரி ஒன்பதரை மணியிருக்கும். சுப்பையா அண்ணன் வந்தார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு தரதரவென இழுத்துப்போய் ஜூபிடர் முதலாளி சோமு சார் முன்னே நிறுத்தினாரு.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கண்ணெல்லாம் கலங்க, "இந்தப் பையனை லேசா நெனைக்காதீங்க. கடவுள் சத்தியமா சொல்றேன்.. சமீபத்துல நம்ம கம்பெனி எடுத்த படங்களோட பாட்டுக்கள் ஹிட் ஆச்சே.. அதெல்லாம் என் கைவண்ணம் இல்லை. எல்லாம் இந்தப் பையன் போட்டது. பேரெல்லாம் அவனைத் தான் போய்ச் சேரணும். அவன் லைஃபை ஸ்பாயில் பண்ணாதீங்க. என் வாழ்க்கை எல்லாம் முடிஞ்சு போச்சு. இவனை மெட்ராஸுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் சி.ஆர். சுப்பராமன்கிட்டயாவது சேர்த்து விடுங்க"னு சொல்லிக் கண்ணீர் விட்டு அழுதார் சுப்பையா அண்ணன்.

இதைக் கேட்ட நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டேன். முன்னே நான் போட்ட டியூன்களுக்கு டைட்டில்ல சுப்பையா அண்ணன் பேரு வந்ததேனு மனசுக்குள்ள ஒரு ஆதங்கம் இருந்தது. ஆனா, இப்போ எப்படிப்பட்ட சூழ்நிலையில் எதை எடுத்துச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி தான் ஒரு பெரிய மனிதர் என்பதை சுப்பையா அண்ணன் நிரூ பிச்சுட்டாரு. அப்போ பிரபல பாடகியா இருந்த யூ.ஆர். ஜீவரத்தினமும், புரொடக்ஷனில் அனுபவசாலியான டி.எஸ். வெங்கிடசாமியும் எனக்காக சோமு முதலாளி கிட்ட ஸ்ட்ராங்கா சிபாரிசு பண்ணாங்க.....

"அப்படியா..? இந்தப் பையன் போட்ட மியூஸிக்கா அதெல்லாம்..!" னு ஆச்சரியப்பட்டுப் போனார் முதலாளி சோமு . சுப்பையா அண்ணன் கேட்டுக் கிட்டப்படி என்னை மெட்ராஸுக்கும் கூட்டிக்கிட்டு வந்தாங்க . சுப்பராமன் சார் கிட்ட என்னைச் சேர்த்துவிட்டாங்க . நான் சேர்ந்தபோது டி . கே . ராமமூர்த்தி டி . ஜி . லிங்கப்பா , கோவர்த்தனம் . . . இவங் கள்லாம் அவருக்கு அசிஸ்டெண்ட்களாக ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தாங்க . எல்லா ரோடயும் அறிமுகமாச்சு . பாட்டுகளுக்கு டியூன் போட்டு , வாத்தியக்காரர்களுக்கு நோட்ஸ் எழுதிக் கொடுத்துக் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து சுப்பராமன் சாரோட பெட் ஆயிட்டேன் .

பேச்சுலரா இருந்த நான் , ஜி . கே . வெங்கடேஷ் , தபேலா கோபால கிருஷ்ணன் மூணு பேரும் பதினோரு ரூபாய் வாடகையில் ஜூபிடர் லாட்ஜ்ல ( மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க் பக்கத்துல இருந்தது ) ரூம் எடுத்துத் தங்கி னோம் . ஒரு நாள் நாங்க மூணு பேரும் லஸ் கார்னர்ல ' ஈஸ்வரி லஞ்ச் ஹோம் ' என்ற ஓட்டல்லே சாப்பிட்டு லஸ் பக்கமா வந்துக்கிட்டிருந்தோம் . அப்ப ஒரு கார் வந்து பக்கத்துல பிரேக் போட்டு நின்னுச்சு . கார்லேருந்து எஸ் . எம் . ராஜா ( இவரு வைரம் அருணாசலம் நாடக கம் பெனி மூலமா எனக்கு நண்பர் ஆனவர் . நல்ல ஆர்மோனிஸ்ட் ) இறங்கி வந்தாரு . " டேய் விஸ்வநாதா . . . உனக்கு ஒரு மியூஸிக் டைரக்டர் சான்ஸ் வந்திருக்கு . .

வண்டியில் ஏறு ...' ன்னாரு.

அந்த கார்லயே கீழ்ப்பாக்கத்துல இருந்த சந்திரா பிக்சர்ஸ்ல கொண்டு வந்து இறக்கினாங்க . இந்த கம்பெனி முதலாளி ஈச்சப்பன் . எம் . ஜி . ஆரை ( ஹீரோ ) வெச்சு ' ஜெனோவா ' படத்துக்கான ஆரம்பகட்ட வேலை நடந்துக்கிட்டிருந் தது . " இந்தப் படத்துக்கு மியூஸிக் போட முடியுமா ? " ன்னு கேட்ட ஈச்சப்பன் தொடர்ந்து , " உன்னைப் பத்தி எஸ் . எம் . ராஜா சொன்னாரு . படத்துக்கு இசையமைக்கிற முழு சான்ஸும் உனக்கே கொடுக்கிறோம் . பாட்டுக்கள் எங்களுக் குத் திருப்தியா இருந்தா வெச்சுப்போம் . . . இல்லேன்னா விலக்கிடுவோம் " னு கண்டிஷன் போட்டார் .

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

நான் இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கிட்டேன். ஒவ்வொரு நாளும் சுப்பராமன் அண்ணன் படங்களுக்கு வாசிச்சிட்டு , ராத்திரி ஒன்பது மணிக்கு மேல விடிய விடிய மாங்கு மாங்குனு ஜெனோவா ' படத்துக்கு டியூன் போடு வோம் . நான் போட்ட டியூன்கள் தயாரிப்பாளர் ஈச்சப்பன் , டைரக்டர் நாகூர் இவங்க எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு .

ஒரு நாள் ஜெனோவா ' படப் பாட்டு களை ரிக்கார்டிங் செய்ய சந்திரா பிக் சாஸ் ஆபீஸுக்குப் போனேன் .

அந்த நேரத்துல ஒரு போன்..." ஜெனோவா ' படத்துக்கு யார் இசையமைக்கப் போறாங்க ?" என்றது ஒரு குரல். கேட்டவர் ஹீரோ எம் . ஜி . ஆர் . !

"எம் . எஸ் . விஸ்வநாதன்னு ஒரு பையன் . நல்லா போடறான் . . " - ஈச்சப்பன் .

ஜூபிடர் ஆபீஸிலே காபி , டீ கொடுத்துக்கிட்டு புரொடக்ஷன்ல ஆபீஸ் பாயா நான் இருந்தது எம் . ஜி . ஆருக்குத் தெரியும் . அவருக்குக் கோபம் வந்து விட்டது . ' அவனுக்கு மியூஸிக்கைப் பத்தி என்ன தெரியும் ? " என்றார் எம் . ஜி . ஆர் . !

உடனே ஈச்சப்பன் எனக்கு ஆதரவாக மலையாளத்துல உரத்தக் குரல்ல எம் . ஜி . ஆருடன் ஏதோ சண்டை போடற மாதிரி பேசினாரு . டைரக்டர் நாகூர் என்னை ஓகேன்னுட்டாரு .

மளமளன்னு நாலைஞ்சு பாட்டுகளை கம்போஸ் பண்ணேன்.' நல்லா வந்திருக்குன்னு டி .கே.ராமமூர்த்தி, கோவர்த்தனம் எல்லாம் சுப்பராமன் அண்ணன்கிட்டே போய் சொன்னாங்க . உடனே என்னை வரச் சொல்லிக் கூப்பிட்டாரு .

" ரொம்ப சந்தோஷம்டா . . . இனிமே எனக்குக் கவலையில்லை . எனக்கு ஒரு அசோஸியேட் கிடைச்சுட்டான் . நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன் . இனிமே என்னோட வேலையையும் நீ பார்த்துக்க " ன்னு சொன்னார் .

.

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

கூடவே , ' டேய் . . . எனக்கு உடம்புக்குக் கொஞ்சம் முடியலை . நான் இப்போ பண்ணிக்கிட்டிருக்கிற தேவதாஸ் ' படத்துக்கு மூணு பாட்டுக்கள் கம்போஸ் பண்ணணும் . நீயே அந்த மூணு பாட்டுக்கும் இசையமைச்சிடு . நான் வரமாட்டேன் . என்னை எதிர்பார்க்காதே . " னு சொல்லிட்டு , " நீ ' ஜெனோவா ' படத்துக் குப் போட்ட பாட்டுகளைக் கேக்கனும் . சாயங்காலம் நாலு மணிக்கு ஏதாவது தியேட்டர் புக் பண்ணிட்டு என்கிட்ட சொல்லு . நான் வர்றேன் " என்றார் . அதே மாதிரி தியேட்டர் புக் பண்ணிட்டேன் .

மத்தியானம் பன்னிரண்டு மணி இருக்கும் . இன்னும் சில மணி நேரத்துல சுப்பராமன் அண்ணன் என் பாட்டுகளைக் கேக்கப் போறார் என்ற குஷி யோட வீட்டுல நான் இருந்தேன் . அப்போ எங்களோட ட்ரூப்பில் வாசிச்சிட்டிருந்த மாண்டலின் ராஜு " அண்ணே . . . சுப்பராமன் சார் இறந்து போய்ட்டாரு " ன்னு கத்திக்கிட்டே வந் தாரு . அந்த நியூஸைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன் . எனக்கு நம்பிக்கை நிழல் கொடுத்து ஆதரித்த ஆலமரம் சாய்ந்துவிட்டதேனு துடிச்சுப் போனேன் . காரியங்கள் எல்லாம் நடந்து முடிஞ்சு , அவர் இசையமைச்சுக்கிட்டிருந்த ' சொர்க்க வாசல் ' , ' தேவதாஸ் ' படங்கள் பாதியில் இருந்தன. அந்தப் படத்தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்தாங்க

Naan Oru Rasigan - M.S.Viswanathan
Naan Oru Rasigan - M.S.Viswanathan

"பாதியில் நிற்கிற அந்தப் படங்களை நீங்கதான் முடிச்சுக் கொடுக்கணும் னு கேட்டாங்க. நான் சொன்னேன் : " அவரோட ட்ரூப்பில அண்ணன் டி.கே. ராமமூர்த்தி என்னை விட சீனியர். நல்ல அனுபவசாலி. அவ ரோட சேர்ந்து வேணும்னா பண்றேன். இதுபத்தி அவர்கிட்ட பேசிட்டு முடிவைச் சொல்றேன்.'

ராமமூர்த்தி அண்ணனைச் சந்திச்சு எல்லாத்தையும் சொன்னேன். அவர் ஒரு கிரேட் மேன். இதைக் கேட்டதும், " விசு.. நீங்க கஷ்டப்பட்டு பாடுவீங்க. எனக்குப் பாட வராது. நீங்க நல்லா வாசிக்கிறீங்க . உங்களுக்குக் கற்பனை வளம் இருக்கு . உங்களுக்குச் சமமா என்னால உழைக்க முடியாது . நீங்க என்னடான்னா பாதி சம்பளம் எனக்குத் தரேங்கிறீங்க . என்ன நியாயம் அது ? என்னை வயலினிஸ்ட்டா வெச்சுக்குங்க . நான் கூட வாசிக்கிறேன்.." னு ரொம்பப் பணிவோட மறுத்தாரு . ஆனா, நான் விடாம " இந்திப் படவுலகில் சங்கர் - ஜெய்கிஷன் , லட்சுமி காந்த் - பியாரிலால் மாதிரி நாம் இணைஞ்சு பண்ணலாம் ' னு சொல்லி ராமமூர்த்தியை ஒப்புக்க வெச்சேன் சுப்பராமன் அண்ணன் விட்டுப்போன ' சண்டிராணி ' , ' சொர்க்க வாசல் " தேவதாஸ் ' எல்லாத்தையும் முடிச்சுக் கொடுத்தோம் .

நாங்க இணைஞ்ச பிறகு விஸ்வநாதன் - ராமமூர்த்தி'னு டைட்டில்ல இடம்பெற்ற முதல் படம் - 'பணம்' கலைவாணர் என். எஸ்.கே. தயாரிப்பாளர்; இந்தப் படத்துல நியாயமா என்னைவிடப் பெரியவரான ராமமூர்த்தி பெயரை முதலில் வைத்து,' ராமமூர்த்தி - விஸ்வநாதன்' அப்படீன்னுதான் போடணும்னு நான் பிடிவாதம் பிடிச்சேன்.

ஆனா என். எஸ்.கே. 'விஸ்வநாதன் - ராமமூர்த்தி' னுதான் வரணும். ' னு சொல்லி, அதுக்கு அவருக்கே உரிய நகைச்சுவையோட தந்த விளக்கம் . . .

(05.12.1993 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)